மூன் நைட் (தொலைக்காட்சித் தொடர்)

மூன் நைட் (ஆங்கில மொழி: Moon Knight) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு அதிரடி மீநாயகன் தொலைக்காட்சி குறுந்தொடர் ஆகும். இந்த தொடர் மூன் நைட் என்ற மார்வெல் காமிக்சு கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு டிஸ்னி+[4][5] ஓடிடி தளத்திற்காக ஜெரமி இசுலேட்டர் என்பவர் உருவாக்கியுள்ளார்.

மூன் நைட்
வகை
உருவாக்கம்ஜெரமி இசுலேட்டர்
நடிப்பு
  • ஆஸ்கர் ஐசக்
  • மே காலமாவி
  • கரீம் எல் ஹகீம்
  • முர்ரே ஆபிரகாம்
  • ஈதன் ஹாக்
  • ஆன் அகின்ஜிரின்
  • டேவிட் கேன்லி
  • காலித் அப்துல்லா
  • கஸ்பார்ட் உள்ளில்
  • அந்தோனியா சாலிப்
  • பெர்னாண்டா ஆண்ட்ரேட்
  • ரெய் லூகாஸ்
  • சோபியா டானு
  • சபா முபாரக்
பிண்ணனி இசைஹெஷாம் நாஜிஹ்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
அத்தியாயங்கள்6
தயாரிப்பு
நிருவாக தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்
ஒளிப்பதிவுகிரிகோரி மிடில்டன்[3]
ஓட்டம்40–50 நிமிடங்கள்
தயாரிப்பு நிறுவனங்கள்மார்வெல் ஸ்டுடியோ
விநியோகம்டிஸ்னி இயங்குதள விநியோகம்
ஒளிபரப்பு
அலைவரிசைடிஸ்னி+
ஒளிபரப்பான காலம்மார்ச்சு 30, 2022 (2022-03-30) –
மே 4, 2022 (2022-05-04)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மார்வெல் திரைப் பிரபஞ்ச தொலைக்காட்சி தொடர்கள்
வெளியிணைப்புகள்
தயாரிப்பு இணையதளம்

இந்த தொடர் மார்வெல் ஸ்டுடியோஸ்[6] தயாரித்த மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் ஒரு பகுதி ஆகும்.[7] அத்துடன் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களின் தொடர்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறது.

நடிகர் ஆஸ்கர் ஐசக்[8][9] என்பவர் மார்க் இசுபெக்டர் மற்றும் மூன் நைட் ஆகிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடர் ஆவணி 2019 இல் அறிவிக்கப்பட்டது, கார்த்திகை மாதத்தில் ஜெரமி இசுலேட்டர் பணியமர்த்தப்பட்டார். ஐப்பசி 2020 இல் தொடரின் நான்கு அத்தியாயங்களை இயக்குவதற்கு முகமது தியாப்[10] பணியமர்த்தப்பட்டார், ஜஸ்டின் பென்சன்[11] மற்றும் ஆரோன் மூர்ஹெட் ஆகிய இருவரும் தை 2021 இல் தொடரில் இணைந்து மற்ற இரண்டு அத்தியாயங்களையும் இயக்கினர், அந்த நேரத்தில் ஐசக் நடிப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த தொடரின் படப்பிடிப்பு சித்திரை 2021 இன் பிற்பகுதியில் தொடங்கப்பட்டது.

இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் ஒரு பகுதி தொடராக 30 மார்ச் 2022 அன்று திரையிடப்பட்டது, மேலும் 4 மே அன்று ஆறு அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடர் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது, குறிப்பாக ஐசக் மற்றும் ஹாக்கின் செயல்திறன் மற்றும் முந்தைய மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நிகழ்ச்சிகளுடன் ஒப்பிடுகையில் வித்தியாசம் மற்றும் தனித்திறமை ஆகியவற்றிற்கு பாராட்டுக்கள் கிடைத்தன.

மேற்கோள்கள் தொகு

  1. Kim, Matt T.M. (February 24, 2021). "Kevin Feige Shares Updates on Ms. Marvel, Moon Knight, and More Disney Plus Series". IGN. Archived from the original on February 24, 2021. பார்க்கப்பட்ட நாள் February 24, 2021.
  2. Ritman, Alex (September 3, 2021). "How Egyptian Filmmaker Mohamed Diab Went From Cairo to Marvel (Via Palestine)". The Hollywood Reporter. Archived from the original on September 3, 2021. பார்க்கப்பட்ட நாள் September 3, 2021.
  3. Schaefer, Sandy (January 7, 2021). "Moon Knight Cinematographer Confirms Oscar Isaac's Role in the Disney+ Series". Comic Book Resources. Archived from the original on January 7, 2021. பார்க்கப்பட்ட நாள் January 7, 2021.
  4. Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. Archived from the original on November 12, 2021. பார்க்கப்பட்ட நாள் November 12, 2021.
  5. Couch, Aaron (August 23, 2019). "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'". The Hollywood Reporter. Archived from the original on August 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 23, 2019. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  6. "Marvel pacts with No Equal Duo to develop skein based on superhero Moon Knight". Variety. October 24, 2006. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  7. Hood, Cooper (April 23, 2018). "Moon Knight Is In The Future Plans For the MCU". Screen Rant. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  8. Otterson, Joe (October 26, 2020). "Oscar Isaac in Talks to Star in 'Moon Knight' Series at Disney Plus". Variety. Archived from the original on October 26, 2020. பார்க்கப்பட்ட நாள் October 26, 2020.
  9. Newby, Richard (October 26, 2020). "'Moon Knight,' Oscar Isaac and an Expanding Marvel Universe". The Hollywood Reporter. Archived from the original on October 27, 2020. பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
  10. Andreeva, Nellie; Kroll, Justin (October 27, 2020). "'Moon Knight': Mohamed Diab To Direct Marvel's Disney+ Series". Deadline Hollywood. Archived from the original on October 27, 2020. பார்க்கப்பட்ட நாள் October 27, 2020.
  11. Kit, Borys (January 8, 2021). "Marvel's 'Moon Knight': Indie Auteurs Justin Benson and Aaron Moorhead Board as Directors (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on January 8, 2021. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.

வெளிப்புற இணைப்புகள் தொகு