பரவெளி என்பது எல்லையில்லாத, மூன்று-பரிமாணம் உள்ள பொருட்களும் நிகழ்வுகளும் தோன்றுகின்ற மற்றும் சார்புடைய நிலையும் திசையும் உள்ள நீட்சியாகும்.[1] பௌதீக பரவெளி மூன்று நேர்க்கோட்டு பரிமாணங்களாகவே புரிந்துகொள்ளப்படுகிறது, இருப்பினும் நவீன இயற்பியலாளர்கள் பரவெளிக்காலம் எனப்படுகின்ற எல்லையற்ற நான்கு-பரிமாண தொடர்பத்தின் ஒரு பகுதியான காலத்துடன் சேர்த்தே இதை கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர். கணிதத்தி்ல் ஒருவர் 'பரவெளிகளை' பல்வேறு எண்ணிக்கைகளிலான பரிமாணங்கள் மற்றும் வேறுபட்ட உள்ளுறையும் கட்டமைப்புகளுடன் சேர்த்தே ஆய்வு செய்கிறார். பரவெளி எனும் கருத்தாக்கம் பௌதீக பிரபஞ்சத்தின் புரிதலுக்கு அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது, இருப்பினும் இது தன்வகையிலான பருப்பொருளாக, பருப்பொருள்களுக்கு இடையிலான உறவாக இருக்கிறதா அல்லது கருத்தாக்க சட்டகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறதா என்பது குறித்து தத்துவவாதிகளுக்கு இடையிலான உடன்பாடின்மை தொடர்கிறது.

மரபார்ந்த விசையியலின் ஆரம்பகால வளர்ச்சியின்போது 17 ஆம் நூற்றாண்டில் பல தத்துவார்த்த கேள்விகள் எழுந்திருக்கின்றன. ஐசக் நியூட்டனின் கண்ணோட்டத்தில் பரவெளி என்பது முற்றானது - இதன் அடிப்படையில் பரவெளியில் எந்தப் பருப்பொருள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இது நிரந்தரமாகவும் சார்பற்றும் இருந்துவருகிறது.[2] பிற இயற்கைவாத தத்துவாதிகள், குறிப்பாக காட்ஃபிரைட் லெப்னிஸ், இதற்குப் பதிலாக பரவெளி என்பது பொருள்களின் ஒன்றோடொன்றான அவற்றின் வழங்கப்பட்ட தொலைவு மற்றும் திசைக்கு இடையிலுள்ள உறவுகளின் தொகுப்பு என்று கருதுகிறார். 18 ஆம் நூற்றாண்டில், இம்மானுவல் கண்ட் மனிதர்கள் தங்களுடைய அனுபவத்தை கட்டமைக்கப் பயன்படுத்தும் முறைப்படியான சட்டகத்தின் ஆக்கக்கூறுகளாக பரவெளி மற்றும் காலத்தை விளக்குகிறார்.

19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டு கணிதவியலாளர்கள், பரவெளியானது தட்டையாக அல்லாமல் வளைகோடாக இருக்கிறது என்பதைக் கூறும் யூக்லிடியன்-அல்லாத வடிவகணிதங்களை ஆய்வு செய்யத் தொடங்கினர். ஆல்பர்ட் ஐன்ஸ்டினின் பொது சார்புநிலைக் கோட்பாட்டின்படி ஈர்ப்புவிசைத் தளங்களைச் சுற்றியிருக்கும் பரவெளி யூக்லிடியன் பரவெளியிலிருந்து விலகிச் செல்கிறது.[3] பரிசோதனைப்பூர்வமான பொது சார்புநிலை சோதனைகள் யூக்லிடியன்-அல்லாத பரவெளி இயக்கவியல் மற்றும் ஒளியியல் ஆகியவற்றிற்கென்று இருந்துவரும் விதிகளை விளக்குவதற்கான சிறந்த மாதிரியை வழங்கக்ககூடியவை என்று உறுதிப்படுத்தியிருக்கின்றன.

பரவெளி தத்துவம்தொகு

லெப்னிஸ் மற்றும் நியூட்டன்தொகு

 
காட்ஃபிரைட் லெப்னிஸ்

பதினேழாம் நூற்றாண்டில், அறிவியங்கியல் மற்றும் மீபொருண்மையியல் ஆகியவற்றிலான மைய விவகாரங்களாக பரவெளி மற்றும் காலம் குறி்த்த தத்துவம் உருவானது. இதன் இதயப்பகுதியில், ஜெர்மன் தத்துவவியலாளரும்-கணிதவியலாளருமான காட்ஃபிரைட் லெப்னிஸ் மற்றும் ஆங்கில இயற்பியலாளரும்-கணிதவியலாளருமான ஐசக் நியூட்டன் ஆகியோர் பரவெளி என்றால் என்ன என்பதற்கு இரண்டு எதிரெதிர் கோட்பாடுகளை முன்வைத்தனர். மற்ற பருப்பொருளுக்கு அதிகமாகவும் மேலாகவும் சார்பற்றதாக இருந்துவரும் ஒரு பருப்பொருளாக இருப்பதைக் காட்டிலும் பரவெளி என்பது பொருள்களுக்கும் உலகிற்கும் இடையில் இருந்துவரும் இடம்சார் உறவுகளின் தொகுப்பு என்று வலியுறுத்துகிறார்: "இடவமைப்புகள் ஒருசேர நேரிடுவதால் ஏற்படும் விளைவே பரவெளி".[4] ஆக்கிரமிக்கப்படாத பகுதிகள் தங்களுக்குள் பொருள்களை கொண்டிருக்கக் கூடியவையாகவும், அதனால் மற்ற இடவமைப்புகளோடு இடம்சார் உறவுகள் உள்ளவையாகவும் இருக்கக்கூடும். இதனால் லெப்னிட்ஸிற்கு பரவெளி என்பது தனிப்பட்ட பருப்பொருள்களுக்கு இடையிலுள்ள உறவுகள் அல்லது அவற்றின் சாத்தியமுள்ள இடமவமைப்புகளைச் சேர்ந்த கற்பனையாக்கப்பட்ட அரூபம், இதனால் இது தொடர்ச்சியானதாக இருக்க முடியாது என்பதுடன் பிரிநிலையாக இருக்க வேண்டும்.[5] பரவெளியை குடும்ப உறுப்பினர்களுக்கு இடையில் இருக்கும் உறவுகளைப் போன்று கருதலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் ஒருவரோடொருவர் உறவுள்ளவர்கள் என்றாலும் இந்த உறவு அவர்கள் சார்பற்றவர்களாக இருக்கும்போது ஏற்படாது.[6] இவ்வுலகில் பொருட்களை சாராமல் பரவெளி இருக்க முடியாது என்று லெப்னிஸ் வாதிடுகிறார், ஏனென்றால் இது ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் உள்ள பொருள்வய உலகின் இடவமைப்பைத் தவிர்த்து இரண்டு பிரபஞ்சத்திற்கு இடையிலுள்ள வேறுபாடு துல்லியமாக ஒன்றுபோலவே இருக்க்க்கூடும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இதற்கும் அப்பால் இந்த பிரபஞ்சங்களைப் பற்றிக் கூறுவதற்கான நோக்கற்குரிய முறை எதுவும் இல்லை என்பதால் பிரித்தறிய முடியாதவற்றின் அடையாளம் என்பதன்படி அவற்றிற்கிடையே உண்மையான வேறுபாடு என்று எதுவும் இல்லை. போதிய பகுத்தறிவுக் கொள்கையின்படி, சாத்தியமுள்ள இந்த பிரபஞ்சங்களும் இருக்கக்கூடும் என்பதைக் குறிப்பிடுகின்ற எந்தக் கோட்பாடும் தவறாகத்தான் இருக்க வேண்டும்.[7]

 
ஐசக் நியூட்டன்

நியூட்டன் பரவெளியை பருப் பொருள்களுக்கு இடையிலான உறவைக் காட்டிலும் மேலானது என்கிறார், தன்னுடைய நிலைப்பாட்டை கண்டுணர்தல் மற்றும் பரிசோதனையாக்குதல் அடிப்படையில் நிறுவுகிறார். பொருள் நிலையான திசைவேகத்தில் பயணமாகின்ற உறைநிலை சலனத்திற்கும், திசைவேகம் காலத்தால் மாறுதலடைகின்ற உறைநிலையற்ற சலனத்திற்கும் இடையில், இடம்சார் அளவீடுகள் அனைத்தும் மற்ற பொருள்கள் மற்றும் சலனங்களோடு தொடர்புகொண்டிருக்கின்றன என்பதால் ஒரு தொடர்புவாதிக்கு உண்மையான வேறுபாடு என்ற ஒன்று இல்லை. உறைநிலையற்ற சலனம் சக்திகளை உருவாக்குகிறது என்பதால் இது முற்றானது என்று நியூட்டன் வாதிடுகிறார்.[8] தன்னுடைய வாதத்தை நிரூபிப்பதற்கு அவர் சுழலும் வாளியில் உள்ள தண்ணீரை உதாரணமாகப் பயன்படுத்துகிறார். வாளியில் உள்ள தண்ணீர் கயிற்றில் தொங்கவிடப்பட்டு தட்டையான மேற்பரப்பிலிருந்து சுழலவிடப்படுகிறது. சற்று நேரத்தில் வாளி தொடர்ந்து சுழல்கையில் தண்ணீரின் மேற்பரப்பு உட்குழிவாகிறது. வாளியின் சுழல் நின்றுபோனாலும் தண்ணீரின் மேற்பரப்பு சுழலும்போது இருந்தததைப் போன்றே உட்குழிவானதாக இருக்கிறது. இந்த உட்குழிவான மேற்பரப்பு நிச்சயம் வாளிக்கும் தண்ணீருக்கும் இடையிலான சார்புநிலை சலனத்தினால் ஏற்பட்டதல்ல என்பது தெளிவாகிறது[9]. மாற்றாக, நியூட்டன் இது பரவெளி வகையில் தொடர்புடைய உறைநிலையற்ற சலனத்தின் விளைவாகத்தான் இருக்க வேண்டும் என்று வாதிடுகிறார். சில நூற்றாண்டுகளுக்கு இந்த வாளி வாதமானது பரவெளி பருப்பொருளை சாராமலேயே இருந்து வந்திருக்க வேண்டும் என்பதை நிரூபிப்பதற்கான இறுதி வாதமாக இருந்திருக்கிறது.

கண்ட்தொகு

 
இம்மாணுவல் காண்ட்

பதினெட்டாம் நூற்றாண்டில் ஜெர்மன் தத்துவவாதியான இம்மானுவேல் கண்ட் பரவெளி பற்றிய அறிவு என்பது விதி விளக்குமுறை அடிப்படையான மற்றும் கூட்டிணைப்பு அடிப்படையிலான ஆகிய இரண்டாகவும் இருந்திருக்கிறது என்ற அறிவுக் கோட்பாட்டை உருவாக்கினார்.[10] காண்ட்டின் கூற்றுப்படி, பரவெளியைப் பற்றிய அறிவு என்பது கூட்டிணைப்பிலானது, பரவெளியைப் பற்றிய கூற்றுக்கள் கூற்றில் உள்ள வார்த்தைகளின் பொருளினுடைய காரணத்தினால் மட்டுமே உண்மையாக இருக்க முடியாது. தன்னுடைய எழுத்தில் பரவெளியானது பொருளாகவோ அல்லது உறவாகவோ இருக்க முடியாது என்று காண்ட் மறுதலிக்கிறார். பரவெளியும் காலமும் உலகின் பொருள்வய அம்சங்களாக மனிதர்களால் கண்டுபிடிக்கக்கூடியதாக இருக்காது என்ற முடிவிற்கு அவர் வருகிறார், ஆனால் இது நம்முடைய அனுபவங்களை முறைப்படுத்துவதற்கான தவிர்க்கமுடியாத படிமுறை சட்டகத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது.[11]

யூக்லிடியன்-அல்லாத வடிவ கணிதம்தொகு

 
கோள வடிவகணிதம் நீள்வட்ட வடிவகணித்ததோடு ஒத்த தன்மையுடையது. கோளத்தின் மேற்பரப்பில் இணை கோடுகள் எதுவுமில்லை.

யூக்லிடின் ஆக்கக்கூறுகள் யூக்லிடியன் வடிவகணிதத்திற்கான அடிப்படையை உருவாக்கும் ஐந்து அனுமானங்களை உள்ளிட்டதாக இருக்கிறது. இவற்றில் ஒன்றான இணை அனுமானம் கணிதவியலாளர்களிடையே பல நூற்றாண்டுகளாக விவாதத்திற்குரிய ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. L1 என்ற சமதளம் மற்றும் P என்ற புள்ளி L1 இல் இல்லாமலிருக்கின்ற எந்த ஒரு சமதளத்திலும், P என்ற புள்ளியின் வழியாக கடந்தசெல்கின்ற மற்றும் L1 என்ற நேர் கோட்டிற்கு இணையாக உள்ள சமதளத்தில் L2 என்ற ஒரே நேர்க்கோடு மட்டுமே இருக்கிறது என்பதை இது குறிப்பிடுகிறது. 19 ஆம் நூற்றாண்டு வரை, இந்த அனுமானத்தின் உண்மை குறித்து சிலர் மட்டுமே சந்தேகம் எழுப்பியிருக்கின்றனர்; பதிலாக ஒரு தேற்றமாக இது அவசியமா, அல்லது இது மற்ற தேற்றங்களிலிருந்து பெறக்கூடிய கோட்பாடாக இருந்ததா என்பதை மையமாகக் கொண்ட விவாதங்களும் நடைபெற்றிருக்கின்றன.[12] ஏறத்தாழ 1830 ஆம் ஆண்டில் ஹங்கேரியரான ஜேனஸ் போல்யே மற்றும் ரஷ்யரான நிகலாய் இவானவிச் லபோசெஸ்கி ஆகியோர் அதிபரவளைய வடிவகணிதம் எனப்படும் இணை அனுமானத்தை உள்ளிடாத வடிவகணித வகை குறித்த ஆய்வுரைகளை தனித்தனியாக பதிப்பித்துள்ளனர். இந்த வடிவகணிதத்தில், P என்ற புள்ளியின் வழியாக கடந்துசெல்லும் முடிவற்ற எண்ணிக்கையிலான இணை கோடுகள் இருக்கின்றன. இதன் விளைவாக ஒரு முக்கோணத்தில் உள்ள கோணங்களின் கூடுதல் 180oக்கும் குறைவாக இருக்கிறது என்பதுடன் வட்டத்தின் விட்டத்திற்கான சுற்றளவின் விகிதம் பையைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது. 1850 ஆம் ஆண்டுகளில் பெர்ன்ஹார்ட் ரைன்மன் நீள்வட்ட வடிவகணிதத்தின் சமநிலைக் கோட்பாட்டை உருவாக்கினார், இது P இன் வழியாக கடந்துசெல்கின்ற இணை கோடுகள் என்று எதுவுமில்லை என்று குறிப்பிடுகிறது. இந்த வடிவகணிதத்தில் முக்கோணங்கள் 180oக்கும் அதிகமாக இருக்கிறது என்பதுடன் வட்டங்கள் pi என்பதற்கும் குறைவாக உள்ள விட்டத்திற்கான சுற்றளவின் வீதத்தைக் கொண்டிருக்கிறது.

இணைகளின் எண்ணிக்கை ஒரு முக்கோணத்திலுள்ள கோணங்களின் கூடுதல் வட்டத்தின் விட்டத்திற்கான சுற்றளவின் விகிதம் வளைமையின் அளவீடு
அதிபரவளையம் முடிவிலி < 180o > π < 0
யூக்லிடியன் 1 180o > π 0
நீள்வட்டம் 0 > 180o > π > 0

காஸ் மற்றும் பியான்கேரிதொகு

 
கார்ல் ஃபிரடெரிக் காஸ்
 
ஹென்றி பியான்கேரி

காண்டிய உடன்பாடு அந்த நேரத்தில் நடைமுறையில் இருந்ததென்றாலும், யூக்லிடியன் அல்லாத வடிவகணிதங்கள் முறைப்படுத்தப்பட்டவுடன் பௌதீக பரவெளி வளைந்திருக்கிறதா இல்லையா என்பது குறித்து சிலர் சந்தேகம்கொள்ளத் தொடங்கினர். ஜெர்மானிய கணிதவியலாளரான கார்ல் ஃபிரெடெரிக் காஸ் பரவெளியின் வடிவகணித கட்டமைப்பின் அனுபவவாத விசாரணையை கவனத்தில் கொண்ட முதலாமவராக கருதப்படுகிறார். அவர் எண்ணிலடங்காத விண்மீன் கூட்ட முக்கோணத்தினுடைய கோணங்களின் கூடுதல் என்ற சோதனையை செய்ய எண்ணினார் என்பதோடு உண்மையில் அவர் அந்த சோதனையை ஜெர்மனியில் உள்ள மலை உச்சிகளை முக்கோணமாக்கி சிறிய அளவில் செய்துபார்த்திருக்கிறார் என்ற செய்தியும் இருக்கிறது.[13]

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியைச் சேர்ந்த இயற்பியலாளரும் கணிதவியலாளருமான ஹென்றி பியான்கேரி பரவெளிக்கு பயன்படுத்தப்படுப்படுகிற வடிவகணித பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்க முயற்சிக்கின்ற எதுவும் பயனற்றதே என்று நிரூபிப்பதற்கான முயற்சியாக ஒரு முக்கியமான கூர்நோக்கு ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.[14] அறிவியலாளர்கள் கோள-உலகம் எனப்படும் குறிப்பிட்ட உடைமைப்பொருள்களைக் கொண்டு பெரும் கற்பனை வாய்ந்த ஒரு பெரிய கோளத்தின் மேல்தளத்தோடு எல்லைக்குட்படுத்திக்கொள்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த சிக்கலான நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கருதினார். இந்த உலகத்தில், கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் வெப்பநிலை எல்லா பொருள்களும் விரிவடையும் முறையிலேயே எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பதுடன் கோளத்திலுள்ள வேறுபட்ட இடங்களில் இதேபோன்ற சரிவிகிதங்களில் உடன்பாட்டையும் ஏற்படுத்திக்கொள்கிறது. வெப்பநிலையில் ஏற்படும் பொருத்தமான வீழச்சியுறுதலால், ஒரு முக்கோணத்தில் உள்ள கோணங்களின் கூடுதலைத் தீர்மானிப்பதற்கு அளவிடு கோல்களை அறிவியலாளர்கள் பயன்படுத்துகிறார்கள் என்றால் அவை கோள சமதளத்தைக் காட்டிலும் ஒரு சமதளத்திலேயே ஏற்றப்படுவை என்ற சிந்தனையால் அவர்கள் பீடிக்கப்படுவார்கள்.[15] உண்மையில், அறிவியலாளர்களால் கொள்கையளவில் அவை ஒரு சமதளத்தில் ஏற்றப்படுகின்றனவா அல்லது கோளத்தில் ஏற்றப்படுகின்றனவா என்பதைத் தீர்மானிக்க இயலாது, அத்துடன் உண்மையான பரவெளி யூக்லிடியனா இல்லையா என்ற விவாதத்திற்கும் இதே நிலைதான் என்று பியான்கேரி வாதிடுகிறார். அவரைப் பொறுத்தவரை இது பரவெளியை விளக்க வடிவகணிதம் பயன்படுத்தப்படும் பழமையான முறை என்பதே விஷயம்.[16] யூக்லிடியன் வடிவகணிதம் யூக்லிடியன்-அல்லாத வடிவகணிதத்தைக் காட்டிலும் எளிதானது என்பதால் முந்தைய வாதமானது உலகின் 'உண்மையான' வடிவகணிதத்தை விளக்குவதற்கு பயன்படுத்தப்படலாம் என்று அனுமானிக்கிறார்.[17]

ஐன்ஸ்டீன்தொகு

 
ஆல்பெர்ட் ஐன்ஸ்டீன்

1905 ஆம் ஆண்டில், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் சிறப்பு சார்புநிலைக் கோட்பாடு குறித்த ஆய்வுக்கட்டுரையை பதிப்பித்தார், இதில் அவர் பரவெளி மற்றும் காலம் ஆகிய இரண்டையும் பரவெளிக்காலம் எனப்படும் ஒரே கட்டமைப்பாக இருக்கிறது என்றார். இந்தக் கோட்பாட்டில், வெற்றிடத்திலான ஒளியின் வேகம் உற்றுநோக்காளர்கள் அனைவருக்கும் ஒரேவிதமாக இருக்கிறது - இது ஒரு குறிப்பிட்ட நோக்காளருக்கு அடுத்தடுத்து தோன்றும் இரண்டு நிகழ்வுகள் நோக்காளர்கள் ஒருவருக்கொருவர் என்ற வகையில் நகர்ந்தால் மற்ற நோக்காளருக்கு அடுத்தடுத்து தோன்றுவதாக இருக்காது என்ற விளைவைக் கொண்டிருக்கிறது. மேலும், ஒரு நோக்காளர் ஒரு கடிகாரத்தை அவற்றிற்கு பொருத்தமான வகையில் அசைவற்றிருக்கும் ஒன்றைக் காட்டிலும் மிகவும் மெதுவாக சுற்றுவதாக அளவிடலாம்; அத்துடன் பொருள்கள் நோக்காளருக்கு பொருத்தமான வகையில் நகர்கின்ற திசையில் சுருக்கப்பட வேண்டியவையாகவும் அளவிடலாம்.

அதற்கடுத்து வந்த பத்து வருடங்களுக்கும் மேலாக ஈர்ப்புவிசையானது பரவெளிக்காலத்துடன் எவ்வாறு செயல்புரிகிறது என்ற கோட்பாடான பொது சார்புநிலைக் கோட்பாடு குறித்து ஆய்வு செய்தார். பரவெளிக்காலத்தில் செயல்படும் ஈர்ப்புவிசையை விசைத் தளமாக காண்பதற்கு மாறாக இது பரவெளிக்காலத்தின் வடிவகணித அமைப்பையே மேம்படுத்தச் செய்கிறது என்று ஐன்ஸ்டீன் கூறினார்.[18] பொதுக் கோட்பாட்டின்படி குறைவான ஈர்ப்புவிசை சாத்தியங்கள் உள்ள இடங்களில் நேரமானது மிகவும் மெதுவாக செல்கிறது என்பதோடு ஒளியின் கதிர்கள் ஈர்ப்புவிசைத் தளத்தின் இருப்பில் வளைந்துசெல்கின்றன. ஈரிணை துடிவிண்மூலங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஐன்ஸ்டீன் கோட்பாடுகளுடைய முன்னூகிப்புகளை உறுதிப்படுத்தியிருக்கின்றனர் என்பதோடு யூக்லிடியன்-அல்லாத வடிவகணிதம் வழக்கமாக பரவெளிக்காலத்தை விளக்கப் பயன்படுத்தப்படுகிறது.

கணிதம்தொகு

நவீன கணிதத்தில் பரவெளிகள் சில கூடுதல் கட்டமைப்போடு தொகுதிகளாக வரையறுக்கப்படுகின்றன. அவை தொடர்ந்து, யூக்லிடியன் பரவெளியை உள்வயமாக தோராயமாக்குகின்ற மற்றும் பன்மடிவெளியில் இருக்கின்ற புள்ளிகளின் உள்வய தொடர்புத்திறன்களில் பெருமளவிற்கு வரையறுக்கப்படுகின்ற உடைமைப்பொருள்களாக உள்ளவிடத்தில் பல்வேறு வகைப்பட்ட பன்மடிவெளிகளாக விளக்கப்படுகின்றன. இருப்பினும், பரவெளிகள் என்றழைக்கப்படும் பல மாறுபட்ட தன்மையுள்ள பொருள்களும் இருக்கின்றன. உதாரணத்திற்கு, செயல்படு பரவெளிகள் பொதுவாக யூக்லிடியன் பரவெளியோடு நெருக்கமான உறவைக் கொண்டிருப்பதில்லை.

இயற்பியல்தொகு

மரபார்ந்த இயக்கவியல்கள்தொகு

மரபார்ந்த விசையியல்
 
நியூட்டனின் இரண்டாவது விதி
வரலாறு · காலக்கோடு

பரவெளி என்பது இயற்பியலில் உள்ள சில அடிப்படை அளவுகளில் ஒன்றாக இருக்கிறது, அதாவது இதனை பிற அளவுகள் மூலம் வரையறுக்க முடியாது, ஏனென்றால் மிகவும் அடிப்படையானது எதுவும் தற்போது தெரியவரவில்லை. மற்றொரு பக்கம், இது பிற அடிப்படை அளவுகளுக்கு சார்புடையதாக இருக்கலாம். எனவே, மற்ற அடிப்படை அளவுகளைப் போன்று (காலம் மற்றும் நிறை போன்று), பரவெளியை அளவிடுதல் மற்றும் பரிசோதனையின் மூலமாக நாடியறிய முடியும்.

வானியல்தொகு

வானியல் என்பது வெளிப்புற பரவெளியில் உள்ள பொருள்களை நோக்குதல், விளக்குதல் மற்றும் அளவிடுதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய அறிவியலாகும்.

சார்பியல்தொகு

சார்புநிலை இயற்பியல் குறித்த ஐன்ஸ்டீனின் ஆய்வுக்கு முன்பாக காலம் மற்றும் பரவெளி என்பவை தனிப்பட்ட பரிமாணங்களாகவே கருதப்பட்டன. சலனத்தின் சார்புநிலை காரணமாக நமது பரவெளி மற்றும் காலத்தை கணிதவியல் அடிப்படையில் பரவெளிக்காலம் என்ற ஒரே பொருளாக ஒன்றுசேர்க்க முடியும். பரவெளி அல்லது காலத்திலான தொலைவை இது தனித்தனியாக நீக்குவதானது லாரென்ட்ஸ் ஒருங்கிணைப்பு நிலைமாற்றங்கள் வகையில் மாற்றமில்லாததாக இருப்பதில்லை, ஆனால் பரவெளி-கால இடைவெளி உடனான மினோவ்ஸ்கி பரவெளி-காலத்திலான தொலைவுகள் இந்தப் பெயரை சரியானதென்கிறது.

மேலும், காலம் மற்றும் பரவெளி பரிமாணங்கள் மினோவ்ஸ்கி பரவெளி-காலத்தில் துல்லியமான சமநிலையுள்ளதாக பார்க்கப்படக்கூடாது. ஒருவர் பரவெளியில் சுதந்திரமாக நகரலாம் ஆனால் காலத்தில் அல்ல. ஆகவே, காலம் மற்றும் பரவெளி ஒருங்கிணைப்புகள் சிறப்பு சார்பியல் (காலமானது சிலபோது ஒரு கற்பனை ஒருங்கிணைப்பாக கருதப்படுகின்றவிடத்தில்) மற்றும் பொது சார்பியல் (வேறுபட்ட குறிகள் பரவெளிக்கால நீட்டல் அளவின் காலம் மற்றும் பரவெளிக்கென்று அளிக்கப்படுகின்றவிடத்தில்) ஆகிய இரண்டிலும் வேறுபட்ட முறையில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

மேலும், ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கோட்பாடு ஈர்ப்புவிசைரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நிறைகளுக்கு அருகாமையில் பரவெளி-காலமானது வடிவகணிதரீதியில் பிறழ்கிறது -வளைகிறது - என்று அனுமானிக்கிறது.[19]

ஈர்ப்புவிசை அலைகளை நேரடியாக அளவிடும் முயற்சியாக பரிசோதனைகளும் நடத்தப்படுகின்றன. இது அத்தியாவசியமான முறையில் பரவெளிக்காலத்தின் அசையும் சிற்றலைகளை விளக்கும் பொது சார்பியலின் சமன்பாடுகளுக்கான தீர்வுகளாக இருக்கிறது. இதற்கான உள்வய ஆதாரம் ஹல்ஸ்-டெய்லர் ஈரிணை அமைப்பின் சலனங்களில் காணப்படுகிறது.

பேரண்டவியல்தொகு

சார்பியல் கோட்பாடானது பிரபஞ்சம் எந்த வடிவத்தில் இருக்கிறது, பரவெளி எங்கிருந்து வந்தது என்ற பேரண்டவியல் கேள்விக்கு இட்டுச்செல்கிறது. பரவெளியானது பெருவெடிப்பில் உருவாகியிருக்கிறது என்பதோடு நிரந்தரமாக விரிவடைந்து வருகிறது என்பதாக தோன்றுகிறது. பரவெளியின் ஒட்டுமொத்த வடிவம் அறியப்படவில்லை, ஆனால் பரவெளியானது [பேரண்ட வீக்கம்[|பேரண்ட வீக்கத்தின்]] காரணமாக அதி விரைவாக விரிவடைந்து கொண்டே செல்கிறது என்பது உறுதி. தன்னுடைய காற்றடைப்புக் கோட்பாட்டிற்காக பிரபலமடைந்திருக்கும் ஆலன் குத் 1980 ஜனவரி 23 இல், ஸ்டாண்போர்ட் லீனியர் அக்ஸலரேட்டர் மையத்தில் நடந்த கருத்தரங்கில் முதல் கருத்தாக்கங்களை வெளியிட்டார்.

இடம்சார் அளவீடுதொகு

பௌதீக பரவெளியின் அளவீடு நீண்டகாலமாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. ஆரம்பகால சமூகங்கள் அளவீட்டு அமைப்புக்களை உருவாக்கியிருக்கின்றன என்றாலும், அலகுகளின் சர்வதேச அமைப்பு (எஸ்ஐ) தற்போது பரவெளியை அளவிடுவதில் பயன்படுத்தப்படும் அலகுகளின் பொதுவான அமைப்பாக இருக்கிறது. இது ஏறத்தாழ உலகம் முழுவதிலும் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது.

தற்போது தரநிலை அளவிடும் கருவி அல்லது அளவிடும் கருவி எனப்படும் தரநிலை பரவெளி இடைவெளி ஒரு நொடிக்கு துல்லியமாக 1/299,792,458 என்ற கால இடைவெளியின்போது ஒரு வெற்றிடத்தில் ஒளி பயணம் செய்கின்ற தொலைவு என்பதாக வரையறுக்கப்படுகிறது. நொடி என்பதன் தற்போதைய வரையறையோடு இணைந்திருக்கும் இந்த வரையறை ஒளியின் வேகம் இயற்கையின் அடிப்படை மாறிலி என்ற வகையில் பங்காற்றுகின்ற சிறப்பு சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்திருக்கிறது.

புவியியல்தொகு

புவியியல் என்பது பூமியை அடையாளம் கண்டு விவரிப்பது, பொருட்கள் ஒரு குறிப்பிட்ட இடவமைப்புகளில் இருந்துவருவதற்கான காரணத்தை புரிந்துகொள்ள முயற்சிப்பதற்கான இடம்சார் விழிப்புநிலையை பயன்படுத்திக்கொள்வது ஆகியவற்றை கவனத்தில் கொள்கின்ற அறிவியல் பிரிவாகும். வரைபடவியல் என்பது காட்சிப்படுத்தல் நோக்கங்கள் மற்றும் இடவமைப்பு சாதனங்களாக செயல்படுவதற்கான சிறந்த போக்குவரத்து வழிநடத்தலுக்கு உதவும் பரவெளிகளை வரைபடமிடுதலாகும். புவிசார் புள்ளிவிவரம் என்பது உணரப்படாத நிகழ்விற்கான கணக்கீட்டை உருவாக்குவதற்கு இடம்சார் தரவை தொகுப்பதற்கான புள்ளிவிவர கருத்தாக்கங்களைப் பயன்படுத்துகிறது.

புவிசார் பரவெளி நிலம் என்றே கருதப்படுகிறது, அத்துடன் இது உரிமையுடைக்கான பயன்பாட்டிற்கு (பரவெளியானது சொத்து அல்லது பிரதேசம் என்பதாக பார்க்கப்படும் வகையில்) உறவைக் கொண்டதாகவும் இருக்கலாம். சில கலாச்சாரங்கள் உரிமையுடைமை வகையில் தனிநபர் உரிமைகளை வலியுறுத்துகின்ற சமயத்தில் பிற கலாச்சாரங்கள் நில உரிமையுடைக்கான சமூக அணுகுமுறையுடன் இதை அடையாளம் காணும், அதேசமயம் ஆஸ்திரேலிய பூர்வகுடிகள் போன்ற மேலும் பிற கலாச்சாரங்கள் நிலத்திற்கான உரிமைகளை வலியுறுத்துவதைக் காட்டிலும் இந்த உறவை பின்திரும்பச் செய்து தாங்கள் அனைவரும் உண்மையில் நிலத்தால் சொந்தம் கொள்ளப்படுபவர்கள் என்பதை வலியுறுத்துகின்றன. இடம்சார் திட்டமிடல் என்பது நில-அளவில் பரவெளியைப் பயன்படுத்துவதை முறைப்படுத்ததும் முறையாகும், இந்த முடிவுகள் பிரேதச, தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் எடுக்கப்படுகின்றன. பரவெளி மனிதர் மற்றும் கலாச்சார செயல்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம், இது கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகள், மற்றும் வேளாண்மை ஆகியவற்றின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகின்றவிடத்தில் கட்டிடக்கலையில் ஒரு முக்கியமான காரணியாக இருந்துவருகிறது.

பரவெளியின் உரிமையுடைமை நிலத்தால் வரம்பிற்குட்படுத்தப்படுவதில்லை. வான்வெளி மற்றும் தண்ணீரின் உரிமையுடைமை சர்வதேச அளவில் தீர்மானிக்கப்படுகின்றன. பிற வகைப்பட்ட உரிமையுடைமைகள் பிற பரவெளிகளுக்கானதாக சமீபத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றன - உதாரணத்திற்கு மின்காந்தவியல் நிறமாலை அல்லது சைபர்ஸ்பேஸிற்கான ரேடியோ பேண்ட்கள்.

பொது வெளி என்பது ஒரு சமூகத்தால் கூட்டாக சொந்தம்கொள்ளப்பட்டிருக்கின்ற, அதிகாரப்பூர்வ அமைப்புக்களால் நிர்வகிக்கப்படுகின்ற பகுதிகளுக்கென்று பயன்படுத்தப்படும் சொற்பதமாகும்; இதுபோன்ற வெளிகள் எல்லோருக்கும் திறந்திருப்பவை. தனியார் சொத்து என்பது தனிநபர் அல்லது நிறுவனத்தால் தங்களுடைய பயன்பாடு மற்றும் மகிழ்ச்சிக்கென்று கலாச்சாரரீதியில் சொந்தம் கொள்ளப்பட்டிருக்கின்ற நிலமாகும்.

அரூப வெளி என்பது முழுமையான ஒத்தத்தன்மையால் குறிப்பிடப்படுகின்ற அனுமான வெளியைக் குறிப்பதற்கு புவியியலில் பயன்படுத்தப்படுகிறது. நடவடிக்கை அல்லது செயல்பாட்டை மாதிரியாக்கும்போது, நிலப்பரப்பு போன்ற அயலின மாறுபாடுகளை வரம்பிற்குட்படுத்த பயன்படுத்தப்படுவதற்கான கருத்தாக்க கருவியாக இது இருக்கிறது.

உளவியல்தொகு

பரவெளி உணர்ந்துகொள்ளப்படுகின்ற முறையானது 19 ஆம் நூற்றாண்டின் மத்தியப்பகுதியில் உளவியலாளர்கள் முதலில் ஆய்வுசெய்யத் தொடங்கிய பகுதியாக இருந்தது, தற்போது இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொண்டவர்களால் இந்த ஆய்வுகள் உளவியலுக்குள்ளாகவே இது ஒரு தனிப்பட்ட பிரிவாக இருப்பதாக கருதப்படுகிறது. பரவெளியை பகுப்பாய்வு செய்யும் உளவியலாளர்கள் ஒரு பொருளின் பௌதீக தோற்றம் எவ்வாறு தெரியவருகிறது அல்லது இதனுடைய இடைவினைகள் எவ்வாறு உணர்ந்துகொள்ளப்படுகின்றன என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்கின்றனர்.

அமோடல் உணர்தல் மற்றும் பொருள் நிலைத்தன்மை உள்ளிட்ட பிற, அதிக சிறப்புவாய்ந்த விஷயங்கள் ஆய்வுசெய்யப்பட்டிருக்கின்றன. சூழ்ந்திருப்பவைகளின் உணர்தல் என்பது அவற்றின் எஞ்சியிருத்தலோடு அவசியமான மறையில் தொடர்புகொண்டுள்ளதன் காரணத்தால், குறிப்பாக வேட்டையாடுதல் மற்றும் சுய-தற்காப்பு மற்றும் சொந்த வெளி குறித்த ஒருவரின் கருத்தாக்கம் ஆகியவற்றால் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

அகராஃபோபியா (திறந்த வெளிகளின் மீதுள்ள அச்சம்), ஆஸ்ட்ரோஃபோபியா (விண்வெளி குறித்த அச்சம்) மற்றும் கிளாஸ்ட்ரோஃபோபியா (மூடப்பட்ட வெளிகள் குறித்த அச்சம்) சில பரவெளி சார்ந்த அச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருக்கின்றன.

மேலும் பார்க்கதொகு

குறிப்புதவிகள்தொகு

 1. பிரிட்டானிக்கா ஆன்லைன் என்சைக்ளோபீடியா: பரவெளி
 2. ஃபிரென்ச் அண்ட் எபிஸன், மரபார்ந்த இயக்கவியல்கள், ப. 1
 3. கார்னப், ஆர். அன் இண்ட்ரடக்சன் டு தி ஃபிலாசபி ஆஃப் சயின்ஸ்
 4. லெப்னிட்ஸ், ஃபிஃப்த் லெட்டர் டு சாமுவேல் கிளார்க்
 5. வய்லட்டி, இ, லெப்னிஸ் & கிளார்க்: எ ஸ்டடி ஆஃப் தெர் கரஸ்பாண்டன்ஸ் ப. 115
 6. ஸ்க்லார், எல், ஃபிலாசபி ஆஃப் பிஸிக்ஸ், ப. 20
 7. ஸ்க்லார், எல், ஃபிலாசபி ஆஃப் பிஸிக்ஸ், ப. 21
 8. ஸ்க்லார், எல், ஃபிலாசபி ஆஃப் பிஸிக்ஸ், ப. 22
 9. நியூட்டனின் வாளி
 10. கார்னப், ஆர். அன் இண்ட்ரடக்சன் டு தி ஃபிலாசபி ஆஃப் சயின்ஸ், ப. 177-178
 11. John Lucas (philosopher). Space, Time and Causality. பக். 149. 
 12. கார்னப், ஆர். அன் இண்ட்ரடக்சன் டு தி ஃபிலாசபி ஆஃப் சயின்ஸ், ப.126
 13. கார்னப், ஆர். அன் இண்ட்ரடக்சன் டு தி ஃபிலாசபி ஆஃப் சயின்ஸ், ப. 134-136
 14. ஜாமர், எம், கான்செப்ட்ஸ் ஆஃப் ஸ்பேஸ், ப. 165
 15. மாறுபடும் ஒளிவிலகல் குறியீட்டெண்ணைக் கொண்ட ஒரு ஊடகமும் ஒளியின் பாதையை வளைக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதோடு அறிவியலாளர்கள் அவற்றின் புவியமைப்பை வரைபடமிட முயற்சித்தால் அத்தியாவசியமானதாகவும் இருக்கிறது
 16. கார்னப், ஆர். அன் இண்ட்ரடக்சன் டு தி ஃபிலாசபி ஆஃப் சயின்ஸ், ப.148
 17. ஸ்க்லார், எல், ஃபிலாசபி ஆஃப் பிஸிக்ஸ், ப. 57
 18. ஸ்க்லார், எல், ஃபிலாசபி ஆஃப் பிஸிக்ஸ், ப. 43
 19. அத்தியாயங்கள் 8 மற்றும் 9- ஜான் ஏ. வீலர் "எ ஜர்னி இண்டு கிராவிட்டி அண்ட் ஸ்பேஸ்டைம்" சயின்டிஃபிக் அமெரிக்கன் ISBN 0-7167-6034-7
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரவெளி&oldid=3636691" இருந்து மீள்விக்கப்பட்டது