சாம் ரைமி
சாம் ரைமி[1] (அக்டோபர் 23, 1959)[2] என்பவர் அமெரிக்க நாட்டு இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1972 ஆம் ஆண்டு முதல் தி ஈவில் டெட் (1981), இசுபைடர்-மேன் (2002-2007), டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் (2022) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
பிறப்பு | சாமுவேல் எம். ரைமி அக்டோபர் 23, 1959 ராயல் ஓக், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
---|---|
படித்த கல்வி நிறுவனங்கள் | மிச்சிகன் மாநிலப் பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1972–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | கில்லியன் கிரீன் (தி. 1993) |
பிள்ளைகள் | 5 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் அக்டோபர் 23, 1959 ஆம் ஆண்டில் மிச்சிகனில் உள்ள ராயல் ஓக்கில் பழமை விரும்பும் யூத குடும்பத்தில் வணிகர்களான செலியா பார்பரா மற்றும் லியோனார்ட் ரொனால்ட் ரைமி ஆகியோருக்கு மகனாக பிறந்தார்.[3] இவரது மூதாதையர்கள் ரஷ்யா மற்றும் ஹங்கேரியிலிருந்து யூத குடியேறிகள் ஆகும்.[4] இவர் நடிகர் டெட் ரைமியின் மூத்த சகோதரர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் இவான் ரைமியின் தம்பி ஆவார். இவருக்கு ஆண்ட்ரியா ரைமி ரூபின். என்ற ஒரு சகோதரியும் உண்டு.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Luke Savage (March 7, 2013). "Sam Raimi interview: Oz, Warcraft, The Shadow, Spider-Man". Den of Geek. Dennis Publishing. பார்க்கப்பட்ட நாள் January 1, 2019.
...IMDB. They've added a name to me, they've called me Samuel Marshall Raimi, and I never knew I had a middle name. I have a middle initial, 'M'.
- ↑ "Sam Raimi: Director, Producer, Screenwriter". Turner Classic Movies. Archived from the original on October 30, 2020. பார்க்கப்பட்ட நாள் November 23, 2020.
Birth Place: Royal Oak, Michigan, USA. Born: October 23, 1959
- ↑ "Sam Raimi Biography (1959-)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012. Source notes Raimi born "in Royal Oak (some sources cite Franklin), MI."
- ↑ Aushenker, Michael (April 25, 2002). "Spider-Mensch: The Jewish roots of director Sam Raimi and 'Spider-Man'". Jewish Journal. Archived from the original on December 8, 2012. பார்க்கப்பட்ட நாள் March 19, 2012.
He was raised by parents of Russian and Hungarian Jewish descent in a Conservative Jewish home that included older brother Ivan, now a screenwriter and physician; younger brother Ted, an actor, and older sister, Andrea.
- ↑ Headapohl, Jackie (March 7, 2013). "Made In Michigan". The Jewish News (Detroit, Michigan) இம் மூலத்தில் இருந்து November 1, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191101205732/https://thejewishnews.com/2013/03/07/made-in-michigan/.