ஏஞ்சல் மானுவல் சோட்டோ

ஏஞ்சல் மானுவல் சோட்டோ (Ángel Manuel Soto, 28 சனவரி 1983) என்பவர் புவேர்ட்டோ ரிக்கோ நாட்டு திரைப்பட இயக்குநரும், திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும் ஆவார். இவர் சர்ம் சிட்டி கிங்ஸ் (2020) மற்றும் டிசி பிலிம்ஸ் திரைப்படமான புளூ பீட்டில் (2023) ஆகியவற்றை இயக்கியதற்காக அவர் மிகவும் பிரபலமானவர்.

ஏஞ்சல் மானுவல் சோட்டோ
பிறப்புசனவரி 28, 1983 (1983-01-28) (அகவை 41)
சான்டர்ஸ், சான் ஜுவான், புவேர்ட்டோ ரிக்கோ
தேசியம்போர்ட்டோ ரிக்கன்
படித்த கல்வி நிறுவனங்கள்யுனிவர்சிடாட் டெல் சாக்ராடோ கொராசோன்[1]
பணிதிரைப்பட இயக்குநர்
திரைக்கதை ஆசிரியர்
தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2009–இன்று வரை

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

இவர் புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் உள்ள சான்டர்ஸில் 1983 சனவரி 28 அன்று பிறந்தார். இவரது தந்தை கார் விற்பனையாளர், தாயார் விமானப் பணிப்பெண். இவரது இளமை பருவத்தில், கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் இசை ஆகியவற்றில் ஈடுபட்டார், இதனால் லாஸ் செவெரெஸ் என்ற இசைக்குழுவை உருவாக்கினார், இது 2000 களின் முற்பகுதியில் உருவாக்கப்பட்டது, இது அவரது பிற்கால திட்டங்களில் சிலவற்றை ஊக்கப்படுத்தியது.

இவர் வளர்ந்தவுடன், கட்டிடக்கலை, ஆவணப்படம் தயாரித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றைப் படித்தார். சோட்டோ ஒரு தொலைக்காட்சி தயாரிப்பாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கினார், பின்னர் உள்ளூர் விளம்பர நிறுவனத்தில் கலை இயக்கத்தில் பணியாற்றினார்.[2]

திரைப்படம்

தொகு
ஆண்டு தலைப்பு எழுத்தாளர் தயாரிப்பாளர் இயக்குநர் குறிப்புகள்
2012 பிரைல்ட்டி ஆம் இல்லை இல்லை
2015 லா கிரான்ஜா ஆம் ஆம் ஆம்
2016 சர்ம் சிட்டி கிங்ஸ் ஆம் இல்லை இல்லை
யூ கண்ணோட் கில் டேவிட் ஆர்குவெட் இல்லை இல்லை இல்லை கூடுதல் ஒளிப்பதிவாளர்
2023 புளூ பீட்டில் ஆம் இல்லை இல்லை

மேற்கோள்கள்

தொகு
  1. [1]
  2. González, Umberto (February 23, 2021). "'Blue Beetle': Angel Manuel Soto to Direct Film About DC Comics' Latino Superhero (Exclusive)". TheWrap.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏஞ்சல்_மானுவல்_சோட்டோ&oldid=4166840" இலிருந்து மீள்விக்கப்பட்டது