வொண்டர் வுமன்
வொண்டர் வுமன்[2] (ஆங்கில மொழி: Wonder Woman) என்பது 2017 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட், டென்சென்ட் பிக்சர்ஸ், வாண்டா பிக்சர்ஸ் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.
வொண்டர் வுமன் | |
---|---|
இயக்கம் | பாட்டி யென்கின்சு |
தயாரிப்பு | |
மூலக்கதை | டிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திம் |
திரைக்கதை | அலன் ஹெயின்பர்க் |
இசை | ரூபர்ட் கிரெக்சன்- வில்லியம்ஸ்[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | மத்தேயு ஜென்சன் |
படத்தொகுப்பு | மார்டின் வால்ஷ் |
கலையகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் டிசி பிலிம்ஸ் ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட் அட்லஸ் என்டர்டெயின்மென்ட் டென்சென்ட் பிக்சர்ஸ் வாண்டா பிக்சர்ஸ் குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ் |
விநியோகம் | வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் |
வெளியீடு | மே 15, 2017(சாங்காய்) சூன் 2, 2017 (ஐக்கிய அமெரிக்கா) |
ஓட்டம் | 141 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $120-150 மில்லியன் |
மொத்த வருவாய் | $822.3 மில்லியன் |
இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் நான்காவது திரைப்படம் ஆகும். பாட்டி யென்கின்சு என்பவரால் இயக்கிய இந்த படத்தில் கால் கடோட், கிறிஸ் பைன், ராபின் ரைட், டேனி ஹஸ்டன், டேவிட் தெவ்லிஸ், கோனி நீல்சன் மற்றும் எலெனா அனயா ஆகியோர் நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்தில் 'வொண்டர் வுமன்' என்று அழைக்கப்படும் 'டையானா' முதலாம் உலகப் போரை நிறுத்த விழைகிறார்.
1996 ஆம் ஆண்டில் இத்திரைப்படத்தினை உறுவாக்க முயற்சி துவங்கியது. இவான் ரியட்மேன் ஆல் தயாரித்து இயக்கப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளாக திரைப்படத்தின் தயாரிப்பு நிலுவையில் இருந்தது. வார்னர் புரோசால் 2010 ஆம் ஆண்டில் திரைப்படத் தயாரிப்பு துவங்கும் என்று அறிவிக்கப்பட்டது. இயக்குநர் ஜென்கின்சு 2015 இல் திரைப்படத்தினை இயக்க கொண்டுவரப்பட்டார். நவம்பர் 21, 2015 அன்று படப்பிடிப்பு துவங்கியது. ஐக்கிய அமெரிக்கா, பிரான்சு, ஐக்கிய இராச்சியம் மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மே 6, 2016 அன்று படப்பிடிப்பு முடிந்தது. கூடுதல் படப்பிடிப்பு நவம்பர் 2016 இல் நடந்தது.
வொண்டர் வுமன் படம் மே 15, 2017 அன்று சாங்காய் இல் வெளியானது. ஐக்கிய அமெரிக்காவில் சூன் 2, 2017 அன்று வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இத்திரைப்படம் நல்ல வருவாயினையும் ஈட்டியது.[3][4] இத்திரைப்படத்தின் தொடர்ச்சியாக வொண்டர் வுமன் 1984 என்ற படம் சூன் 5, 2020 அன்று வெளியானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Davis, Edward (நவம்பர் 3, 2016). "Exclusive: Stream Track From Rupert Gregson-Williams' 'Hacksaw Ridge' Score, Composer Talks 'Wonder Woman,' Mel Gibson, More". The Playlist. Archived from the original on நவம்பர் 4, 2016. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2016.
- ↑ Wade, Jessie (சூலை 21, 2018). "DC Finally Names Its Movie Brand - Comic-Con 2018". IGN. பார்க்கப்பட்ட நாள் சூலை 22, 2018.
- ↑ Williams, Trey (சூன் 24, 2017). "'Wonder Woman' passes 'Mamma Mia!' as highest-grossing film by female director". MarketWatch. Archived from the original on சூன் 23, 2017. பார்க்கப்பட்ட நாள் சூலை 5, 2017.
- ↑ "AFI Awards 2017". AFI. பார்க்கப்பட்ட நாள் திசம்பர் 8, 2017.
வெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் வொண்டர் வுமன்
- டி.சி.எம் திரைப்பட தரவுத்தளத்தில் வொண்டர் வுமன்