சிவலோகம்
சிவலோகம் என்பது இந்து தொன்மவியலின் அடிப்படையில் சிவபெருமானின் வசிப்பிடமாகவும், சைவ சமயத்தில் முக்தியின் குறியீட்டுச் சொல்லாகவும் பொருள்கொள்ளப்படுகிறது. இங்கு சிவபெருமான் தனது மனைவியான பார்வதி தேவியுடனும், மகன்களான முருகன், பிள்ளையாரோடு வசிப்பதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
முக்தியைக் குறிக்க
தொகுசிவனடியார்கள் இறந்தபின்பு சிவபெருமானின் திருவடியை அடைவதாகவும், சிவலோகத்தில் கணங்களில் ஒருவராய் மாறுவதாகவும் நம்பிக்கையாகும். இதனால் இறந்தோர்களை சைவர்கள் சிவகதி அடைந்தோர், சிவலோகம் அடைந்தோர் என்று குறிப்பிடுகின்றனர்.
வழக்கத்தில் இறந்தோர்களை சிவலோகம் என்பது சிவனின் இருப்பிடமாக மட்டுமல்லாமல், இறந்தோர்களுக்கான இடமாகவும் குறிப்பிடப்படுகிறது.
சைவ நால்வர்களில் ஒருவரான சுந்தரர் வெள்ளையானை ஏறி சிவலோகம் அடைந்தார். [1]
மன்னன் வரகுணபாண்டியனுக்கு சிவலோகம் காட்டப்பட்டதாக திருவிளையாடல் புராணம் விவரித்துள்ளது, [2]
சிவலோகம் பற்றி இலக்கியங்களில்
தொகுஅபிராமி அந்தாதியில் சிவபெருமானோடு துணையாக ஆடும் அபிராமியை வழிபட்டால் சிவலோகம் கிடைக்கும் என்று விளக்கப்படுள்ளது. [3]
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=657
- ↑ http://temple.dinamalar.com/news_detail.php?id=2209
- ↑ சொல்லும் பொருளும் என நடம் ஆடும் துணைவருடன் புல்லும் பரிமள பூங்கொடியே நின் புதுமலர்த்தாள் அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும் செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே பாடல் எண் :28