நிக்கோல் பெர்ல்மன்

நிக்கோல் பெர்ல்மன் (ஆங்கில மொழி: Nicole Perlman) (பிறப்பு: திசம்பர் 10, 1981) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் ஆவார். மார்வெல் திரைப் பிரபஞ்சப் படங்களான கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி[2] (2014) மற்றும் கேப்டன் மார்வெல்[3] (2019) போன்ற படங்களில் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.

நிக்கோல் பெர்ல்மன்
பிறப்புதிசம்பர் 10, 1981 (1981-12-10) (அகவை 42)[1]
போல்டர், கொலராடோ, ஐக்கிய அமெரிக்கா
படித்த கல்வி நிறுவனங்கள்நியூயார்க் பல்கலைக்கழகம்
பணிதிரைக்கதை ஆசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

பெர்ல்மேன் 10 திசம்பர் 1981 இல் கொலராடோ போல்டரில் ஒரு யூத[4][5] குடும்பத்தில் பென்னி மற்றும் மைக்கேல் பெர்ல்மன் ஆகியோருக்கு மகளாக பிறந்தார். இவர் போல்டரில் வளர்ந்து,[6] அங்கு உள்ள போல்டர் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். அதன் பிறகு நியூயார்க் பல்கலைக்கழகத்தில் கலை திரைப்படம் மற்றும் நாடகம் சார்ந்த படிப்பை படித்து 2003 இல் பட்டம் பெற்றார்.[7]

திரைப்படம் தொகு

ஆண்டு தலைப்பு எழுத்தாளர் தயாரிப்பாளர் குறிப்புகள்
2011 தோர் ஆலோசகர் இல்லை அங்கீகரிக்கப்படாதது
2014 கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி ஆம் இல்லை ஜேம்ஸ் கன் என்பவருடன் இணை எழுத்தாளராக
2017 ரைசிங் அ ருக்ஸ் ஆம் Executive குறும்படம்
2018 தி ஸ்லொவ்ஸ் ஆம் இல்லை குறும்படம்; இயக்குனர்[8]
2019 கேப்டன் மார்வெல் கதை இல்லை இணை கதை ஆசிரியராக
போகிமொன் டிடெக்ட்டிவ் பிகாச்சு கதை இல்லை இணை கதை ஆசிரியராக

மேற்கோள்கள் தொகு

  1. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் நிக்கோல் பெர்ல்மன்
  2. Strom, Mark (August 19, 2014). "Nicole Perlman Writes the Galaxy". Marvel.com. Archived from the original on August 22, 2014. பார்க்கப்பட்ட நாள் August 22, 2014.
  3. Borys Kit (April 13, 2015). "'Captain Marvel' Movie Targets 'Inside Out' and 'Guardians' Writers". The Hollywood Reporter.
  4. "Boulder Jewish Family Service Presents Reel Hope Boulder with Screenwriter Nicole Perlman". Jewish Family Service of Colorado. August 10, 2016. பார்க்கப்பட்ட நாள் March 3, 2019.
  5. David Fellows (November 6, 2016). "Reel Hope Boulder a Galactic Success For Boulder JFS". Boulder Jewish News. பார்க்கப்பட்ட நாள் March 3, 2019.
  6. "Meet The Woman Who Made History With Marvel's "Guardians Of The Galaxy"". BuzzFeed. July 30, 2014. பார்க்கப்பட்ட நாள் January 14, 2015.
  7. "Nicole Perlman". Variety. June 22, 2006. பார்க்கப்பட்ட நாள் January 14, 2015.
  8. Epstein, Sonia (23 October 2018). "Guardian's of the Galaxy's Nicole Perlman's Directorial Debut". Sloan Science & Film. பார்க்கப்பட்ட நாள் 25 October 2018.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிக்கோல்_பெர்ல்மன்&oldid=3482412" இலிருந்து மீள்விக்கப்பட்டது