அண்டவியல்

அண்டவியல் (Cosmology) அண்டத்தின் தோற்றம், இயக்கம், கட்டமைப்பு, பரிணாமம் ஆகியவற்றை இயற்பியலின் அடிப்படையில் ஆய முயலும் இயல். இதன் நடைமுறை கோட்பாடுகள் பல உறுதிப்படுத்தப்படவில்லை. அண்டத்தின் தோற்றம் பற்றிய கோட்பாடுகளில் இன்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது பெரு வெடிப்புக் கோட்பாடு ஆகும்.[1]

வகைகள்தொகு

  1. இயற்பு அண்டவியல்(physical cosmology) - வானியலாலர்களால் ஆராயப்பட்டு நிறுவப்பட்ட அல்லது கருதப்படும் கோட்பாடுகளைக் கொண்டது.
  2. மாயவியற்பு அண்டவியல்(metaphysical cosmology) - மதம், தொன்மங்கள் சார்ந்த கோட்பாடுகளைக் கொண்டது.[1]

மாறும் கொள்கைகள்தொகு

அண்டவியல் கொள்கைகள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருப்பது இயல்பு. ஒரு விஞ்ஞானி கூறிய கொள்கை நெடு நாட்களாக ஏற்கப்பட்டு மீண்டும் வேறொருவரால் பல ஆண்டுகள் கழித்து மறுக்கப்படலாம். இது தற்போது பரவலாக ஏற்கப்பட்ட பெரு வெடிப்புக் கோட்பாடு போன்றவற்றுக்கும் பொருந்தும்.[2]

மேற்கோள்களும் குறிப்புகளும்தொகு

  1. 1.0 1.1 வேங்கடம். வான சாஸ்திரம். சென்னை: விகடன் பிரசுரம். பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978 8189936228. 
  2. “டாலமி [Ptolemy] ஒரு பிரபஞ்சத்தை உருவாக்கினார்! அது ஈராயிரம் ஆண்டுகள் நீடித்தன! நியூட்டன் ஒரு பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்தார்! அது இரு நூறாண்டுகள் நீடித்தன! இப்போது டாக்டர் ஐன்ஸ்டைன் ஒரு புதிய பிரபஞ்சத்தைக் கண்டுபிடித்திருக்கிறார்! அது எத்தனை ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்று யாருக்கும் தெரியாது!” - டென்னிஸ் ஓவர்பை [Dennis Overbye, Times Writer]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அண்டவியல்&oldid=3522244" இருந்து மீள்விக்கப்பட்டது