டிசி பிலிம்ஸ்

டிசி பிலிம்ஸ் (DC Films) என்பது அமெரிக்க நாட்டு திரைப்பட வளாகம் (ஸ்டுடியோ) ஆகும். இது வார்னர் புரோஸ். நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்த நிறுவனம் 17 மே 2016 ஆம் ஆண்டு முதல் வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் குழுமத்தின் மூலம் டிசி வரைகதை கதாபாத்திரங்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களை தயாரிக்கின்றது.[2] 'வால்டர் ஹமாடா' என்பவர் டிசி பிலிம்ஸின் தற்போதைய தலைவராக உள்ளார்.

டிசி பிலிம்ஸ்
வகைபிரிவு[1]
வகைமீநாயகன்
நிறுவுகைமே 17, 2016; 5 ஆண்டுகள் முன்னர் (2016-05-17)
நிறுவனர்(கள்)ஜெஃப் ஜான்ஸ்
ஜான் பெர்க்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முக்கிய நபர்கள்
  • வால்டர் ஹமாடா (தலைவர்)
தொழில்துறைதிரைப்படத்துறை
உற்பத்திகள்திரைப்படம்
தாய் நிறுவனம்வார்னர் புரோஸ். மகிழ்கலை
துணை நிறுவனங்கள்வெர்டிகோ காமிக்ஸ்
இணையத்தளம்dccomics.com/movies

வரலாறுதொகு

பேட்மேன் எதிர் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற திரைப்படத்தின் நல்ல வரவேற்புக்குப் பிறகு வார்னர் பிரதர்ஸ் பிக்சர்ஸ் டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்சம் என்ற புனைபிரபஞ்சத்தின் கீழ் படங்களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டு, இவ் நிறுவனம் 2016 மே மாதம் மறுசீரமைக்கப்பட்டது. இதனால் வார்னர் பிரதர்ஸ் கீழ் டிசி என்டர்டெயின்மென்ட் உரிமையாளர் திரைப்படங்கள் வந்தன. வார்னர் பிரதர்ஸ் நிர்வாக துணைத் தலைவர் ஜான் பெர்க் மற்றும் டிசி காமிக்ஸ் தலைமை அதிகாரிகளால் 'டிசி பிலிம்ஸ்' என்ற புதிய ஸ்டூடியோ உருவாக்கப்பட்டது. இது மார்வெல் ஸ்டுடியோவின் மார்வெல் திரைப் பிரபஞ்சத்துடன் நேரடியாக போட்டியிடும் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டது.[3]

திரைப்படங்கள்தொகு

ஆண்டு திரைப்படம் குறிப்புகள்
5 ஆகஸ்ட் 2016 சூசைட் ஸ்க்வாட்
2 ஜூன் 2017 வொண்டர் வுமன்
7 நவம்பர் 2017 ஜஸ்டிஸ் லீக்
21 டிசம்பர் 2018 ஆகுமான்
5 ஏப்ரல் 2019 ஷசாம்!
4 அக்டோபர் 2019 ஜோக்கர் இது டிசி விரிவாக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக இல்லை
7 பிப்ரவரி 2020 போர்ட்ஸ் ஒப் ப்ரெய்
25 டிசம்பர் 2020 வொண்டர் வுமன் 1984

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டிசி_பிலிம்ஸ்&oldid=3087222" இருந்து மீள்விக்கப்பட்டது