கல்கி (அவதாரம்)

(கல்கி அவதாரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கல்கி அவதாரம் என்பது இந்து சமயத்தின் கூற்றுப்படி விஷ்ணு பகவானின் பத்தாவதும் இறுதியுமான மகா அவதாரமாகும். [1] கல்கி பகவான் கலி யுகத்தில் தோன்றி அனைத்து தீயவைகளையும் அழிப்பார் என்பது ஒரு கூற்று. கல்கி என்பதன் பொருள் காலம் அல்லது முடிவிலி ஆகும்.

கல்கி
Kalki Avatar by Ravi Varma.jpg
ரவி வர்மாவின் ஓவியம்
தேவநாகரிकल्कि
வகைதிருமாலின் அவதாரங்களில் ஒன்று
கிரகம்பூமி
ஆயுதம்வாள்
துணைபத்மாவதி, ரமாதேவி,வைஷ்ணவி தேவி

கல்கியின் குடும்பம்

சம்பாளா எனும் கிராமத்தில் விஷ்ணுயாசஸ் மற்றும் சுமதியின் நான்காவது மகனாக கல்கி பிறப்பார்.

விஷ்ணுயாசஸ் என்பதன் பொருள் பெருமாளின் மீது பற்று கொன்டவன் என்பதாகும். சுமதி என்பதன் பொருள் நல்லறிவு, நல்லொழுக்கம், நிறைமாதர்(முழுமையான பெண்ணிற்குறிய இலக்கணம் உடையவள்)

கல்கியின் உடன்பிறந்தவர்கள் கவி,பிராக்யன், சுமந்திரன்.

மனைவிகள்

இலங்கை அரசன் பிரகித்ரதன் கௌமுதி ஆகியோரின் மகள் பத்மாவதி.

கலிராஜனை கொன்ற பிறகு சில வருடங்கள் கழிந்தபின் சஜித்வாகணன் என்ற அரசனுடன் கல்கி போர் செய்வார். இறுதியில் சமாதனமடைந்து அவனுடைய மகள் ரமாதேவி யை திருமணம் செய்து கொள்வார்.

வைஷ்ணவி தேவி என்பது கல்கி புராணத்தில் சொல்லப்படவில்லை. எனினும் அது ஒரு தொன்மையான நம்பிக்கை. கல்கி பிறப்பதற்கு முன்பே வைஷ்ணவி தேவி பிறந்து பல ஆயிரம் ஆண்டுகளாக கல்கி பகவானுக்காக காத்திருப்பதாக தொன்நம்பிக்கை உள்ளது.

ஆதாரங்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்கி_(அவதாரம்)&oldid=3008094" இருந்து மீள்விக்கப்பட்டது