நெபுலா (வரைகதை)
நெபுலா (ஆங்கில மொழி: Nebula) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ரோஜர் ஸ்டெர்ன் மற்றும் ஜான் புஸ்செமா ஆகியோரால், ஜூலை 1985 இல் வெளியான அவென்ஜர்ஸ் #257[1] என்ற கதையில் தோற்றுவிக்கப்பட்டது. இவரின் பாத்திரம் முதலில் ஒரு சூப்பர்வில்லனாக சித்தரிக்கப்பட்டது, பின்னர் நல்லவராக கார்டியன்சு ஒப் த கலக்சியின் உறுப்பினராக சித்தரிக்கப்பட்டது.
நெபுலா | |
---|---|
வெளியீடு தகவல் | |
வெளியீட்டாளர் | மார்வெல் காமிக்சு |
முதல் தோன்றியது | அவென்ஜர்ஸ் #257 (ஜூலை 1985) |
உருவாக்கப்பட்டது | ரோஜர் ஸ்டெர்ன் ஜான் புஸ்செமா |
கதை தகவல்கள் | |
குழு இணைப்பு | கார்டியன்சு ஒப் த கலக்சி அவென்ஜர்ஸ் |
குறிப்பிடத்தக்க கூட்டாளிகள் | கேப்டன் நெபுலா பீலே |
திறன்கள் |
|
நெபுலா என்ற கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டம் உட்பட பிற ஊடகங்களில் தோன்றியுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக நடிகை கரேன் கில்லன் என்பவர் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான கார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி (2014),[2] கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி 2 (2017),[3] அவென்ஜ்ர்ஸ் : இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் 2021 இல் வெளியான வாட் இப்...? என்ற டிஸ்னி+ இயங்குபட தொடருக்கும் குரல் கொடுத்துள்ளார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan; Bray, Adam (2019). The Marvel Encyclopedia. DK Publishing. p. 254. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4654-7890-0.
- ↑ "Marvel Studios Begins Production on Guardians of the Galaxy". Marvel.com. July 20, 2013. Archived from the original on July 21, 2013. பார்க்கப்பட்ட நாள் July 20, 2013.
- ↑ Vejvoda, Jim (July 15, 2016). "Guardians of the Galaxy Vol. 2: Zoe Saldana on Gamora, Nebula And Thanos". IGN. Archived from the original on July 17, 2016. பார்க்கப்பட்ட நாள் May 1, 2021.
- ↑ Hughes, William. "Marvel just released an extremely intriguing cast list for Disney+'s animated What If…?". A.V. Club. பார்க்கப்பட்ட நாள் 21 July 2019.