கலே அன்னே கார்டு
கலே அன்னே கார்டு (Gale Anne Hurd, பிறப்பு: அக்டோபர் 25, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹல்க் (2003), டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (2003), ஹல்க் 2 (2008), போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
கலே அன்னே கார்டு | |
---|---|
பிறப்பு | அக்டோபர் 25, 1955 லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை, 1977) |
பணி | தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–இன்று வரை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇவர் அக்டோபர் 25, 1955 இல் லாஸ் லாஸ் ஏஞ்சல்ஸில் லொலிடா மற்றும் முதலீட்டாளர் ஃபிராங்க் ஈ. ஹர்ட் ஆகியோருக்கு மகளாக பிறந்தார்.[1] அவரது தந்தை யூதர் மற்றும் அவரது தாய் உரோமன் கத்தோலிக்கர் ஆவார்கள்.[2] இவர் கலிபோர்னியாவின் பாம் ஸ்பிரிங்ஸில் வளர்ந்தார் மற்றும் 1973 இல் பாம் ஸ்பிரிங்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்றார்.[3] அவர் இசுட்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் மற்றும் தகவல்தொடர்புகளில் இளங்கலை மற்றும் அரசியல் அறிவியலிலும் 1977 இல் பட்டம் பெற்றார்.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Gale Anne Hurd Biography (1955–)". Filmreference.com. பார்க்கப்பட்ட நாள் June 7, 2012.
- ↑ "Gale Anne Hurd Biography". BookRags.com. November 2, 2010. பார்க்கப்பட்ட நாள் June 7, 2012.
- ↑ Fessier, Bruce (January 10, 2018). "'Walking Dead' producer returns home to present 'Mankiller' at Palm Springs festival". The Desert Sun. https://www.desertsun.com/story/life/entertainment/movies/film-festival/2018/01/10/walking-dead-producer-returns-home-present-mankiller-palm-springs-festival/1022762001/.
- ↑ David, Mark (May 23, 2007). "Gale Anne Hurd and Jonathan Hensleigh's Pasadena Palace". Variety. https://variety.com/2007/dirt/real-estalker/gale-anne-hurd-and-jonathan-hensleighs-pasadena-palace-1201226201/.