பால்கன் (ஆங்கில மொழி: Falcon) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜீன் கோலன் ஆகியோரால், செப்டம்பர் 1969 இல் வெளியான கேப்டன் அமெரிக்கா #117 என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவரே வரைகதை புத்தகத்தில் தோன்றிய முதல் ஆப்பிரிக்க-அமெரிக்க மீநாயகன் ஆவார்.[1][2]

பால்கன்
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுபால்கன்:
கேப்டன் அமெரிக்கா #117 (செப்டம்பர் 1969)
கேப்டன் அமெரிக்கா:
கேப்டன் அமெரிக்கா 7 #25 (டிசம்பர் 2014 )
உருவாக்கப்பட்டதுஸ்டான் லீ
ஜீன் கோலன்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புசாமுவேல் தாமசு வில்சன்
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
ஷீல்ட்
பங்காளர்கள்கேப்டன் அமெரிக்கா
பக்கி பார்ன்சு
திறன்கள்
  • நிபுணர் பறவை பயிற்சியாளர்
  • திறமையான கைகோர்த்து போர் செய்பவர், தற்காப்புக் கலைஞர்
  • இறக்கை வழியாக பறப்பவர்
  • திறமையான தந்திரோபாயவாதி மற்றும் மூலோபாயவாதி
  • அனைத்து பறவைகளுடனும் பச்சாதாபம் மற்றும் தொலைத்தொடர்பு இணைப்பு

இந்த கதாபாத்திரம் பறக்க இயந்திர இறக்கைகளைப் பயன்படுத்துகிறார், மேலும் பறவைகள் மீது தொலைத்தொடர்பு மற்றும் பச்சாதாபக் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளார். இசுடீவ் ரோஜர்சு ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, வில்சன் என்பவர் சனவரி 2015 இல் வெளியான கேப்டன் அமெரிக்கா #1 என்ற கதையில் புதிய கேப்டன் அமெரிக்கா மற்றும் அவென்ஜர்ஸ் குழுவின் தலைவர் ஆனார்.

சாம் வில்சன் என்பவர் பால்கன் மற்றும் கேப்டன் அமெரிக்கா போன்ற வேடங்களில் பல ஊடகங்களில் தோன்றினார். இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகர் அந்தோணி மேக்கி என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), அவெஞ்சர்ஸ்: ஏஜ் ஆஃப் அல்ட்ரான் (2015), ஆன்ட்-மேன் (2015), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் என்ற டிஸ்னி+ தொடரிலும் நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Brothers, David (February 18, 2011). "A Marvel Black History Lesson Pt. 1". Marvel Senior Vice President of Publishing Tom Brevoort: "The Falcon was the very first African-American super hero, as opposed to The Black Panther, who preceded him, but wasn't American.". Marvel Comics. Archived from the original on February 23, 2011.
  2. Peter Sanderson; Gilbert, Laura, ed. (2008). "1940s". Marvel Chronicle A Year by Year History. "The Black Panther may have broken the mold as Marvel's first black superhero, but he was from Africa. The Falcon, however, was the first black American superhero". London, United Kingdom: Dorling Kindersley. பக். 137. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0756641238. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்கன்&oldid=3328313" இலிருந்து மீள்விக்கப்பட்டது