ஆதி பருவம்
மகாபாரதத்தின் முதல் பகுதி
மகாபாரதம் புத்தகம் 1 ஆதி பருவம் (புத்தகத்தின் ஆரம்ப பருவம்) இந்த புத்தகத்தில், நைமிசாரண்ய வனத்தில் உக்கிரசிரவஸ் அல்லது சௌதி என்ற சூத முனிவரால் மகாபாரதம் எப்படி உரைக்கப்பட்டது என்பது சொல்லப்படுகிறது. ஜனமேஜயன் நடத்திய பாம்பு வேள்வியில் வைசம்பாயானரால் உரைக்கப்பட்ட மகாபாரதத்தை சௌதி கேட்டு நைமிசாரண்யத்தில் சௌனகருக்கும் அவருடன் இருந்த முனிவர்களுக்கு அதைத் திரும்ப உரைத்தார். இந்த பருவத்தில் குரு பரம்பரையின் தோற்றம், பாண்டவர், கௌரவர் பிறப்பு, அரக்கு மாளிகை, திரௌபதி சுயம்வரம், காண்டவ வனத்தை எரித்தல் குறித்து சொல்லப்படுகிறது.[1]
உப பருவங்கள்
தொகுமொத்தம் 19 உப பருவங்களைக் கொண்டது ஆதி பருவம். அதில் 100 உள் உப பருவங்கள் உள்ளன. உப பருவங்களின் பட்டியல் பின் வருமாறு:
- 1. அனுக்ரமானிகா பருவம் - மன்னன் திருதராஷ்டிரனால் சஞ்சயனுக்கு ஒப்பாரியாகச் சொல்லப்பட்ட மகாபாரதச் சுருக்கம்.
- 2. பௌசிய பருவம்
- 3. பௌலோம பருவம்
- 4. ஆஸ்திக பருவம்
- 5. ஆதிவம்சவதரனா பருவம்
- 6. சம்பவ பருவம்
- 7. ஜடகிருஹா பருவம்
- 8. இடும்ப வதை பருவம்
- 9. பகன் வதை பருவம்
- 10. சைத்ரரத பருவம்
- 11. சுவயம்வர பருவம்
- 12. விவாக பருவம்
- 13. விதுரகாமன பருவம்
- 14. ராஜ்யலாப பருவம்
- 15. அர்ஜூன வனவாச பருவம்
- 16. சுபத்ராஹரண பருவம்
- 17. ஹரன ஹரிகா பருவம்
- 18. காண்டவ பருவம்
மேற்கோள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- English Translation Readable, with various research tools.
- Translation by Kisari Mohan Ganguli.
- "A work of epic proportions" - India Tribune