கோரா (Quora) பயனர் சமூகத்தால் வினாக்கள் உருவாக்கப்பட்டும் விடை காணப்பட்டும் தொகுக்கப்பட்டும் ஒழுங்கமைக்கப்படும் வினா-விடை வலைத்தளமாகும். இதனை சூன் 2009 இல் நிறுவிய ஆடம் டி'ஏஞ்செலோ மற்றும் சார்லி சீவெர் பொதுமக்களுக்கு சூன் 21, 2010இல் அணுக்கம் வழங்கினர்.[3]

கோரா, இன்க்.
நிறுவன_வகைதனியார்
தலைமையிடம்மவுண்டன் வியூ, கலிபோர்னியா
சேவை பகுதிஉலகெங்கும்
நிறுவனர்(கள்)ஆடம் டி'ஏஞ்செலோ
சார்லி சீவெர்
முதன்மை நபர்கள்ஆடம் டி'ஏஞ்செலோ (சிஈஓ)
ஊழியர்கள்72[1]
சொலவம்உங்கள் அறிவிற்கான சிறந்த வளம்.
வலைத்தளம்கோரா.கொம்
அலெக்சா தரவரிசை எண்negative increase 445 (மார்ச் 2014)[2]
வலைத்தள வகைஅறிவுச் சந்தை, வினா-விடை மென்பொருள்
பதிகைகட்டாயம்
மொழிகள்ஆங்கிலம்
பிரெஞ்சு
ஜெர்மன்
தமிழ்
மலையாளம்
தெலுங்கு
கன்னடம்
அரபி வங்காளம்
இந்தி
இந்தோனேசிய மொழி
இத்தாலிய மொழி
சப்பானிய மொழி
போர்த்துக்கேய மொழி
பின்னிய மொழி
நோர்வே மொழி
ஸ்பானிஷ்
மராத்தி
டச்சு
சுவீடிய மொழி
டேனிய மொழி
துவக்கம்சூன் 2009
தற்போதைய நிலைசெயற்பாட்டில்

பல்வேறு தலைப்புக்களில் வினாக்களும் விடைகளும் தொகுக்கப்படுகின்றன. பயனர்கள் ஒன்றிணைந்து வினாக்களை உருவாக்கவும் சீரமைக்கவும் இயலும்; அதேபோன்று ஒரு பயனர் அளித்த விடையை மற்றவர் மேம்படுத்தவும் பிழைகளைக் களையவும் இயலும்.[4]

வரலாறு

தொகு

கோரா வலைத்தளத்தை இரு முன்னாள் ஃபேஸ்புக் ஊழியர்களான ஆடம் டி'ஏஞ்செலோவும் சார்லி சூவெரும் இணைந்து உருவாக்கினர். சனவரி 2010இல் டி'ஏஞ்செலோ ஃபேசுபுக்கிலிருந்து விலகி கோராவை நிறுவினார்.[5] அப்போது சீவெரும் தாமும் "வினா-விடை குறித்து பல வலைத்தளங்கள் இணையத்தில் இருந்தபோதும் சிறப்பான ஒரு வலைத்தளத்தை எவரும் உருவாக்கவில்லை" என்ற தூண்டுதலால் இந்த வலைத்தளத்தை உருவாக்கியதாகக் கூறினார்.[6] கோரா பயனர்களின் எண்ணிக்கை திசம்பர் 2010 வாக்கில் விரைவாக வளர்ந்தது.[7]

கோரா வலைத்தளத்தில் சனவரி 2011இல் 500,000 பயனர்கள் பதிந்துள்ளதாகக் கருதப்படுகிறது.[8] சூன் 2011இல், தகவல் கண்டுபிடிப்பு மற்றும் உலாவலை எளிதாக்கும் வகையில் கோராவின் இடைமுகம் சீரமைக்கப்பட்டது. இவ்வாறு சீரமைக்கப்பட்ட இடைமுகம் விக்கிப்பீடியாவுடன் ஒப்புநோக்குவதாக சிலர் கருதுகின்றனர்.[9] ஐ-போனிற்கான அலுவல்முறை நகர்பேசி பயன்பாட்டு மென்பொருளை செப்டம்பர் 29, 2011இலும் [10] ஆண்டிராய்டிற்கான அலுவல்முறை நகர்பேசி பயன்பாட்டு மென்பொருளை செப்டம்பர் 5, 2012-இலும் வெளியிட்டது.[11]

செப்டம்பர் 2012இல் இணை நிறுவனர் சார்லி சீவெர் நிறுவனத்தின் நாளுக்கு நாள் பொறுப்புக்களிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக அறிவித்தார்; அறிவுரையாளராக தொடர்ந்து பொறுப்பாற்றுகிறார்.[12][13]

சனவரி 2013இல் கோரா வலைப்பதிவு தளத்தை அறிமுகப்படுத்தியது.[14]

மார்ச்சு 20, 2013 முதல் முழுமையான உரைத் தேடலாக வினாக்களையும் விடைகளையும் தேடுமாறு தனது வலைத்தளத்தை அமைத்தது.[15] இந்த வசதியை நகர்பேசிகளுக்கும் மே மாதப் பிற்பகுதியில் விரிவாக்கியது.[16] மே 2013 வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அனைத்து அளவைகளிலும் கடந்த ஆண்டை விட மும்மடங்கு வளர்ந்திருப்பதாக கூறியது.[17]

சனவரி 2019இல் தமிழ், மராத்தி, பெங்காலி, இடச்சு, தேனிசு, பின்னிசு, நோர்வே மற்றும் சுவீடியம் மொழிகளில் கோரா வெளியிடப்பட்டுள்ளது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "quora.com". quora.com. பார்க்கப்பட்ட நாள் 2014-01-11.
  2. "Quora.com Site Info". Alexa Internet. Archived from the original on 2013-09-08. பார்க்கப்பட்ட நாள் 2014-03-01.
  3. Monday, சூன் 21st, 2010 (2010-06-21). "Quora's Highly Praised Q&A Service Launches To The Public (And The Real Test Begins)". Techcrunch.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: numeric names: authors list (link)
  4. Wortham, Jenna (மார்ச் 12, 2010). "Facebook Helps Social Start-Ups Gain Users". New York Times. http://www.nytimes.com/2010/03/13/technology/13social.html. பார்த்த நாள்: மார்ச் 29, 2010. 
  5. "Why I Quit My CTO Job At Facebook And Started Quora". Business Insider. பார்க்கப்பட்ட நாள் March 29, 2010.
  6. "The Mystery Behind Quora". Boston Innovation. Archived from the original on பிப்ரவரி 14, 2017. பார்க்கப்பட்ட நாள் March 29, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. Lewenstein, ed. (November 28, 2010). "Quora Signups Explode". பார்க்கப்பட்ட நாள் January 24, 2011.
  8. Arthur, Charles; Jemima Kiss (5 January 2011). "Quora: the hottest question-and-answer website you've probably never heard of". The Guardian. http://www.guardian.co.uk/technology/2011/jan/05/quora-question-answer-facebook. பார்த்த நாள்: 31 May 2012. 
  9. Tsotsis, Alexia (2011-06-24). "Inspired by Wikipedia, Quora aims for relevancy with topic groups and reorganized topic pages". techcrunch.com. பார்க்கப்பட்ட நாள் 2013-04-06.
  10. "Announcing Quora for iPhone and iPod touch — Gallimaufry". Quora. பார்க்கப்பட்ட நாள் 2012-02-12.[தொடர்பிழந்த இணைப்பு]
  11. "Introducing Quora for Android". Quora. பார்க்கப்பட்ட நாள் 2012-10-05.
  12. Cutler, Kim-Mai (2012-09-11). "Quora Co-Founder Charlie Cheever Steps Back From Day-To-Day Role At The Company". TechCrunch.
  13. "What is Charlie Cheever's status at Quora as of September 11th, 2012?". Quora.
  14. Constine, Josh (2013-01-23). "Quora Launches Blogging Platform With Mobile Text Editor To Give Every Author A Built-In Audience". டெக்கிரஞ்சு. பார்க்கப்பட்ட நாள் 2013-02-01.
  15. Russell, Jon (2013-03-21). "Quora finally introduces full-text search to boost content discovery". The Next Web. பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
  16. Constine, Josh (2013-05-29). "Quora Brings Full-Text Search To Mobile To Unlock FAQ&As For Any Keyword". டெக்கிரஞ்சு. பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
  17. Tsotsis, Alexia (2013-05-28). "Quora Grew More Than 3X Across All Metrics In The Past Year". பார்க்கப்பட்ட நாள் 2013-11-14.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோரா&oldid=4154149" இலிருந்து மீள்விக்கப்பட்டது