வாள் (ஒலிப்பு) (sword) என்பது பொன்மத்தால் ஆகிய கூரிய விளிம்பு கொண்ட, நீளமான அலகுடைய வெட்டுவதற்கும், குத்துவதற்கும் பயன்படும் ஓர் ஆயுதம் ஆகும். இதன் துல்லியமான வரையறை கருதப்படும் காலத்தையும் வட்டாரத்தையும் பொறுத்தமைகிறது. இவ்வாயுதம் உலகின் பல நாகரிகங்களிலும் பல நூற்றாண்டுகளாகப் பயன்பட்டது. வாள் ஒரு நீண்ட அலகையும், ஒரு கைப்பிடியையும் கொண்டிருக்கும். இதன் அலகு நேராகவோ வளைவாகவோ அமையலாம். குத்தும் வாட்களின் அலகு முனை கூராகவும் வளையாமல் நேராகவும் அமையும்; வெட்டும் வாளின் அலகு ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலுமோ கூரிய விளிம்புகளுடன் வளைந்தும் இருக்கும். வாளின் அலகு விளிம்புகள் வெட்டுவதற்கும், அலகின் கூர்முனை குத்துவதற்கும் ஏற்றவகையிலும் இருக்கும். பெரும்பாலும் வாட்கள் இந்த இருவகைப் பயன்பாட்டுக்கும் ஏற்ப வடிவமைக்கப்படுகின்றன. வாள் போரின் அடிப்படை நோக்கமும், அதன் வடிவமும் பல நூற்றாண்டுகளாகவே மாற்றங்கள் பெரிதும் இன்றி இருந்துள்ளன. எனினும் அதன் நுட்பங்கள், அது பயின்றுவந்த பண்பாடுகள், காலப்பகுதிகள் என்பவற்றைப் பொறுத்து வேறுபட்டுள்ளன. இது முதன்மையாக வாள் அலகின் வடிவமைப்பினதும், அதன் நோக்கத்தினதுமான வேறுபாடுகளால் ஏற்பட்டது ஆகும். தொன்மங்களிலும், இலக்கியத்திலும் வரலாற்றிலும் பல வாள்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர்களில் இருந்து அவற்றுக்கிருந்த மதிப்பைப் பற்றி அறிந்துகொள்ள முடிகிறது.

சுவிட்சர்லாந்து நாட்டு நீண்டவாள், 15ஆம் அல்லது 16ஆம் நூற்றாண்டு

வரலாற்றியலாக, வாள் வெண்கலக் காலத்தில் குத்துவாளில் இருந்து தோன்றியது; மிகப் பழைய வெண்கலக்கால வாள் கி.மு 1600 அளவில் கிடைத்துள்ளது. பிந்தைய இரும்புக் கால வாள் மிகவும் குறுகியதாகவும் பிடியில் குறுக்குக் காப்பு இல்லாமல் அமைந்தது.

வாளைப் பயன்படுத்தும் தேர்ச்சி வாள்போர்க் கலை எனப்பட்டது. தொடக்க புத்தியல் காலத்தில் மேலைநாட்டு வாள் வடிவமைப்பு குத்துவாள், போர்வாள் என இரண்டு வடிவங்களாகப் பிரிந்தது.

உடைவாள் போன்ற குத்தும் கத்திகள் பின் குறுவாளாக மாறின. இவை இலக்கை வேகமாகவும் ஆழமான குத்துக்காயம் ஏற்படும்படியும் வடிவமைக்கப்பட்டன. இவற்றின் நேராக நீண்ட மெல்லிய சமனிலை வடிவமைப்பு இரட்டையர் போரில் அச்சமூட்டுவதக இருந்தது. ஆனால் வெட்டுவதிலும் தறிப்பதிலும் மிக பயனற்றதாக இருந்தது. குறிபார்த்து மேற்கொள்ளுக் குத்து போரை நொடிகளிலேயே முடிவுக்குக் கொண்டுவந்துவிடும்.

பட்டா(ள)க் கத்தியும் அகல்குறுவாளும் போன்ற வளைந்த அலகுகள் கொண்ட வாட்கள் போரிடுவதற்காக மிகவும் கூடுதலான எடையுடன் வடிவமைக்கப்பட்டன. இவை பல பகைவரைக் குதிரை மேலிருந்து வெட்டவும் தலைகளைச் சீவவும் ஏற்றவை. பட்டளக் கத்தியின் வளைந்த அலகின் முனைப்புற எடை போர்க்களத்தில் சமனிலையோடு அச்சமூட்டும் போர்நிகழ்த்த வழிவகுத்தன. இவை கூரிய முனையும் இருபுற வெட்டுவிளிம்பும் கொண்டவை. இவை காலாட்படையில் ஒவ்வொரு வீரராக்க் குடலை ஊடுறுவிச் சாய்க்க பொருத்தமாக அமைந்தன. எனவே இவை 20 ஆம் நூற்றாண்டு வரை தொடர்ந்து பயன்பாட்டில் விளங்கின. அமெரிக்க நாவாய்ப்படை இரண்டாம் உலகப்போர் வரை தன் படைக் கொட்டடையில் இவ்வகை அகல்குறு வாள்களைக் குவித்து வைத்திருந்தது. பின்னர் அவை காடுதிருத்த வழங்கப்பட்டன.

ஐரோப்பாவுக்கு வெளியே வாள்களாக நடுவண்கிழக்குப் பகுதியின் சுசிமிதார் ச்னாவின் தாவோ யப்பானியக் கடானா அகியவை அமைகின்றன. சீனாவின் யியான் இருகூர் விளிம்பு வாளாகும். இது ஐரோப்பிய இரும்ப்புக் கால இருகூர்விளிம்பு கொண்ட வாளாகும்.

வரலாறு

தொகு

பண்டைய வரலாறு

தொகு

"வாள்கள்" எனக் கருதக்கூடிய ஆயுதங்கள் அல்லது கருவிகள் கி. மு 3300 அளவில் இருந்து கிடைக்கிறது. துருக்கியின் அர்சுலாந்தெப்பேயில் கிடைத்த வாட்கள் ஆர்செனிய வெண்கலத்தால் செய்யப்பட்டிருந்தன. இவை 60 செமீ நீளங்கொண்டவையாக அமைந்தன.[1][2] இவற்றில் சில வெள்ளியாலாகிய அகட்டுடன் அமைகின்றன.

வெண்கலக் காலம்

தொகு
 
அபா வகை வாட்கள், கி.மு 17 ஆம் நூற்றாண்டு.
 
நெபிரா கேடயத்துடன் இடைத்த வாள்கள், அண். கி.பி 1600.

வாள் கத்தி அல்லது குறுவாளில் இருந்து படிமலர்ந்த்தாகும். கத்தி ஒருபக்க வெட்டு விளிமபு கொண்ட்து; ஆனால் குறுவாள் இருபுற வெட்டு விளிம்பு கொண்ட்தாகும். நீளமான அலகுகளை செய்யமுடிந்ததும், கி.பி 3 ஆம் நூற்றாண்டின் இறுதிகாலப்பகுதியில் நடுவண் கிழக்குப் பகுதியில் ஆர்செனிய வெண்கலத்தாலான வாள்கள் தோன்றின. பின்னர், காரீய வெண்கல வாட்கள் உருவாகின.

வெண்கலத்தின் இழுவலிமை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதால் 60 செமீ நீளத்தைவிட கூடுதலான நீளத்தில் அவை எளிதாக வளையும் என்பதால் செய்ய முடியவில்லை. குறுவாளில் இருந்து வாள் மிக மெதுவாகப் படிமலர்ந்த்து; வாளென ஐயமின்றி வகப்படுத்தப்பட்ட ஆயுதம் கி.பி 17 ஆம் நூஊற்றாண்டில் மினோவன் கிரீட்டில் கண்டெடுக்கப்பட்டது. இதன் நீளம் 100 செமீ அளவை விடக் கூடுதலாக அமைந்தது. இவை அயேகிய வெண்கலக் காலத்தின் முதல்வகை வாள்களாகும்.

மிக முதன்மையான நெடுநாள் நிலைத்திருந்த ஐரோப்பிய வெண்கல வாள் இரண்டாம் நௌவே வகையாகும் (இவ்வாளை யுலியசு நௌவே முதலில் விவரித்துள்ளதால் பெயரிடப்பட்டுள்ளது), மேலும் இது Griffzungenschwert எனும் "பிடிநாக்கு வாள்" எனவும் வழங்கப்படுகிறது. இவ்வகை கி.பி 13 ஆம் நூற்றாண்டில் தோன்றின. இவை வடக்கு இத்தாலியில் புதைதாழிப் பின்னணியில் கிடைக்கின்றன. இவை இரும்புக்காலம் வரை ஏழு நூற்றாண்டுகளுக்கு நீடித்து நிலைத்துள்ளன. இந்தக் கலகட்ட்த்துக்குள் வளாக்க பொன்மவியல் வெண்கலத்தில் இருந்து இரும்புக்குப் புடைபெயர்ந்தது. என்றாலும் வடிவமைப்பு மாறவில்லை.

இரும்புக் காலம்

தொகு
 
கால்சுடேட் வாள்கள், வேல்சு அருங்காட்சியகம்.

இரும்பு கி.பி 13 ஆம் நூற்றாண்டில் வழக்கில் பரவலானது. இதற்கு முன் வாளின் பயன்பாடு அருகியே இருந்தது. இரும்பு போதுமான கரிம அளவைக் கொண்டிருப்பினும் நீர்தெளித்து தணைக்கப்படுவதில்லை. இதுவும் சமட்டலால் வெண்கலத்தைப் போலவே வன்மைபடுத்தப்படுகிறது. இதனால், இரும்பு வாள் வெண்கல வாளைவிட ஒப்பீட்டளவில் சற்றே கூடுதலாக வலிவும் உறுதியும் கொண்டுள்ளது. இவை பயன்பாட்டில் வளைந்து பின் முந்தைய வடிவத்தைப் பெறவல்லவை. இரும்பு எளிதாக உருவாக்கப்படுவதாலும் மலைவான விலையில் ஏராளமாக இரும்பாக்கும் கச்சாப்பொருட்கள் கிடைப்பதாலும் படையில் உள்ள அனவருக்கும் வாள்களைத் தரமுடிந்தது. இருந்தாலும், வெண்கலக்கால எகிப்தியர்கள் வெண்கல வாட்களைக்கூட படையில் இருந்த ஆனைவருக்கும் தந்தனர்.[3]

பண்டைய வாட்கள் இடுகாடுகளில் கிடைக்கின்றன. பிணத்துக்கு வலதே அவை வைக்கப்பட்டன. என்றாலும், இதற்கு விதிவிலக்கும் உண்டு. பல இடங்களில் வாள் பிணத்தின் மீதும் வைக்கப்பட்டுள்ளன.

பல பிந்தைய இரும்புக் காலக் கல்லறைகளில், வாளும் கைப்பிடியும் 180 பாகைக் கோணத்தில் வளைத்து வைக்கப்பட்டுள்ளன. இம்மரபு வாளைக் கொல்லுதல் என வழங்கப்படுகிறது. இதில் இருந்து வாள் அவர்களால் வல்லமையும் திறனும் வாய்ந்த்தாக்க் கருதப்பட்டுள்ளது என்பது விளங்குகிறது.[4]

தமிழர் பண்பாடு

தொகு

சடங்குகள்

தொகு
 
போலந்து அரசர்கள் தம் முடிசூட்டு விழாவில் அணியும் சுசெர் பியெக் எனும் வாளின் பட ஆவணம், 12 ஆம்-13 ஆம் நூற்றாண்டு.

உலக முழுவதும் போரின்பொழுதும், அரச விழாக்களின் பொழுதும் வாளுக்கு முதன்மை வாய்ந்த பங்குண்டு. தரைப்படையிலும் நாவாய்ப்படையிலும் விழாக்காலங்களிலும் அரசு முடிசூட்டு விழாவிலும் தேசிய சிறப்பு நாட்களிலும் கீழ்நிலையில் தொடங்கி, உயர்மட்ட அளவில் உள்ள போர்வீரர் வரை, பதவிக்கேற்ப சீருடை அணிந்து வாளேந்தி, அணிவகுப்புகளை மேற்கொள்வர்.

அமெரிக்காவிலும் இந்த சடங்கு முறை உள்ளது. கடற்படை இணைத் தளபதி பதவியைவிட உயர்ந்த பதவி வகிப்பவர், அரச விழாக்களில் வாளேந்தி நிற்பர். பதவி மாற்றம் நிகழும்பொழுதும், வாளைப் பிடித்தபடி இருப்பர். படை அலுவலர் திருமணங்களிலும் சில வேளைகளில் திருச்சவை அல்லது பேராய விழாக்களிலும் கூட சீருடையில் வாள் பயன்படுவதுண்டு.

புறவடிவம்

தொகு

வாளில் அலகும் கைப்பிடியும் அமைந்திருக்கும்.

வாள் உறை வாள் அலகைப் பயன்படுத்தாதபோது செருகிவைக்கும் உறையாகும்.

அலகு

தொகு
 

வாள் அலகுகளின் ஆக்கத்தில் பல்வேறு விரிவான வடிவமைப்புகள் உள்ளன. எதிர் விளக்கப்படத்தில் இடைக்கால ஐரோப்பிய வாள் காட்டப்பட்டுள்ளது.

பொன்மவியல் தொழில்நுட்ப இயலாமையால், தொடக்கநிலை இரும்பு வாளின் நுனி புள்ளிவடிவில் அமைந்தது. எனினும், இவை மெல்லிய கவசம் அணிந்த எதிரிகளைக் குத்த விளைவுமிக்கதாக அமைகிறது. கவச வடிவமைப்பு மேம்பட்டதும் அலகுகள் வலிவாகவும் கூர்மையாகவும் கவசத்தை ஊடுருவிக் கிழிக்க வல்லபடி செய்யப்பட்டன.

திறம்பட்ட வெட்டலகுகள் அகலமான முன்பட்டையாக காடிகளுடன் அமைந்திருக்கும். இவை வாள்காடிகள் எனப்படுகின்றன. இவை எடையைக் குறைக்கும் அதேவேளையில் உறுதியையும் குறைக்கும். வெட்டலகுகளின் விளிம்புகள் வாளுக்கு இணையாக அமையும். குத்தலகுகள் தடித்த அலகுடன் சிலவேளைகளில் நடுமுகட்டுடன் உறுதியாக அமைந்திருக்கும். இது நல்ல சரிடுடனும் கூரிய நுனியுடனும் அமைகின்றன.

வெட்டும் வாளின் அலகு குறுங்கோணச் சரிவு விளிம்புடன் அமையும். இது போரில் சண்டiயிடும்போது, விரிகோணச் சரிவு விளிம்புள்ள அலகை விட வேகமாக வாளைத் தரமிழக்கச் செய்துவிடும். மேலும் குறுங்கோணச் சரிவு வாளைன் கூர்மைக்கு முதனமையான காரணி அன்று.[5]

அலகின் மொத்தல் மையத்துக்கும் நுனிக்கும் இடையில் உள்ள பகுதி கருக்கு எனப்படுகிறது. ஈர்ப்பு மையத்துக்கும் கைப்பிடிக்கும் இடையில் உள்ள அலகின் பகுதி வன்கடை எனப்படுகிறது . மொத்தல் மையத்துக்கும் ஈர்ப்பு மையத்துக்கும் இடையில் உள்ள அலகின் பகுதி வாளிடை எனப்படுகிறது.

காப்புக்கு அடியில் தீட்டப்படாமல் உள்ள குறும்பகுதி வாளின் தோள் எனப்படுகிறது. பல வாட்களில் தோள் அமைவதில்லை. சில நீண்ட வாட்களில் தோள்பகுதி பொன்ம உறையோடு அமைந்திருக்கும். நெருங்கிய போரில் வாள்வீரர்கள் இப்பகுதியை உறுதியாக பிடித்துக்கொள்வர். வாளின் தோள்பகுதியில் தொழில்குறி/செய்பவர் குறி அமைந்திருக்கும்.

கைப்பிடியைச் செருகும் அலகின் நீட்சி செருகு அல்லது முளை எனப்படுகிறது.

யப்பானிய அலகுகளில் தொழில்குறி பிடிக்கடிச் செருகில் அமைந்திருக்கும்.[6]

கைப்பிடி

தொகு
 
உடைவாளின் கைப்பிடி. இது வீச்சுக் கைப்பிடி ஆகும்
 
உமர் மன்னர் வாள், பிந்திய கைப்பிடியுடன்.

வாள் உறையும் கச்சும்

தொகு

வாளுடன் அமைந்த இணையமைப்புகளில் வாள் உறையும் வாள் கச்சும் அடங்கும்.

வாளின் வகைமையியல்

தொகு

ஒற்றை, இரட்டை விளிம்பின

தொகு

மேலே விளக்கியது போல, நீள்வாள், அகல்வாள், பெருவாள், காயெலிக் கிளேமோர் வாள் என்பன காலகட்டத்தைச் சார்ந்து ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட வாளின் வகையைக் குறிப்பனவாகும்.

வாள்/ஜியான்

தொகு

பெருபாலான ஆசிய நாடுகளில், வாள் (ஜியான் (jian) 劍, ஜியோம் (geom.) (검), கென் (ken)/சுருகி (tsurugi) (剣), பெடாங் (pedang)) என்பது இரட்டை விளிம்பு நேரலகு ஆயுதமாகும்; கத்தி அல்லது பட்டாக் கத்தி (தாவோ (dāo) 刀, தோ (do) (도), தோ (to)/கடானா (katana) (刀), பியாசு (pisau), கோலக் (golok)) ஒற்றை விளிம்பு வாளையே குறிப்பிடும்.

கிர்ப்பான்/காண்டா

தொகு

சீக்கிய வரலாற்றில், வாளுக்கு உயர்வான மதிப்பு நிலவுகிறது. கிர்ப்பான் எனும் ஒற்றை விளிம்பு வாளும் காண்டா அல்லது தேகா எனும் இரட்டை விளிம்பு வாளும் பண்பாட்டுப் பெருமிதங்களாக கருதப்படுவனவாகும்.[7]

சுரிகை வாள்

தொகு

தென்னிந்தியாவின் சுரிகை வாள் இரட்டை விளிம்பு வாளாகும். இது கேரளாவின் மரபு வாளாகக் கருதப்படுகிறது. இந்து சமயத்தில் வாள் வேட்டைக் கடவுளாகிய வேட்டக்கொருமகன் ஆயுதமாக வணங்கப்படுகிறது.

பின்கூர்வாளும் பால்சியனும்

தொகு

ஒற்றை, இரட்டை விளிம்பு வாட்களுக்கு தனி மரபுப் பெயர்கள் உண்ட் என்றாலும் அனைத்தும் சேர்ந்து வாள் எனும் ஒருசொல்லாலேயே வழங்கப்படுகின்றன. எடுத்துகாட்டாக, பின்கூர்வாள் என்பது ஒற்றை விளிம்பு வாளாகும் என்றாலும் அதற்கு பால்சியன் எனும் சிறப்புப் பெயரும் உண்டு.[8]

ஒருகை அல்லது இருகை பயன்பாடு

தொகு
 
இருகை வாள், இத்தாலி, கி.பி 1623.
 
இருகை வாளின் படிவம்

இருகை வகையின

தொகு

இருகை வாள் என்பது அதைக் கையாள இருகைகளும் தேவைப்படும் வாளைக் குறிப்பிடும். என்றாலும் அதன் உண்மையான பொருளில் இது 16 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்த மிகப் பெரிய வாளையே குறிக்கிறது.

வரலாறு முழுவதும் பொதுவாக இருகை வாளை விட ஒருகை வாளே வழக்கில் இருந்தது. இதற்கு ஒரே விதிவிலக்கு யப்பானில் இருகஈ வாட்கள் பொதுவான வழக்கில் இருந்துள்ளன என்பதேயாகும்.

ஒன்றரைக் கைவாள்

தொகு

ஒன்றரைக் கைவாள் என்பது கொச்சையாக "சோரன் வாள் (bastard sword)" எனப்படுகிறது; இது ஒரு அல்லது இருகையால் கையாளக்கூடியதாக அமைந்த நீண்ட கைப்பிடியமைந்த வாளாகும். இந்த வாட்கள் இருகையாலும் முழுமையாக பிடிக்கப்படாவிட்டாலும் இரண்டாம் கையில் கேடயமோ அல்லது சுருட்குத்து வாளோ உடனமைந்திருக்கும்; அல்லது ஓங்கி அடிக்க இருகைகளும் பயன்படலாம். இதை நீண்ட வாள் அல்லது இருகை வாள் அல்லது கட்டாயமாக இருகைகளால் கையாளும் வாளோடு குழப்பிக்கொள்ளக்கூடாது.

புனைகதை வகைகள்

தொகு
  • ஆற்றல் வாள் (அறிவியல் புனைகதை)
  • மாய வாள் (வியன் புனைவியல் (fantasy))

மேற்கோள்கள்

தொகு
அடிக்குறிப்புகள்
சான்றுகள்
  1. "Oldest Swords Found in Turkey". பார்க்கப்பட்ட நாள் 30 December 2016.
  2. Frangipane, M. et.al. 2010: The collapse of the 4th millennium centralised system at Arslantepe and the far-reaching changes in 3rd millennium societies. ORIGINI XXXIV, 2012: 237-260.
  3. Burton, p.78
  4. How Ancient Europeans saw the World pg 124 by Peter Wells
  5. Geißler, Robert (2014). "Concerning the Sharpness of Blades". HROARR. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
  6. Yumoto, John M. (1979). The Samurai sword: a handbook. Tuttle Publishing. p. 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8048-0509-1.
  7. Singh Jiwan Singh, B. Chatter, "The turban and the sword of the Sikhs: Essence of Sikhism", Amritsar,2001, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7601-491-5
  8. Oakeshott, Ewart (1980). European Weapons and Armour. Guildford & London: Lutterworth Press. p. 152.
நூல்தொகை

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வாள்&oldid=3937404" இலிருந்து மீள்விக்கப்பட்டது