டெபோரா சினைடர்

டெபோரா சினைடர் (English: Deborah Snyder) (பிறப்பு: மார்ச்சு 13, 1963)[1][2] என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்குநர் சாக் சினைடர் என்பவரின் மனைவி ஆவார். இவர் திரைப்பட தயாரிப்பாளராக தனது வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கு முன்பு, நியூயார்க் விளம்பர நிறுவனமான பேக்கர் இஸ்பீல்வோகல் பேட்ஸில் பணிபுரிந்தார். இவர் 300 (2006), வாட்ச்மென் (2009), மேன் ஆப் ஸ்டீல் (2013),[3] பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக் (2017), வொண்டர் வுமன் 1984 (2020) போன்ற பல திரைப்படங்களில் தயாரிப்பாளராக பணிபுரிந்துள்ளார். அத்துடன் த இஸ்டோன் குவாரி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் உள்ளார்.

டெபோரா சினைடர்
பிறப்புடெபோரா ஜான்சன்
மார்ச்சு 13, 1963 (1963-03-13) (அகவை 62)
நியூயார்க்கு நகரம், நியூ யோர்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1990s–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்2

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

இவர் செப்டம்பர் 25, 2004 அன்று நியூயார்க்கின் மன்ஹாட்டனில் உள்ள செயின்ட் பர்த்தலோமிவ்ஸ் எபிஸ்கோபல் தேவாலயத்தில் இயக்குநர் சாக் சினைடர் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[4] இவர்கள் தற்போது கலிபோர்னியாவின் பசடேனாவில் வசிக்கின்றனர். இவர்கள் இரண்டு குழந்தைகளை ஒன்றாக தத்தெடுத்துள்ளனர், மேலும் சாக் சினைடரின் முந்தைய உறவுகளிலிருந்து ஆறு குழந்தைகளுக்கு மாற்றாந்தாய் ஆவார்.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Facts about Deborah Snyder- American film & Commercial Producer". ALL STAR BIO (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). 2020-01-02. Retrieved 2020-02-23.
  2. Louie, Elaine (October 3, 2004). "WEDDINGS/CELEBRATIONS: VOWS; Deborah Johnson and Zack Snyder - New York Times". The New York Times. Retrieved 25 July 2010.
  3. "Zack Snyder to Direct Illustrated Man - ComingSoon.net". ComingSoon.net. June 9, 2010. Archived from the original on ஜூலை 24, 2011. Retrieved July 26, 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Frank Lovece (2009-02-19). "CGI: 'Watchmen'--Zack Snyder brings superhero saga to the finish line". Film Journal International. http://www.filmjournal.com/filmjournal/content_display/news-and-features/features/movies/e3i8f6bf92e292731581559af0969092ce9?pn=2. பார்த்த நாள்: 2009-02-19. 
  5. "Zack and Deborah Snyder on the 'Cathartic Journey' of Releasing Their Justice League Cut After Daughter's Death". PEOPLE.com (in ஆங்கிலம்). Retrieved 2021-05-23.
  6. Louie, Elaine (2011-02-18). "Off Screen, a Long-Running Romance" (in en-US). The New York Times. https://www.nytimes.com/2011/02/20/fashion/weddings/20UNIONS.html. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெபோரா_சினைடர்&oldid=4160534" இலிருந்து மீள்விக்கப்பட்டது