இந்து அண்டவியல்
இந்து அண்டவியல் என்பது புராணங்கள் மற்றும் இந்து நூல்களி்ல் கூறப்பட்டுள்ள அண்டம் சம்மந்தமான இயலாகும். சிவலோகம், வைகுந்தம், கோலோகம் போன்ற தொடர்ந்து அழியா லோகங்களையும், அழியக்கூடிய பதினான்கு உலகங்களை உள்ளடக்கிய பிரம்மாண்டம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது. இவையனைத்தும் இணைந்து அகிலாண்டம் என்று கூறப்படுகிறது.
பிரம்மாண்டம்
தொகுஇந்த பிரம்மாண்டமானது உச்ச லோகம், மத்ய லோகம், நீச லோகம் என மூன்று பகுதிகளாக உள்ளதாக கீதையில் கூறப்பட்டுள்ளது.
இந்த பிரம்மாண்டமானது பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம், மஹர்லோகம், ஜனலோகம், ,தபோலோகம், சத்திய லோகம், அதல லோகம், விதல லோகம், சுதல லோகம்,தலாதள லோகம், மஹாதள லோகம், பாதாள லோகம், ரஸதல லோகம் என பதினான்கு உலகங்களை உள்ளடக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.
பிரளயம்
தொகுஇந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரளயம் என்பது அழிவாகும். பூலோகம் வெள்ளத்தினால் அழியுமெனவும், பூலோகம் முதலிய பதினான்கு உலகங்களை உடைய அண்டங்கள் அழிக்கப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. பல இந்து நூல்கள் பூலோகப் பிரளயம் என்பது சதுர் யுகங்களின் இறுதியான கலியுகம் முடிவுரும் பொழுது ஏற்படும் என தெரிவிக்கின்றன. அப்பொழுது திருமால் கல்கி அவதாரம் எடுத்து உலகில் பாவம் செய்தவர்களை கொல்வதாகவும், அதன் பிறகு பெரு வெள்ளம் ஏற்பட்டு பூலோகம் அழியும் என்றும் கூறப்படுகிறது.
சில புராணங்களில் பிரளயத்தின் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்திகம் என மூன்றுவகையான பிரளயங்களையும் மகாபுராணங்களில் ஒன்றான விஷ்ணு புராணம் விவரிக்கிறது.[1] தேயுப்பிரளயம் பற்றி கந்த புராணம் விவரித்துள்ளது.