இசுபைடர்-மேன் 2

இசுபைடர்-மேன் 2 (Spider-Man 2) என்பது 2004 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் மார்வல் வரைகதையில் தோன்றும் கதாபாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு கொலம்பியா பிக்சர்ஸ், லாரா ஜிஸ்கின் புரொடக்ஷன்ஸ் மற்றும் மார்வெல் மகிழ்கலை ஆகியவை இணைந்து தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் என்ற நிறுவனம் விநியோகம் செய்தது.

இசுபைடர்-மேன் 2
இயக்கம்சாம் ரைமி
தயாரிப்புஅவி ஆராட்
லாரா ஜிஸ்கின்
மூலக்கதை
இசுபைடர்-மேன்
படைத்தவர்
திரைக்கதைஆல்வின் சார்ஜென்ட்
இசைடேனி எல்ப்மான்
நடிப்பு
ஒளிப்பதிவுபில் போப்
கலையகம்
விநியோகம்சோனி பிக்சர்ஸ் இரிலீசிங்
வெளியீடுசூன் 30, 2004 (2004-06-30)(வட அமெரிக்கா)
ஓட்டம்127 நிமிடங்கள்[2]
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200 மில்லியன்
மொத்த வருவாய்$789 மில்லியன்

அவி ஆராட் மற்றும் லாரா ஜிஸ்கின் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஆல்வின் சார்ஜென்ட் என்பவர் திரைக்கதை எழுத, சாம் ரைமி என்பவர் இயக்கத்தில் தோபி மக்குயர், கிர்ஸ்டன் டன்ஸ், ஜேம்ஸ் பிரான்கோ, ஆல்ஃப்ரெட் மோலினா, ரோஸ்மேரி ஹாரிஸ் மற்றும் டோனா மர்பி போன்ற பல நடித்துள்ளார்கள்.

இந்த படம் 2002 ஆம் ஆண்டு வெளியான இசுபைடர்-மேன் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாக ஜூன் 30, 2004 அன்று வெளியானது. இது பரவலான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் 789 மில்லியன் டாலர்களை வசூலித்தது, இது இந்த ஆண்டின் அதிக வசூல் செய்த மூன்றாவது படம் ஆகும். இந்த படம் 77 வது அகாதமி விருதுகளில் சிறந்த திரை வண்ணத்திற்கான அகாதமி விருதை வென்றது, மேலும் சிறந்த இசை கலவை மற்றும் சிறந்த இசை ஆகியவற்றுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது எல்லா காலத்திலும் சிறந்த மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க மீநாயகன் படங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.[3][4][5][6][7] இந்தப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இசுபைடர்-மேன் 3 என்ற படம் 2007 ஆம் ஆண்டு வெளியானது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுபைடர்-மேன்_2&oldid=3579670" இருந்து மீள்விக்கப்பட்டது