சீ-ஹல்க் (தொலைக்காட்சித் தொடர்)

சீ-ஹல்க் (ஆங்கில மொழி: She-Hulk) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு நகைச்சுவை சட்ட மீநாயகன் தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடர் சீ-ஹல்க் என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[2][3] என்ற ஓடிடி தளத்திற்காக ஜெசிகா காவ் என்பவர் உருவாக்கியுள்ளார்.

சீ-ஹல்க்
வகை
உருவாக்கம்ஜெசிகா காவ்
மூலம்
சீ-ஹல்க்
படைத்தவர்
நடிப்பு
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
அத்தியாயங்கள்9
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
  • கேவின் பிகே[1]
  • லூயிஸ் டி எஸ்போசிட்டோ
  • விக்டோரியா அலோன்சோ
  • கேட் கொய்ரோ
  • ஜெசிகா காவ்
  • பிராட் விண்டர்பாம்
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுபுளோரியன் பால்ஹாஸ்
ஓட்டம்30-38 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்ஆகத்து 18, 2022 (2022-08-18) –
அக்டோபர் 13, 2022 (2022-10-13)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடரை மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகை டாட்டியானா மஸ்லானி[4] என்பவர் மார்க் இசுபெக்டர் மற்றும் சீ-ஹல்க் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்க, இவருடன் இணைந்து மார்க் ருஃப்பால்லோ,[5][6] டிம் ரோத், இஞ்சி கோன்சாகா,[7] ரெனீ எலிஸ் கோல்ட்ஸ்பெர்ரி, ஜமீலா ஜெமீல் போன்ற பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் பற்றிய தகவல் ஆகஸ்ட் 2019 இல் அறிவிக்கப்பட்டது, நவம்பரில் ஜெசிகா காவ் பணியமர்த்தப்பட்டார். பின்னர் கேட் கொய்ரோ செப்டம்பர் 2020 இல் பல அத்தியாயங்களை இயக்க இணைந்தார், மேலும் நடிகை டாட்டியானா மஸ்லானி என்பவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து டிசம்பரில் நடிகர்களான மார்க் ருஃப்பால்லோ மற்றும் டிம் ரோத் ஆகியோர் இணைந்தனர், மேலும் இயக்குனரான அனு வாலியா என்பவர் ஒருத்தி செய்யப்பட்டார். ஏப்ரல் 2021 நடுப்பகுதியில் லாஸ் ஏஞ்சலஸ் மற்றும் அட்லான்டாவில் படப்பிடிப்பு தொடங்கி ஆகஸ்ட் இறுதி வரை நீடித்தது.[8]

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக 18 ஆகஸ்ட் 2022 முதல் 13 அக்டோபர் வரை ஒளிபரப்பாகி, ஒன்பது அத்தியாயங்களுடன் நிறைவுபெற்றது. இந்தத் தொடர் பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது, குறிப்பாக டாட்டியானா மஸ்லானின் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது, இருப்பினும் தொடரின் விசுவல் காட்சிகளுக்கு எதிர்மறையான விமர்சனம் பெற்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. Kim, Matt T.M. (February 24, 2021). "Kevin Feige Shares Updates on Ms. Marvel, Moon Knight, and More Disney Plus Series". IGN. Archived from the original on February 24, 2021. பார்க்கப்பட்ட நாள் February 24, 2021.
  2. Couch, Aaron (August 23, 2019). "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'". The Hollywood Reporter. Archived from the original on August 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 23, 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  3. Kit, Borys (November 8, 2019). "Marvel's 'She-Hulk' Finds Its Head Writer With 'Rick and Morty' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 8, 2019.
  4. Gelman, Samuel (December 10, 2020). "Tatiana Maslany IS Marvel's She-Hulk, Ruffalo, Roth Join Cast". Comic Book Resources. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  5. "Mark Ruffalo Wouldn't Mind if the Hulk Has a Cameo in She-Hulk". People. November 14, 2019. Archived from the original on November 17, 2019. பார்க்கப்பட்ட நாள் November 17, 2019.
  6. McMillan, Graeme (March 2, 2020). "Mark Ruffalo Teases Disney+ 'She-Hulk' Appearance". The Hollywood Reporter. Archived from the original on March 2, 2020. பார்க்கப்பட்ட நாள் March 3, 2020.
  7. Andreeva, Nellie (January 19, 2021). "'She-Hulk': Ginger Gonzaga Joins Disney+ Marvel Series". Deadline Hollywood. Archived from the original on January 19, 2021. பார்க்கப்பட்ட நாள் January 19, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  8. Ho, Rodney (March 3, 2021). "Next Marvel series on Disney+ shooting in Atlanta: "She-Hulk" starring Tatiana Maslany". The Atlanta Journal-Constitution. Archived from the original on March 18, 2021. பார்க்கப்பட்ட நாள் March 20, 2021.

வெளிப்புற இணைப்புகள்

தொகு