மல்டிவர்சு (மார்வெல் திரைப் பிரபஞ்சம்)
மல்டிவர்சு அல்லது பல்லண்டம் என்பது மார்வெல் திரைப் பிரபஞ்ச ஊடக உரிமையில் ஒரு கற்பனையான அமைப்பாகும். இது மார்வெல் காமிக்ஸில் இருந்த அதே பெயரை அடிப்படையாகக் கொண்ட எண்ணற்ற பல மாற்று யதார்த்தங்கள் மற்றும் பரிமாணங்களின் தொகுப்பாகும். இதன் முதல் தொடக்கம் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016) என்ற திரைப்படத்தில் இருந்து தொடங்குகின்றது, இது "தி மல்டிவர்சு சகா" வில் அடங்கிய நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
மல்டிவர்சு (மார்வெல் திரைப் பிரபஞ்சம்) | |
---|---|
Marvel Cinematic Universe அமைவிடம் | |
பகுப்பு | மீநாயகன் புனைகதை |
வகை | பல்லண்டம் |
முதற் தோற்றம் | டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் (2016) |
இந்த சகா விமர்சகர்களிடமிருந்து கலவையான பதிலைப் பெற்றது, அதன் காட்சியமைப்பு மற்றும் ஆர்வம் ஆகியவற்றிற்காக பாராட்டப்பட்டது, அத்துடன் மார்வல் திரைப் பிரபஞ்சம் அல்லாத மார்வெல் படங்களின் கதாபாத்திரங்களின் ஒருங்கிணைப்பு பார்வையாளர்கள் மற்றும் வர்ணனையாளர்களிடையே ஊகத்தையும் விவாதத்தையும் உருவாக்கியுள்ளது.
கருத்து மற்றும் உருவாக்கம்
தொகுமல்டிவர்சு முதன்முதலில் 1960 மற்றும் 1970 களில் வெளியான மார்வெல் வரைகதைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1962 இல் வெளியான ஸ்ட்ரேஞ்சர் டைல்ஸ் #103 என்ற கதையில் பென்டாஸ்டிக் போரின் ஜானி ஸ்டார்ம் என்ற கதாபாத்திரம் மார்வெல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்று யதார்த்தத்திற்கு டெலிபோர்ட் செய்யப்பட்டது, அந்தக் கதாபாத்திரம் ஐந்தாவது பரிமாணத்திற்கு அனுப்பப்பட்டது (பின்னர் பூமி-1612 என நியமிக்கப்பட்டது).[1] இந்த மல்டிவர்சு பற்றிய தெளிவான விளக்கம் வாட் இப்...? #1 (1977) மற்றும் மார்வெல் டூ-இன்-ஒன் #50 (1979) போன்ற கதைகளில் விரிவாக கூறப்பட்டது. வரைகதைகளில் இடம்பெற்றுள்ள முக்கிய உண்மை என்றால் 1983 இல் வெளியான த டேர்டெவில்ஸ் #7[2] என்ற கதையில் பூமியை வேறுபட்டு காட்டுவதற்காக எர்த்-616 என்று கேப்டன் பிரிட்டன் படைப்பாளி டேவிட் தோர்ப்பால் பெயரிடப்பட்டது.[3][4]
2008 ஆம் ஆண்டில், மார்வெல் திரைப் பிரபஞ்ச உரிமையின் கீழ் என்ற அயன் மேன் திரைப்படம் வெளியிடப்பட்டது.[5] அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சம் இருப்பதாக லோகி, க்வென்பூல் மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் ஆகிய வரைகதை கதாபாத்திரங்கள் அறிந்திருப்பதாகக் வரைகதைகளில் காட்டப்பட்டுள்ளது.[6][7][8] மற்றும் 2016 ஆம் ஆண்டு வெளியானடாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் மூலம் மல்டிவர்சு அறிமுகப்படுத்தப்பட்டது, இதை பற்றி இயக்குனர் இசுகாட் டெரிக்சன் கூறுகையில் "மார்வெல் காமிக் புத்தக பிரபஞ்சத்தை மார்வெல் மல்டிவர்ஸில் உடைத்துவிட்டது" என்று குறிப்பிட்டார்.[9] அந்த நேரத்தில், தயாரிப்பாளரும் மார்வெல் ஸ்டுடியோசு தலைவருமான கேவின் பிகே வரைகதையில் இடம்பெற்றுள்ளதைப் போன்ற இணையான பிரபஞ்சங்களை ஆராயும் திட்டம் எதுவும் இல்லை என்றும், அதற்குப் பதிலாக பல்வேறு "அன்னிய பரிமாணங்களை" படம் ஆராய்வதாகவும் கூறினார்.[10]
2019 இல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படத்தில் மல்டிவர்சு பற்றி மறுபரிசீலனை செய்யப்பட்டது, இதில் அவெஞ்சர்ஸ் ஒரு "டைம் ஹீஸ்ட் (நேரப் பயணம்)" இன் ஒரு பகுதியாக நான்கு மாற்று காலக்கெடுவிற்கு பயணம் செய்கிறார்கள்.[11] இது லோகியின் மாற்று பதிப்பு 2012 நியூயார்க்கில் இருந்து தப்பிப்பது டிஸ்னி+ தொடரான லோகியின் (2021) முதல் பருவத்தில் இணைகிறது.[12][13] மார்வெல் திரைப் பிரபஞ்சம்: நான்காம் கட்டத்தில் மல்டிவர்சு முக்கிய பங்கு வகிக்கிறது, குறிப்பாக லோகியின் முதல் பருவம்,[14] டிஸ்னி+ தொடரின் முதல் மற்றும் இரண்டாவது பருவம் வாட் இப்...? (2021 & 2023),[15][16] திரைப்படங்களான இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்[17] (2021) மற்றும் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ்[18] (2022) போன்றவை ஆகும்.
மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டம், ஐந்தாம் கட்டம் மற்றும் ஆறாம் கட்டம் ஆகியவை "தி மல்டிவர்சு சகா" வை உள்ளடக்கும், இது அவெஞ்சர்ஸ்: தி காங் டியன்ஸ்ட்டி (2025) மற்றும் அவெஞ்சர்ஸ்: சீக்ரெட் வார்ஸ் (2025) ஆகிய படங்களுடன் முடிவடையும்.[19]
மேற்கோள்கள்
தொகு- ↑ Marston, George (July 20, 2021). "How the Marvel Universe became "Earth-616" and grew into an entire Multiverse". Newsarama. Archived from the original on July 20, 2021. பார்க்கப்பட்ட நாள் May 17, 2022.
- ↑ McMillan, Graeme (November 15, 2014). "Worlds Collide: A History of Marvel and DC's Multiverses". The Hollywood Reporter. Archived from the original on August 11, 2021. பார்க்கப்பட்ட நாள் May 17, 2022.
- ↑ Dyce, Andre (September 13, 2019). "Why Marvel's Universe is Called '616' in The Comics". Screen Rant. Archived from the original on September 22, 2019. பார்க்கப்பட்ட நாள் May 17, 2022.
- ↑ Frevele, Jamie (November 19, 2020). "The Origin Story of Earth-616 As Told by Its Creator, Writer David Thorpe". Marvel.com. Archived from the original on November 21, 2020. பார்க்கப்பட்ட நாள் May 17, 2022.
- ↑ Douglas, Edward (April 25, 2010). "Exclusive: Marvel Studios Production Head Kevin Feige". Superhero Hype. Archived from the original on May 26, 2010. பார்க்கப்பட்ட நாள் March 31, 2013.
- ↑ Phelan, Kevin (July 21, 2020). "Marvel's Doctor Strange Approves of His MCU Casting". Screen Rant. Archived from the original on November 17, 2020. பார்க்கப்பட்ட நாள் November 4, 2021.
- ↑ McGuire, Liam (July 31, 2020). "Marvel Comics Makes Natalie Portman's MCU Thor Meta-Canon". Screen Rant. Archived from the original on December 30, 2020. பார்க்கப்பட்ட நாள் November 4, 2021.
- ↑ Whitbrook, James (May 8, 2019). "A New Spider-Man: Far From Home Clip Has Some Very Intriguing Teases About the Multiverse". io9. Archived from the original on May 8, 2019. பார்க்கப்பட்ட நாள் May 8, 2019.
- ↑ Davis, Brandon (July 24, 2016). "Scott Derrickson Says Doctor Strange Starts The Marvel Cinematic Multiverse". ComicBook.com. Archived from the original on July 25, 2016. பார்க்கப்பட்ட நாள் July 24, 2016.
- ↑ Sciretta, Peter (September 27, 2016). "Kevin Feige on How 'Doctor Strange' Will Change The Marvel Universe [On Set Interview]". /Film. Archived from the original on September 30, 2016. பார்க்கப்பட்ட நாள் September 27, 2016.
- ↑ Leadbeater, Alex (April 26, 2019). "Avengers: Endgame's Time Travel Explained (Properly)". Screen Rant. Archived from the original on April 26, 2019. பார்க்கப்பட்ட நாள் November 4, 2021.
- ↑ Sandwell, Ian (July 21, 2019). "Marvel finally confirm Phase 4 movies at Comic-Con". Digital Spy. Archived from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 21, 2019.
- ↑ Davis, Brandon (May 15, 2019). "How Loki's New Timeline Plays Out After Avengers: Endgame". ComicBook.com. Archived from the original on May 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 19, 2022.
- ↑ Hunt, James (June 8, 2021). "Where Loki Fits Into The MCU Timeline". Screen Rant. Archived from the original on June 10, 2021. பார்க்கப்பட்ட நாள் June 9, 2021.
- ↑ D'Alessandro, Anthony (August 1, 2021). "'What If...?' Actor Jeffrey Wright On Chadwick Boseman's Final "Mythic" Turn As T'Challa In MCU". Deadline Hollywood. Archived from the original on August 1, 2021. பார்க்கப்பட்ட நாள் August 1, 2021.
- ↑ Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. Archived from the original on November 12, 2021. பார்க்கப்பட்ட நாள் November 12, 2021.
- ↑ Debruge, Peter (December 13, 2021). "'Spider-Man: No Way Home' Review: Tom Holland Cleans Out the Cobwebs of Sprawling Franchise With Multiverse Super-Battle". Variety. Archived from the original on December 14, 2021. பார்க்கப்பட்ட நாள் December 14, 2021.
- ↑ Schwerdtfeger, Conner (January 29, 2022). "Doctor Strange 2 Synopsis Confirms Alternate Realities". Screen Rant. Archived from the original on January 30, 2022. பார்க்கப்பட்ட நாள் January 30, 2022.
- ↑ Vary, Adam B. (July 23, 2022). "Marvel Studios' Phases 5 and 6: Everything We Learned at Comic-Con About the Multiverse Saga". Variety. Archived from the original on July 24, 2022. பார்க்கப்பட்ட நாள் July 24, 2022.