பிளாக் விடோவ் (திரைப்படம்)
பிளாக் விடோவ் (ஆங்கில மொழி: black widow) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். மார்வெல் காமிக்ஸ் வரைகதையான பிளாக் விடோவ் என்ற பாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோ என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது.[1][2]
பிளாக் விடோவ் | |
---|---|
இயக்கம் | கேட் சோட்லண்ட் |
தயாரிப்பு | கேவின் பிகே |
திரைக்கதை | எரிக் பியர்சன் |
இசை | அலெக்சாண்டர் டெசுபிளாத் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | கேப்ரியல் பெரிஸ்டைன் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோ |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | சூன் 29, 2021(உலகளவில்) சூலை 9, 2021 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 134 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $200 மில்லியன் |
மொத்த வருவாய் | $ 379.6 மில்லியன் |
இந்த திரைப்படத்தை எரிக் பியர்சன் என்பவர் திரைக்கதை எழுத, கேட் சோட்லண்ட் இயக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹான்சன், புளோரன்சு புயூ, டேவிட் கார்பர், பாக்பென்லே, ஓல்கா குரிலென்கோ, வில்லியம் கேர்ட், ரே வின்ஸ்டோன், ரேச்சல் வய்ஸ் ஆகியோர் நடித்துள்ளார்கள். இது 2016 ஆம் ஆண்டில் வெளியான கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் திரைப்படத்திற்கு பிறகு அமைக்கப்பட்ட பிளாக் விடோவ்வின் கடந்த காலத்தை பற்றிய கதை[3]
பிளாக் விடோவ் படம் ஐக்கிய அமெரிக்காவில் ஜூலை 9, 2021 அன்று திரையரங்குகளிலும் மற்றும் டிஸ்னி+ மூலமும் ஆம் ஆண்டு வெளியானது. இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தில் முதல் படமாக உருவாக்கப்பட்டுள்ளது.
கதை சுருக்கம்
தொகுகேப்டன் அமெரிக்காவின் நிகழ்வுகளைத் தொடர்ந்து: உள்நாட்டுப் போர் (2016) நடாஷா ரோமனோஃப் தனியாக இருப்பதைக் காண்கிறார் மற்றும் அவரது கடந்த கால உறவுகளுடன் ஒரு ஆபத்தான சதியை எதிர்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். அவளை வீழ்த்துவதற்கு எதுவும் நிறுத்தாத ஒரு சக்தியால் பின்தொடரப்படும் ரோமனோஃப், ஒரு உளவாளியாக தனது வரலாற்றையும், அவள் ஒரு அவென்ஜராக ஆவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே விட்டுச் சென்ற உடைந்த உறவுகளையும் சமாளிக்க வேண்டும்.
நடிகர்கள்
தொகு- ஸ்கார்லெட் ஜோஹான்சன் - நடாஷா ரோமானோப் / பிளாக் விடோவ்
- ஒரு அவென்ஜர், கேஜிபியின் உயர் பயிற்சி பெற்ற வர் மற்றும் ஷீல்ட் இன் முன்னாள் உளவாளி.[4] இவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிகை மில்லா ஜோவோவிச் என்பவர் நடித்துள்ளார்.[5]
- புளோரன்சு புயூ - யெலெனா பெலோவா / பிளாக் விடோவ்
- டேவிட் கார்பர் - அலெக்ஸி ஷோஸ்டகோவ் / ரெட் கார்டியன்
- ரஷியன் நாட்டு சிறந்த சிப்பாய் மற்றும் நடாஷா மற்றும் யெலெனாவின் தந்தை.[9]
- பாக்பென்லே - ரிக் மேசன்
- வில்லியம் கேர்ட் - தண்டர்போல்ட் ரோஸ்[10]
- ரே வின்ஸ்டோன் - ட்ரேகோவ்: சிவப்பு அறையின் தலைவர்[11]
- ரேச்சல் வய்ஸ் - மெலினா வோஸ்டோகாப் / பிளாக் விடோவ்
மேற்கோள்கள்
தொகு- ↑ "Lions Gate & Marvel Sign Iron Fist & Black Widow Deal". Superhero Hype!. February 26, 2004. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
- ↑ Weinberg, Scott (June 6, 2006). "Lionsgate Squashes the "Black Widow"". Rotten Tomatoes. Archived from the original on December 4, 2012. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
- ↑ "David Hayter to Direct The Black Widow!". Superhero Hype!. April 28, 2004. Archived from the original on September 22, 2015. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
- ↑ Melrose, Kevin (November 17, 2011). "David Hayter Recalls Details of Abandoned Black Widow Movie". Comic Book Resources. Archived from the original on September 26, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
- ↑ Moore, Roger (February 25, 2009). "Emily Blunt on losing Black Widow...". The Orlando Sentinel இம் மூலத்தில் இருந்து ஜூன் 11, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120611011158/http://blogs.orlandosentinel.com/entertainment_movies_blog/2009/02/emily-blunt-on-losing-black-widow.html.
- ↑ Finke, Nikki (March 11, 2009). "Another 'Iron Man 2' Deal: Scarlett Johannson To Replace Emily Blunt As Black Widow For Lousy Lowball Money". Deadline Hollywood இம் மூலத்தில் இருந்து August 29, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120829201759/http://www.deadline.com/2009/03/another-iron-man-2-exclusive-scarlett-johannson-will-replace-emily-blunt-in-iron-man-2/.
- ↑ "Marvel-ous Star Wattage: Actors Assemble For Comic-Con Panel Including 'The Avengers', 'Captain America', & 'Thor". Deadline Hollywood. July 24, 2010. Archived from the original on July 5, 2011. பார்க்கப்பட்ட நாள் July 25, 2010.
- ↑ Fleming Jr., Mike (October 2, 2012). "Five Actresses Testing For 'Captain America 2′ Role; Black Widow Might Drop By As Well". Deadline Hollywood. Archived from the original on October 4, 2012. பார்க்கப்பட்ட நாள் October 2, 2012.
- ↑ Maresca, Rachel (September 29, 2013). "Scarlett Johansson flaunts curves in new magazine photo shoot, reveals details on 'The Avengers' sequel". New York Daily News. Archived from the original on September 29, 2013. பார்க்கப்பட்ட நாள் September 29, 2013.
- ↑ Keyes, Rob (April 2014). "Captain America 2 Interview: Scarlett Johansson Talks 'Black Widow' Solo Film". Screen Rant. Archived from the original on July 27, 2014. பார்க்கப்பட்ட நாள் July 26, 2014.
- ↑ Robinson, Joanna (August 21, 2014). "Game of Thrones Big-Battle Director Neil Marshall Either Wants to Direct a Black Widow Movie or Unleash Those Dragons". Vanity Fair. Archived from the original on August 26, 2014. பார்க்கப்பட்ட நாள் August 25, 2014.
- ↑ Arrant, Chris (January 15, 2015). "Captain America: Civil War Directors: Black Widow Will Be Back, More". Newsarama. Archived from the original on January 19, 2015. பார்க்கப்பட்ட நாள் January 15, 2015.
- ↑ Chitwood, Adam (April 15, 2015). "BLACK WIDOW Movie: Scarlett Johansson and Kevin Feige Have Discussed a Series of Films". Collider. Archived from the original on April 16, 2015. பார்க்கப்பட்ட நாள் April 17, 2015.
- ↑ Davis, Erik (April 11, 2016). "Here's When We'll Know Who's Starring in And Directing Marvel's 'Captain Marvel' Movie". Fandango. Archived from the original on April 13, 2016. பார்க்கப்பட்ட நாள் April 11, 2016.