ஓல்கா குரிலென்கோ

ஓல்கா கான்ஸ்டான்டினோவ்னா குரிலென்கோ (ஆங்கில மொழி: Olga Konstantinovna Kurylenko) (பிறப்பு: 14 நவம்பர் 1979) என்பவர் உக்ரேனிய - பிரான்சு நாட்டு நடிகை மற்றும் வடிவழகி ஆவார்.[1][2] இவர் தனது 13 வயதில் வடிவழகியாக அறிமுகமானார், அதை தொடர்ந்து தனது 16 வயதில் வடிவழகி தொழிலைத் தொடர பிரான்சு நாட்டிற்கு சென்றார்,[3] மற்றும் 2005 இல் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.

ஓல்கா குரிலென்கோ
பிறப்புஓல்கா கான்ஸ்டான்டினோவ்னா குரிலென்கோ
14 நவம்பர் 1979 (1979-11-14) (அகவை 44)
பெர்டியன்ஸ்க், உக்ரேனிய சோவியத் சோசலிச குடியரசு, சோவியத் ஒன்றியம் (இப்போது உக்ரைன்)
தொழில்நடிகை, வடிவழகி
வாழ்க்கை துணை
 • செட்ரிக் வான் மோல்
  (தி. 2000; ம.மு. 2004)
 • டாமியன் கேப்ரியல்
  (தி. 2006; ம.மு. 2007)

இவர் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான ஹிட்மேன் என்ற படத்தில் நிகா போரோனினாவாக நடித்ததற்காக அவர் ஒரு நடிகையாக வெற்றியைக் கண்டார். பின்னர் ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 2008 ஆம் ஆண்டு வெளியான குவாண்டம் ஆஃப் சோலஸ்[4] என்ற படத்திலும் டு தி ஒண்டெர் (2012), ஒபிலிவின் (2013), மொமெண்ட்டும் (2015), த ரூம் (2019) மற்றும் 2021 ஆம் ஆண்டு வெளியான மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படமான பிளாக் விடோவ்[5][6] போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

 1. Revealed: Cruise nearly killed while filming in Iceland - Icenews, 12 April 2013
 2. "Olga Kurylenko Facts Britannica". Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 25 September 2021.
 3. Oblivion's "Olga Kurylenko" பரணிடப்பட்டது 2014-10-17 at the வந்தவழி இயந்திரம், Los Angeles Confidential magazine (2013)
 4. "New Bond film title is confirmed". BBC News. 24 January 2008. http://news.bbc.co.uk/2/hi/entertainment/7206997.stm. 
 5. "Black Widow ending explained: What happens next?". Radio Times (in ஆங்கிலம்). 2021-07-07. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.
 6. "Black Widow's ending reveals who Taskmaster is". GameRevolution. 2021-07-08. பார்க்கப்பட்ட நாள் 2021-07-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓல்கா_குரிலென்கோ&oldid=3859731" இலிருந்து மீள்விக்கப்பட்டது