பல்லண்டம்[1] என்பது நாம் வாழும் அண்டம் உட்பட பல அண்டங்களை உள்ளடக்கிய ஒரு அனுமான குழுமம் ஆகும். மொத்தமாக இவையனைத்து அண்டங்களும் சேர்ந்து பரவெளி, காலம், பொருள், ஆற்றல், இயற்பியல் விதிகள் மற்றும் மாறிலிகளையும் உள்ளிட்ட யாவையும் அவற்றை விளக்கும் பிறவற்றையும்[2][3][4][5] தம்முள் அடக்கியுள்ளது. பல்லண்டத்தினுள் காணப்படும் பல்வேறு அண்டங்கள் "இணை அண்டங்கள்", "பிற அண்டங்கள்", அல்லது "மாற்று அண்டங்கள்" என்று அழைக்கப்படும்.[6][7][8]

கருத்துருவாக்க வரலாறு தொகு

1952 ஆம் ஆண்டில் டப்ளினில் எர்வின் ஸ்ராபிங்கர் ஒரு வழங்கிய விரிவுரையில், அவ்வுரை அவையோருக்கு முட்டாள்தனமாகத் தோன்றலாம் என்று கேளிக்கையாக எச்சரித்தார். அவரது சமன்பாடுகள் பல வேறுபட்ட வரலாற்றை விவரிப்பதாகத் தோன்றினும், அவை அனைத்தும் "மாறுபட்டவைகளாக அல்லாமல், உடனிகழ்வுகளாக அமைவன" என்று கூறினார்.[9]

அமெரிக்க தத்துவஞானியும் உளவியலாளருமான வில்லியம் ஜேம்ஸ் 1895 ஆம் ஆண்டில் "multiverse" என்ற சொல்லை வேறு (பன்முகத்தன்மை) பொருட்சூழலில் பயன்படுத்தினார்.[10] 1963 சாகச நாவலான தி சுண்டெர்ட்ட்ட் வேர்ல்ட்ஸ் இல் மைக்கேல் மூர்க்காக் multiverse என்ற சொல்லை அதன் தற்போதைய இயற்பியல் பொருளில் முதன்முதலாகப் பயன்படுத்தினார் .

சுருக்கமான விளக்கம் தொகு

பல்லண்டங்களை அண்டவியல் , இயற்பியல் , வானியல் , மதம் , தத்துவம் , டிரான்ஸ்பெர்சனல் உளவியல் மற்றும் இலக்கியம் , குறிப்பாக விஞ்ஞான புனைவு ஆகியவற்றில் புனையப்பட்டுள்ளன. இப்பொருட் சூழல்களில், பல்லண்டங்கள் "மாற்று அண்டங்கள்", "குவாண்டம் அண்டங்கள்", "இடைநிலை பரிமாணங்கள்", "இணையான பரிமாணங்கள்", "இணையான பரிமாணங்கள்", "இணையான உலகங்கள்", "இணை மெய்ம்மைகள்", "குவாண்டம் மெய்ம்மைகள்", "மாற்று மெய்ம்மைகள்", "மாற்று காலவோட்டங்கள்","மாற்று பரிமாணங்கள்"மற்றும் "பரிமாண விமானங்கள் " என்றும் வழங்கப்படுகின்றன.

சான்று தேடல் தொகு

2010 ஆம் ஆண்டில், ஸ்டீபன் எம்.பீய்னி போன்ற விஞ்ஞானிகள் வில்கின்சன் மைக்ரோவேவ் அனிசோட்ரோபி ஆய்வுகோல் (WMAP) தரவை பகுப்பாய்வு செய்து கடந்த காலத்தில் பிற (இணை) அண்டங்களுடன் நமது அண்டம் மோதிக் கொண்டதற்கான சான்றுகளைக் கண்டதாகக் கூறுகின்றனர்.[11][12][13] இருப்பினும், WMAP மற்றும் WMAP ஐ விட 3 மடங்கு அதிகமான பிரிதிறன் கொண்டிருக்கும் பிளாங்க் செயற்கைக்கோள் ஆகியவற்றில் இருந்து பெற்றத் தரவுகளை விரிவான பகுப்பாய்வு செய்கையில், அத்தகைய குமிழி பிரபஞ்ச மோதலை உறுதி செய்யும் குறிப்பிடத்தக்க சான்றுகள் ஏதும் தென்படவில்லை.[14][15] மேலும், நம் அண்டத்தின் மீது பிற அண்டங்களின் ஈர்ப்பு விசைக்கு எந்த சான்றும் கிடைக்கவில்லை.[16][17]

ஆதரிப்போரும் எதிர்ப்போரும் தொகு

பல்லண்டத்தின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கருதுகோள்களின் ஆதரவாளர்களுள் ஹூக் எவரெட்,[18] பிரையன் கிரீன் ,[19][20] மாக்சு டெக்மார்க் ,[21] ஆலன் கத் ,[22] ஆந்திரேய் இலிந்தே,[23] மிசியோ காகு,[24] டேவிட் டியூச்சு ,[25] லியோனார்டு சஸ்கைண்ட் ,[26] அலெக்சாந்தர் விலென்கின்,[27] யசுநோரி நோமூரா ,[28] ராஜ் பாத்ரியா ,[29] லாரா மெர்ஸினி-ஹாட்டன் ,[30][31] நீல் டிகிராஸ் டைசன் ,[32] லாரன்ஸ் க்ராஸ் , சீன் கரோல் [33] ஸ்டீபன் ஹாக்கிங் உள்ளிட்டோர் அடக்கம்.[34]

பொதுவாக பல்லண்டத்தின் கருதுகோள்களைச் சந்தேகிக்கும் விஞ்ஞானிகள் பின்வருமாறு: டேவிட் கிராஸ்,[35] பவுல் இஸ்டெயின்ஹார்ட்,[36][37] அண்ணா இஜாசு,[37] ஆபிரகாம் லோப் ,[37] டேவிட் இஸ்பர்ஜல் ,[38] நீல் உடுரோக் ,[39] வியாச்செஸ்லாவ் முக்கநோவ்,[39] மைக்கேல் எஸ் டர்னர் ,[40] ரோஜர் பென்ரோஸ் ,[41] ஜார்ஜ் எல்லிஸ் ,[42][43] ஜோ சில்க் ,[44] கார்லோ உரோவெல்லி ,[45] ஆடம் பிராங்க் ,[38] மார்சிலோ கிலேய்ஸர்,[38] ஜிம் பக்காட் [35] மற்றும் பால் டேவிஸ் .[38]

வகைப்படுத்தல் முறைகள் தொகு

மேக்ஸ் டெக்மார்க், பிரையன் க்ரீன் ஆகியோர், பல்லண்டங்களுக்கும் அவற்றுள் இடம்பெறக்கூடிய அண்டங்களுகுமான பல்வேறு கோட்பாட்டு வகைப்பாட்டு முறைகளை வடிவமைத்துள்ளனர்.

மேக்ஸ் டெக்மார்க்கின் நான்கு நிலைகள் தொகு

அண்டவியலாளரான மேக்ஸ் டெக்மார்க், நாம் நன்கு அறிந்த காட்சிக்கெட்டும் பேரண்டத்திற்கு அப்பால் இருக்கும் பேரண்டங்களுக்கான ஒரு வகைபிரிப்பை வழங்கியுள்ளார். டெக்மார்க் வகைப்பாட்டின் நான்கு நிலைகளின் ஒவ்வொரு நிலையும் முந்தைய நிலைகளின்மேல் விரிந்து அவற்றை உள்ளடக்குவதாக அமைவதாகப் புரிந்து கொள்ளலாம். அவை கீழே சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ளன.[46][47]

நிலை I: நமது அண்டத்தின் நீட்சி தொகு

நிலை II: மாறுபட்ட இயற்பியல் மாறிலிகளை கொண்ட அண்டங்கள் தொகு

 
குமிழி அண்டங்கள் - ஒவ்வொரு வட்டு ஒரு குமிழி அண்டத்தைக் குறிக்கிறது. இவ்வட்டுகளில் நம் அண்டமும் ஒன்று.
அண்டம் 1 முதல் 6-உம் குமிழி அண்டங்களைக் குறிக்கின்றன. அவற்றில் ஐந்து நம் அண்டத்தினும் மாறுபட்ட மாறிலிகளைக் கொண்டுள்ளன.

நிலை III: குவாண்டம் இயக்கவியலின் பல்லுலகக் கருத்து விளக்கம் தொகு

நிலை IV: மூலக் குழுமம் தொகு

பிரையன் கிரீனின் ஒன்பது வகைகள் தொகு

அமெரிக்க கோட்பாட்டு இயற்பியலாளரும் சரக் கோட்பாட்டு அறிஞருமான பிரையன் கிரீன் ஒன்பது வகை பல்லண்டங்களை வகுத்துள்ளார்:[48]

கிடத்தப்பட்டவை தொகு

குமிழிகள் தொகு

உயர் பரிமாண சவ்வு (பிரேன்) தொகு

சுழற்சி தொகு

பரப்பு தொகு

துளிமம் தொகு

ஒளிப்படம் தொகு

பாவித்தவை தொகு

மூலம் தொகு

சுழற்சி கோட்பாடுகள் தொகு

பல கோட்பாடுகளில், எண்ணற்ற தன்னிறைவுள்ள சுழற்சித் தொடர்கள் உள்ளன (உதாரணமாக, பெரு வெடிப்பு , பெரும் அண்டக் குழைவு, பெரும் அண்ட உறைதல் ஆகியவற்றின் ஒன்றொ பலவோ அனைத்துமோ சந்திக்கும் நித்திய சுழற்சி).

மேலும் காண்க தொகு

சான்றாதாரங்கள் தொகு

  1. லாஸ்லோ, Kevin David Thomas (2003).

    இந்த Cennectivity கருதுகோள்: Fountations ஒரு ஒருங்கிணைந்த அறிவியல் குவாண்டம், பிரபஞ்சம், வாழ்க்கை, மற்றும் உணர்வு, பி.108. நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம், பத்திரிகை, அல்பேனி.

  2. James, William, The Will to Believe, 1895; and earlier in 1895, as cited in OED's new 2003 entry for "multiverse": James, William (October 1895), "Is Life Worth Living?", Internat. Jrnl. Ethics, p. 10, doi:10.1086/205378, Visible nature is all plasticity and indifference, a multiverse, as one might call it, and not a universe.
  3. "Astronomers Find First Evidence Of Other Universe". technologyreview.com. 13 December 2010. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
  4. "The Case for Parallel Universes". 19 July 2011. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
  5. "Is Our Universe Inside a Bubble? First Observational Test of the 'Multiverse'". Science Daily. sciencedaily.com. 3 Aug 2011. பார்க்கப்பட்ட நாள் 12 October 2013.
  6. First observational tests of eternal inflation: Analysis methods and WMAP 7-year results. 2011. 
  7. First observational tests of eternal inflation. 2011. . Inflation after False Vacuum Decay: Observational Prospects after Planck. 2013. 
  8. Planck intermediate results. XIII. Constraints on peculiar velocities. 2013-03-20. 
  9. "Blow for 'dark flow' in Planck's new view of the cosmos". New Scientist. 3 April 2013. https://www.newscientist.com/article/dn23340-blow-for-dark-flow-in-plancks-new-view-of-the-cosmos. பார்த்த நாள்: 10 March 2014. 
  10. பல உலகங்கள் ஹக் எவெரெட் , அறிவியல் அமெரிக்கன்
  11. Greene, Brian. Interview with Terry Gross. A Physicist Explains Why Parallel Universes May Exist. 24 January 2011. Archived from the original on 13 September 2014. Retrieved on 12 September 2014.
  12. Greene, Brian. Interview with Terry Gross. Transcript:A Physicist Explains Why Parallel Universes May Exist. 24 January 2011. Archived from the original on 13 September 2014. Retrieved on 12 September 2014.
  13. Parallel Universes.  Tegmark, M (May 2003). "Parallel universes. Not just a staple of science fiction, other universes are a direct implication of cosmological observations". Scientific American. Vol. 288. pp. 40–51. arXiv:astro-ph/0302131. Bibcode:2003SciAm.288e..40T. doi:10.1038/scientificamerican0503-40. PMID 12701329.
  14. "Alan Guth: Inflationary Cosmology: Is Our Universe Part of a Multiverse?". YouTube. பார்க்கப்பட்ட நாள் 6 October 2014.
  15. "Inflation in Supergravity and String Theory: Brief History of the Multiverse" (PDF). ctc.cam.ac.uk. பார்க்கப்பட்ட நாள் 13 September 2014.
  16. David Deutsch (1997). "The Ends of the Universe". The Fabric of Reality: The Science of Parallel Universes—and Its Implications. London: Penguin Press. ISBN 0-7139-9061-9.
  17. Multiverse interpretation of quantum mechanics. 
  18. Many Worlds in One: The Search for Other Universes. https://books.google.com/books/about/Many_Worlds_in_One.html?id=9nRGwQnvGx0C. 
  19. Physical theories, eternal inflation, and the quantum universe. 
  20. The Universe as a Black Hole. 
  21. "Weird data suggests something big beyond the edge of the universe". Cosmos. Archived from the original on 14 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  22. "Planck Space Data Yields Evidence of Universes Beyond Our Own". International Business Times. பார்க்கப்பட்ட நாள் 27 July 2014.
  23. "Why Revive 'Cosmos?' Neil DeGrasse Tyson Says Just About Everything We Know Has Changed". huffingtonpost.com. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
  24. "Welcome to the Multiverse". Discover. பார்க்கப்பட்ட நாள் 5 May 2015.
  25. Universe or Multiverse. 
  26. 35.0 35.1 .  பிழை காட்டு: Invalid <ref> tag; name "Amazon-1605984728" defined multiple times with different content
  27. Steinhardt, Paul (9 March 2014). "Theories of Anything". edge.org. Archived from the original on 10 March 2014. பார்க்கப்பட்ட நாள் 9 March 2014.
  28. 37.0 37.1 37.2 Ijjas, Anna; Loeb, Abraham; Steinhardt, Paul (February 2017), "Cosmic Inflation Theory Faces Challenges", Scientific American
  29. 38.0 38.1 38.2 38.3 . 
  30. 39.0 39.1 . 
  31. Woit, Peter (9 June 2015). "A Crisis at the (Western) Edge of Physics". Not Even Wrong.
  32. Woit, Peter (14 June 2015). "CMB @ 50". Not Even Wrong.
  33. Ellis, George F. R. (1 August 2011). "Does the Multiverse Really Exist?". Scientific American. Vol. 305, no. 2. New York City: Nature Publishing Group. pp. 38–43. Bibcode:2011SciAm.305a..38E. doi:10.1038/scientificamerican0811-38. ISSN 0036-8733. LCCN 04017574. OCLC 828582568. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014. {{cite magazine}}: Unknown parameter |subscription= ignored (help)
  34. Ellis, George (2012). "The Multiverse: Conjecture, Proof, and Science" (PDF). Slides for a talk at Nicolai Fest Golm 2012. Archived from the original (PDF) on 13 September 2014. பார்க்கப்பட்ட நாள் 12 September 2014.
  35. Ellis, George; Silk, Joe (16 December 2014), "Scientific Method: Defend the Integrity of Physics", Nature, pp. 321–323, Bibcode:2014Natur.516..321E, doi:10.1038/516321a, PMID 25519115
  36. Scoles; Sarah (19 April 2016), "Can Physics Ever Prove the Multiverse is Real", Smithsonian.com
  37. Tegmark, Max (May 2003). "Parallel Universes". Scientific American. Vol. 288. pp. 40–51. arXiv:astro-ph/0302131. Bibcode:2003SciAm.288e..40T. doi:10.1038/scientificamerican0503-40. PMID 12701329.
  38. Tegmark, Max (23 January 2003) (PDF). Parallel Universes. http://space.mit.edu/home/tegmark/multiverse.pdf. பார்த்த நாள்: 7 February 2006. 

நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லண்டம்&oldid=3610092" இலிருந்து மீள்விக்கப்பட்டது