லோகி (வரைகதை)
லோகி (ஆங்கில மொழி: Loki) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ, லாரி லிபர் மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால், ஆகஸ்ட் 1949 இல் வெளியான வீனசு #6 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது.
லோகி | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்சு |
முதல் தோன்றியது |
|
உருவாக்கப்பட்டது | |
கதை தகவல்கள் | |
முழுப் பெயர் | லோகி ஒடின்சன் |
இனங்கள் | அஸ்கார்டு –கடவுள் |
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் |
|
திறன்கள் |
|
இது இதே பெயரில் உள்ள நார்சு தெய்வத்தை அடிப்படையாகக் கொண்டது. இவர் ஒடினின் வளர்ப்பு மகன், மீநாயகன் தோரின் வளர்ப்பு சகோதரன் மற்றும் அஸ்கார்டு நாட்டின் "குறும்பு கடவுள்" ஆவார். இவரின் கதாபாத்திரம் ஒரு சூப்பர்வில்லன் மற்றும் எதிர் கதாநாயகனாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
இந்த பாத்திரம் இயங்குபடம் செய்யப்பட்ட தொலைக்காட்சித் தொடர்கள், திரைப்படங்கள், நிகழ்பட ஆட்டம், ஆடை, பொம்மைகள் மற்றும் வர்த்தக அட்டைகள் உள்ளிட்ட தொடர்புடைய மார்வெல் பொருட்களில் தோன்றியுள்ளது. இவர் 2014 இல் "எல்லா நேரத்திலும் சிறந்த 100 வரைகதை புத்தக வில்லன்கள்" பட்டியலில் லோகி 4 வது இடத்தில தரவரிசைப்படுத்தப்பட்டார்.[1] இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான தோர் (2011),[2] தி அவேஞ்சர்ஸ் (2012), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), தோர்: ரக்னராக் (2017), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களிலும், லோகி (2021) என்ற டிஸ்னி+ தொடரிலும் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Loki is number 4 பரணிடப்பட்டது திசம்பர் 2, 2012 at the வந்தவழி இயந்திரம், IGN.
- ↑ "Marvel Studios Update: Loki Officially Cast in 2011 Thor Movie". Marvel Comics. 2009-05-18 இம் மூலத்தில் இருந்து May 11, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/5yaazmGGE?url=http://marvel.com/news/story/8063/marvel_studios_update_loki_officially_cast_in_2011_thor_movie.