தோர்: ரக்னராக்
தோர்: தி ரக்னராக் (ஆங்கில மொழி: Thor: The Ragnarok) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்தின் வரைகதைகளில் தோன்றும் தோர் என்ற கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு தைகா வைதிதி என்பவர் இயக்க கிறிஸ் ஹெம்ஸ்வர்த்,[2] டாம் ஹிடில்ஸ்டன், கேட் பிளான்சேட், இட்ரிசு எல்பா, ஜெப் கோல்ட்ப்ளம், டெஸ்சா தாம்ப்சன், கார்ல் அர்பன், மார்க் ருஃப்பால்லோ, அந்தோணி ஹோப்கின்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
தோர்: ரக்னராக் | |
---|---|
இயக்கம் | தைகா வைதிதி |
தயாரிப்பு | கேவின் பிகே[1] |
கதை |
|
இசை | மார்க் மதர்ஸ்பாக் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | ஜேவியர் அகுயிரசரோப் |
படத்தொகுப்பு |
|
கலையகம் | மார்வெல் ஸ்டுடியோஸ் |
விநியோகம் | வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 10, 2017(எல் கேப்டன் தியேட்டர் ) நவம்பர் 3, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $180 மில்லியன் |
மொத்த வருவாய் | $854 மில்லியன் |
இப் படத்தை மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் அக்டோபர் 10, 2017 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியானது.[3] இது மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் பதினேழாம் படம் மற்றும் தோர் (2011) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு (2013) போன்ற திரைப்பட வரிசையில் மூன்றாவது திரைப்படம் ஆகும். இந்த திரைப்படம் உலகளாவிய ரீதியாக $854 மில்லியனுக்கும் மேல் வசூலித்தது. இந்த திரைப்படத்தின் நான்காவது பாகம் தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற பெயரில் 6 மே 2022 ஆம் ஆண்டு வெளியாவுள்ளது.
கதை சுருக்கம்
தொகுஇந்த திரைப்படத்தின் கதை வேற்றுக் கிரகத்தில் சிக்கிக்கொள்ளும் தோர், அங்கு ஹல்க் மற்றும் ஆஸ்கார்ட் நாட்டை சேர்ந்த வால்கெய்ரியுடன் இணைத்து தன் சகோதரி ஹெலாவை எப்படி வீழ்த்தி தன் உலகமான ஆஸ்கார்டையும் தன் மக்களையும் மீட்டெடுக்கிறான் என்பதுதான் கதை.
நடிகர்கள்
தொகு- கிறிஸ் ஹெம்ஸ்வர்த் - தோர்
- டாம் ஹிடில்ஸ்டன் - லோகி
- கேட் பிளான்சேட் - கேலா
- இட்ரிசு எல்பா - ஹைம்டால்
- ஜெப் கோல்ட்ப்ளம் - கிராண்ட்மாஸ்டர்
- டெஸ்சா தாம்ப்சன் - ஸ்கிராப்பர் 142 / வால்கெய்ரி
- கார்ல் அர்பன் - ஸ்கர்ஜ்
- மார்க் ருஃப்பால்லோ - புரூஸ் பேனர் / ஹல்க்
- அந்தோணி ஹோப்கின்ஸ் - ஒடின்
திரைப்படத்தின் வசூல்
தொகுதோர்: ரக்னராக் அமெரிக்காவில் மற்றும் கனடாவில் $ 315.1 மில்லியன் வசூலித்தது, மற்ற பிராந்தியங்களில் 538.9 மில்லியன் டாலர்கள், என உலகளவில் மொத்தம் $ 854 மில்லியன் வசூலித்தது.[4] நவம்பர் 3, 2017 வார இறுதியில், இப்படம் ஐமேக்ஸ் காட்சிகளில் இருந்து $ 25.4 மில்லியன் டாலர்கள் சம்பாதித்தது, நவம்பர் இறுதியில் டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் படத்தின் வசூலை விஞ்சிவிட்டது. [5]
இப்படம் உலகளவில் $ 650.1 மில்லியனுக்கும் சம்பாதித்தது. இப்படம் தோர் (மொத்தம் $ 449.3 மில்லியன்) மற்றும் தோர்: த டார்க் வேர்ல்டு ($ 644.6 மில்லியன்) ஆகிய படங்களின் வசூலை அதன் மூன்றாவது வார இறுதிக்குள் முந்தியது. [6] [7]
இது 2017 ஆம் ஆண்டில் அதிக வசூல் ஈட்டிய படங்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்தது . [8] [9]
மேற்கோள்கள்
தொகு- ↑ Vejvoda, Jim (October 28, 2013). "Marvel Studios Boss Kevin Feige on the Possibility of Thor 3". IGN. Archived from the original on June 28, 2014. பார்க்கப்பட்ட நாள் October 28, 2013.
- ↑ "Chris Hemsworth Talks Ramping Up the Action for Thor: The Dark World". Access Hollywood. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் October 22, 2013.
- ↑ Strom, Marc (February 10, 2015). "Marvel Studios Schedules New Release Dates for 4 Films". Marvel.com. Archived from the original on February 10, 2015. பார்க்கப்பட்ட நாள் February 9, 2015.
- ↑ Lawrence, Derek (September 7, 2017). "Thor: Ragnarok voted most anticipated fall movie in Fandango survey". Entertainment Weekly. from the original on September 7, 2017. Retrieved September 7, 2017.
- ↑ D'Alessandro, Anthony (November 6, 2017). "'Thor: Ragnarok's Strong Sunday Bulks Marvel Pic To $122.7M Opening – Monday Final". Deadline Hollywood. Archived from the original on November 3, 2017. Retrieved November 7, 2017.
- ↑ McNary, Dave (November 12, 2017). "Box Office: 'Thor: Ragnarok' Rules Worldwide, Tops $650 Million Mark". Variety. from the original on November 14, 2017. Retrieved November 13, 2017.
- ↑ Tartaglione, Nancy (November 12, 2017). "'Thor' Rocks $650M WW; 'Orient Express' Rolls $57M Offshore; 'Coco', 'Paddington 2' Feel Embrace – International Box Office". Deadline Hollywood. from the original on November 14, 2017. Retrieved November 13, 2017.
- ↑ Tartaglione, Nancy (December 10, 2017). "'Coco' Sweet With $390M Global, Scores China Hat Trick; 'Justice League' Tops $600M WW – International Box Office". Deadline Hollywood. from the original on December 12, 2017. Retrieved December 11, 2017.
- ↑ D'Alessandro, Anthony (March 20, 2018). "No. 8 'Thor: Ragnarok' Box Office Profits – 2017 Most Valuable Blockbuster Tournament". Deadline Hollywood. from the original on March 21, 2018. Retrieved March 20, 2018.