த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்

த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் என்பது அமெரிக்க நாட்டுத் திரைப்பட உருவாக்க ஒளிப்பட நிலையம் ஆகும்.[2] வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் நான்கு வணிக பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும்.

த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
வகைபிரிவு
நிறுவுகைஅக்டோபர் 16, 1923
தலைமையகம்பர்பேங்க், கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள்
வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
  • ஆலன் எஃப். ஹார்ன் (இணைத் தலைவர், தலைமை படைப்பாக்க அதிகாரி)
  • ஆலன் பெர்க்மேன் (இணைத் தலைவர்)
தொழில்துறைமகிழ்கலை
உற்பத்திகள்மோஷன் பிக்சர்ஸ், மியூசிக் பப்ளிஷிங், மேடை தயாரிப்புகள்
சேவைகள்திரைப்பட தயாரிப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விநியோகம்
தாய் நிறுவனம்வால்ட் டிஸ்னி நிறுவனம்
பிரிவுகள்
துணை நிறுவனங்கள்
[1]

இது ஐந்து பெரிய திரைப்பட உருவாக்க ஒளிப்பட நிலையங்களின் ஒன்றான நிலையம். இது கலிபோர்னியாவின் பர்பாங்கில் உள்ள வால்ட் டிஸ்னி ஸ்டுடியோவில் அமைந்துள்ளது.[3] 1923 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட நிலையங்களில் இது முக்கிய நான்காவது பழமையான நிலையம் ஆகும்.

வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் பிரிவுக்குள் முக்கிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ், வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ், பிக்ஸர், ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ், மார்வெல் ஸ்டுடியோ, லூகாஸ்பிலிம், 20ஆம் சென்சுரி பாக்ஸ் மற்றும் சர்ச்லைட் பிக்சர்ஸ் ஆகியவை அடங்கும். இந்த ஸ்டுடியோக்களால் தயாரிக்கப்பட்ட படங்கள் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் வெளியிட்டு விநியோகிக்கின்றன. 2019 ஆம் ஆண்டில் தி வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் உலகளாவிய மொத்த வருவாய் 13.2 பில்லியன் டாலர் தொழில் வசூல் சாதனையை பதிவு செய்தது.[4]

இந்த ஸ்டுடியோ உலகளாவிய உலகளாவிய மொத்த வருவா யில் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த முதல் பத்து படங்களில் ஆறு திரைப்படங்கள் இந்த திரைப்படத்தின் படங்கள் ஆகும். மற்றும் எல்லா காலத்திலும் அதிக வசூல் செய்த இரண்டு திரைப்பட உரிமைகளை இவ் நிறுவனம் கொண்டுள்ளது.

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு