லூக் கேஜ் (தொலைக்காட்சித் தொடர்)

லூக் கேஜ் (ஆங்கில மொழி: Luke Cage) என்பது நெற்ஃபிளிக்சு[2] என்ற ஓடிடி தளத்திற்காக 'சியோ ஹோடாரி கோக்கர்' என்பவர் உருவாக்கிய, அமெரிக்க நாட்டு அதிரடி கதைக்கள பின்னணியை கொண்ட மீநாயகன் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[3] இது இதே பெயரில் வெளியான மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு மார்வெல் தொலைக்காட்சி மற்றும் ஏபிசி ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

லூக் கேஜ்
வகை
உருவாக்கம்சியோ ஹோடாரி கோக்கர்
நடிப்பு
 • மைக் கோல்டர்
 • மகேர்சாலா அலி
 • சிமோன் மிசிக்
 • தியோ ரோஸி
 • எரிக் லாரே ஹார்வி
 • ரொசாரியோ டாசன்
 • ஆல்ஃப்ரே வூட்டார்ட்
 • கேப்ரியல் டென்னிஸ்
 • முஸ்தபா ஷாகிர்
 • ஜெசிகா ஹென்விக்
 • பின் ஜோன்ஸ்
 • ஸ்டீபன் ரைடர்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
பருவங்கள்2
அத்தியாயங்கள்26
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்நியூயார்க் நகரம்
ஒளிப்பதிவுமானுவல் பில்லெட்டர்[1]
ஓட்டம்44–69 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்
விநியோகம்நெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பு
அலைவரிசைநெற்ஃபிளிக்சு
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 30, 2016 (2016-09-30) –
சூன் 22, 2018 (2018-06-22)
Chronology
முன்னர்ஜெசிகா ஜோன்சு
பின்னர்அயன் பிஸ்ட்
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்

இந்த தொடரில் நடிகர் மைக் கோல்டர்[4] என்பவர் லூக் கேஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், இவர் மனிதாபிமானமற்ற வலிமை மற்றும் உடைக்க முடியாத தோல் கொண்ட முன்னாள் குற்றவாளி, இப்போது குற்றம் மற்றும் ஊழலுக்கு எதிராக போராடுகிறார். இவருடன் இணைந்து மகேர்சாலா அலி, சிமோன் மிசிக், தியோ ரோஸி, எரிக் லாரே ஹார்வி, ரொசாரியோ டாசன், ஆல்ஃப்ரே வூட்டார்ட், கேப்ரியல் டென்னிஸ், முஸ்தபா ஷாகிர், ஜெசிகா ஹென்விக், பின் ஜோன்ஸ் மற்றும் ஸ்டீபன் ரைடர் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

இந்த தொடரின் வளர்ச்சி 2013 இன் பிற்பகுதியில் தொடங்கியது. டிசம்பர் 2014 இல் மார்வெலின் ஜெசிகா ஜோன்சு[5][6] என்ற தொடரின் முதல் பருவத்தில் தோன்றுவதற்காக நடிகர் மைக் கோல்டர் என்பவர் கோல்டர் கேஜ் வேடத்தில் நடித்தார், மார்ச் 2015 இல் கோக்கர் ஷோரன்னராக பணியமர்த்தப்பட்டார்.[7] இந்தத் தொடர் நியூயார்க் நகரத்தில் படமாக்கப்பட்டது.[8]

இந்த தொடரின் முதல் பருவத்தின் அனைத்து அத்தியாயங்களும் செப்டம்பர் 30, 2016 அன்று திரையிடப்பட்டடு, அவை நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. டிசம்பர் 2016 இல், நெற்ஃபிளிக்சு லூக் கேஜை இரண்டாவது பருவத்தை புதுப்பித்து, ஜூன் 22, 2018 அன்று வெளியிடப்பட்டது. மூன்றாவது பருவத்தின் வளர்ச்சியின் போது நெற்ஃபிளிக்சு மற்றும் தொடரின் எழுத்தாளர்களுக்கு இடையே ஏற்பட்ட ஆக்கப்பூர்வமான வேறுபாடுகளைத் தொடர்ந்து, அக்டோபர் 19, 2018 அன்று நெற்ஃபிளிக்சு தொடரை ரத்து செய்தது.

தொடரின் பருவங்கள்

தொகு
பருவங்கள் ஒளிபரப்பு அத்தியாயங்கள்
1 30 செப்டம்பர் 2016 13
2 22 ஜூன் 2018 13

மேற்கோள்கள்

தொகு
 1. "10 Cinematographers to Watch 2016: Manuel Billeter". Variety. April 20, 2016. Archived from the original on April 30, 2016. பார்க்கப்பட்ட நாள் April 30, 2016.
 2. Lieberman, David (November 7, 2013). "Disney To Provide Netflix With Four Series Based On Marvel Characters". Deadline Hollywood. Archived from the original on April 8, 2014. பார்க்கப்பட்ட நாள் November 7, 2013.
 3. Kit, Zorianna; Kit, Borys (June 5, 2003). "Col locks up 'Cage' rights: Marvel character screen-bound. (News).(Brief Article)". The Hollywood Reporter. Archived from the original on November 4, 2016. பார்க்கப்பட்ட நாள் January 16, 2015 – via Highbeam Business.
 4. Woerner, Meredith (December 29, 2015). "Mike Colter, Marvel's new Luke Cage, talks about the soul of his new Netflix series". Los Angeles Times. Archived from the original on December 30, 2015. பார்க்கப்பட்ட நாள் December 30, 2015.
 5. Andreeva, Nellie (November 19, 2014). "Marvel's 'Jessica Jones': Krysten Ritter, Alexandra Daddario, Teresa Palmer, Marin Ireland, Jessica De Gouw Testing For Lead". Deadline Hollywood. Archived from the original on November 20, 2014. பார்க்கப்பட்ட நாள் November 20, 2014.
 6. Strom, Marc (December 22, 2014). "Mike Colter to Star as Luke Cage in Marvel's A.K.A. Jessica Jones". Marvel.com. Archived from the original on December 22, 2014. பார்க்கப்பட்ட நாள் December 22, 2014.
 7. Spangler, Todd (March 31, 2015). "Netflix, Marvel Pick 'Luke Cage' Showrunner, Cheo Hodari Coker". Variety. Archived from the original on March 31, 2015. பார்க்கப்பட்ட நாள் March 31, 2015.
 8. "Marvel's Netflix Series to Film in New York City". Marvel.com. February 26, 2014. Archived from the original on February 26, 2014. பார்க்கப்பட்ட நாள் February 26, 2014.

வெளி இணைப்புகள்

தொகு