கலி புருசன்

கலி புருசன் (Kali (कलि, IAST: Kali,கலி யுகத்தில் துன்பம், தீங்கு, திடுக்கிடுதல், குழப்பம் மொத்தமாக அதர்மத்திற்கு காரணமானவர். கலியுக முடிவில் பகவான் விஷ்ணு பத்தாவதாக கல்கி அவதாரம் எடுத்து நாய் உருவில் திரியும் கலி புருசனுடன் போரிட்டு கொல்வார். கலி புருசன் குறித்து கல்கி புராணம், பாகவத புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணங்களிலும் மற்றும் மகாபாரதத்திலும் கூறப்பட்டுள்ளது.

கலி
கலியுகத்தின் போது கல்கி பகவான் கலி புருசனுடன் போரிடும் காட்சி
தேவநாகரிकलि/कली
சமசுகிருதம்Kali
வகைஅதர்மி (நேர்மைக்கு எதிரானவன்)
இடம்நரக லோகம்
துணைஅலெட்சுமி
சகோதரன்/சகோதரிதுருக்தி
குழந்தைகள்பயம்
மரணம்
தும்விஷ்ணு
நிரஸ்வதி
விஷ்பிரம்மா

மகாபாரதம்

தொகு
 
தமயந்தி வானுலக அன்னப் பறவையுடன் உரையாடும் காட்சி
  • மகாபாரத வன பருவம் அத்தியாயம் 53 முதல் 78 முடிய நளன்-தமயந்தி தம்பதியரின் வாழ்க்கையை கலி புருசன் சீரழித்த கதையைக் கூறுகிறது. விதர்ப்ப நாட்டு அரச குமாரியான தமயந்தியின் சுயம்வரத்தில், நிசாத நாட்டு மன்னர் நளன் மற்றும் கந்தர்வர்களில் ஒருவருரான கலி புருசனுடன், இந்திராதி தேவர்களும் நளன் உருவத்தில் கலந்து கொள்கின்றனர். தேவர்களின் கண்கள் இமைக்காமல், கழுத்து மாலைகள் தேனீக்கள் மொய்க்காமல இருந்தமையைக் கண்ட தமயந்தி, கண்களை இமைக்கும் நளனுக்கு மாலையிட்டு திருமணம் செய்து கொள்கிறாள். இதனால் பொறாமை கொண்ட இந்திரன் கலி புருசனை நளன் மற்றும் அவனின் நிசாத நாட்டின் மீது ஏவி பெருந்துயரங்களில் ஆழ்த்துகிறார். நளன் தனது உடன்பிறப்புடன் சூதாட்டத்தில் நாட்டைஇழந்ந்து, காட்டிற்கு மனைவி மக்களுடன் செல்கிறான். காட்டிலேயே மனைவி மக்களை விட்டுவிட்டு செல்கிறான். இறுதியில் தனது மாமனார் விதர்ப்ப நாட்டு அரசனின் சமையல் கூடத்தில் பணிபுரிகிறார். இறுதியில் கலி புருசன், நளனை விட்டு அகன்ற பின் நளன் தமயந்தியை அடைகிறான்.
    • ஆதி பருவம் 40ல் கலி யுகம் தொடங்குவதற்கு முன், குரு நாட்டின் பேரரசர் பரிட்சித்து வேட்டையாடச் சென்ற போது, கலி புருசன் இடைமறித்து, அவனது நாட்டில் செல்ல அனுமதி கேட்கிறார். மன்னர் பரிட்சித்தும், சூதாட்டம் நடைபெறுமிடங்கள், மதுக்கூடங்கள், விபசாரம் செய்யுமிடங்கள், தங்கம் புழங்கும் இடங்களில் மட்டுமே செல்வதற்கு அனுமதி அளிக்கிறார். உடனே கலி புருசன் பரிட்சித்து மன்னரின் தங்க மணி மகுடத்தில் புகுந்து, பரிட்சித்துவின் மனதை கெடுக்கிறார். தாகமாக இருந்த பரிட்சித்து, அங்கிருந்த குடிலின் முன் தியானத்தில் அமர்ந்திருந்த சமீகரை குடிப்பதற்கு நீர் கேட்டான். சமீகர் தியானத்தில் இருந்தமையால் ஏதும் பேசாமல் மௌனமாக இருந்தார். இதனால் கோபமடைந்த பரிட்சித்து முனிவரின் கழத்தில் இறந்த பாம்பை போட்டு விட்டு அரண்மனை திரும்பினார்.[1]சமீகரின் கழுத்தில் இறந்த பாம்பைக் கண்ட அவரது மகனும், முனிவருமான சிருங்கி, இச்செயலை செய்தவன் ஏழு நாட்களில் பாம்பு கொத்தி மடிவான் என சாபமிட்டார்.

இச்சாபச் செய்தி அறிந்த மன்னர் பரிட்சித்து, தனது மகனை ஜனமேஜயனை அரியணையில் அமர்த்தி விட்டு, சுகரிடம் பாகவத புராணம் கேட்டார்.. ஏழாவது நாளின் பாம்பரசனான தட்சகன் பரிட்சித்து மன்னரை கடித்து கொன்றார்.

புராணங்களில் கலி புருசன்

தொகு
 
பசுக்கறி உண்ணாமை குறித்தான படம் (கிபி 1890), வலது புறத்தில் புனிதப் பசுவை கொல்ல முயலும் கலி புருசன்
 
ரவி வர்மாவின் மேற்படி கருப்பு-வெள்ளைபடத்தின் வண்ணப் படம், ஆண்டு 1912

கல்கி புராணம்

தொகு
 
வெண் குதிரை மீது, கையில் வாளுடன் கல்கி பகவான்

கலி யுகத்தில் கலி புருசனின் தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்பது குறித்து கல்கி புராணத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டு உள்ளது. கலியுகத்தில் கலி புருசன் அனைத்து மக்களின் மனதையும் தீய எண்ணங்களைக் கொண்டவர்களாக மாற்றி விடுவார். கலியுக மக்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதையும், சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்வதையும் வழக்கமாக கொண்டிருப்பார்கள். தத்தமது தலைமுடியை அழகுபடுத்திக்க கொள்வதிலும், சிறந்த ஆடைகளை அணிந்து கொள்வதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும் அதிக நேரத்தை வீணடித்துக் கொள்வார்கள். கலியுகத்தில், செல்வந்தர்கள் அதிகமாக மதிக்கப்படுவார்கள். வட்டிக்குக் கடன் கொடுத்து செழுமையாக வாழ்பவர்கள் சமூகத்தின் தூண்கள் என பாராட்டப்படுபவர்களாக இருப்பார்கள். ஆன்மீகவாதிகள் பொருளாசை மற்றும் பிற ஆசைகளில் ஈடுபடுவார்கள் என்பதினால், முதியோர்களையும் ஆன்மீகத் தலைவர்களையும் சற்றும் அச்சம் இன்றி மக்கள் இழிவுபடுத்திப் பேசுவார்கள்.

கலியுகத்தில் உலக நிலைமை எப்படி இருக்கும் என்றால் நாட்டை ஆள்பவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிவார்கள். தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும். குடும்பங்கள் மீது வாழ முடியாத அளவிலான வரிச் சுமைகள் இருக்கும். தெய்வ நம்பிக்கைகள் குறைந்து கொண்டே போகும். இறை வழிபாடு தவறான முறையில் நடைபெறும். ஆலயங்கள் சூறையாடப்படும், மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது, கற்பு சூறையாடப்படும். பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும், ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் அதிக அளவில் இருக்கும், சூது, வாது, பொய்மை, மற்றும் பொறாமை போன்றவை ஓங்கும். அரசே மக்களை துன்புறுத்துவார்கள், மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர்.

பூமியானது அக்கிரமமான நிலை அமையக் காரணமாக இருப்பவனே கலி புருசன் என்கின்றார்கள். தேவலோகத்தில் இருக்கும் கலி புருசனும் தெய்வீக சக்தி போன்ற தீய சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ள ஒரு கணம்தான்.. அவரை படைத்ததும் பிரபஞ்சத்தை உருவாக்கிய அதே பிரம்மா தான்.

கல்கி புராணத்தில் பிரம்மாவால் படைக்கப்பட்ட கலி புருசனின் பரம்பரையை விளக்குகிறது. துவாபர யுகம் முடிவில் மற்றும் கலி யுகத்தின் தொடக்கத்தில் கலி புருசன் மற்றும் அவரது அரக்க குடும்பத்தினர், பூமியில் மனித வடிவலில் தோன்றி முனிவர்களுக்கும், மக்களுக்கும் எண்ணற்ற துன்பங்கள் செய்வார்கள்.கலியுகத்தின் போது நால்வகை வர்ணங்கள் மற்றும் ஆசிரம தர்மங்கள் சிதைந்து, வேள்விகள் செய்வதை விடுத்து தெய்வ வழிபாடு மனிதனால் கைவிடப்படும்.[2]. கலி யுகத்தின் போது, கலி அரக்கன் மற்றும் கலியின் குடும்பத்தினரை அழிக்க பகவான் விஷ்ணு கல்கி (அவதாரம்)|கல்கி அவதாரம்]] எடுத்து வெள்ளைக் குதிரை மீதர்ந்து, கையில் வாளேந்தி பூவுலகில் தோன்றுவார். கல்கி பகவான் கலி மற்றும் அவனைச் சார்ந்தவர்களைக் கொன்று கற்றவர்களையும், மக்களையும் காப்பார்.

பாகவத புராணம்

தொகு

பாகவத புராணத்தில், பகவான் கிருஷ்ணர் பூவுலகை விட்டு வைகுண்டம் சென்றவுடன், பூவுலகில் கலி புருசனின் ஆட்சி துவங்கியது எனக்கூறுகிறது.[3] மன்னர் பரிட்சித்து மனதில் கலி புருசன் புகுந்து, முனிவர் சமீகர் கழுத்தில் இறந்த பாம்பை போட்டதால், சமீகரின் மகன் சிருங்கிக்கு ஏற்பட்ட கடுங்கோபத்தால், இக்கொடிய செய்தவன் ஏழு நாட்களில் பாம்பு கடித்து இறப்பான் எனச் சாபமிட்டார்.

கலி புருசனின் இறப்பு

தொகு

கல்கி புராணத்தின்படி, கல்கி பகவானுக்கும், கலி புருசனுக்கும் இடையே நடக்கும் போரில், வீழ்த்தப்பட்ட கலி புருசன் கழுதை வடிவம் கொண்டு தனது அரண்மனை நோக்கி ஓடுகிறார். கல்கி பகவான் கலி புருசனை தேடிக் கொல்கிறார்.

இதனையும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. பரீக்ஷித் செய்த பிழை! | ஆதிபர்வம் - பகுதி 40
  2. Chaturvedi, B.K. Kalki Purana. New Delhi: Diamond Books, 2004 (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-288-0588-6)
  3. "Canto 1: Creation, Chapter 18, Verse 6". Archived from the original on 2021-09-19. பார்க்கப்பட்ட நாள் 2007-03-07.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலி_புருசன்&oldid=4136931" இலிருந்து மீள்விக்கப்பட்டது