காத்தி யான்
காத்தி யான் (ஆங்கில மொழி: Cathy Yan) என்பவர் சீனாவில் பிறந்த அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் இயக்கிய நகைச்சுவை-நாடகத் திரைப்படமான டெட் பிக்ஸ் (2018) மற்றும் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் எட்டாவது படமான பேர்ட்ஸ் ஆஃப் பிரே[1][2] (2020) ஆகியவை மூலம் அறியப்படுகிறார்.
காத்தி யான் | |
---|---|
பிறப்பு | 1986 (அகவை 38–39) சீனா |
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2010–இன்று வரை |
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுயான் சீனாவில் பிறந்து, வாசிங்டன், டி. சி.க்கு அருகிலுள்ள வடக்கு வர்ஜீனியாவில் வளர்ந்தார். இவரது குடும்பம் சீனாவில் வசிக்கும் போது, யானின் தந்தைக்கு அமெரிக்காவில் சமூகவியல் படிக்க விசா வழங்கப்பட்டது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இவரது தாயார் அமெரிக்காவிற்குச் சென்றார், மேலும் யான் தனது தாத்தா பாட்டிகளுடன் சீனாவில் வசித்து வந்தார். அதை தொடர்ந்து இவரது நான்காவது வயதில் அமெரிக்காவில் உள்ள பெற்றோருடன் மீண்டும் ஒன்று சேர்ந்து வளர்ந்து வந்தார்.
இவர் இவரது பதினான்கு வயதில் ஹாங்காங்கிற்கு குடிபெயர்ந்தார்ந்து, அங்கு உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றாள். பின்னர் இவர் நியூயார்க் பல்கலைக்கழகத்தில்பொது நிர்வாகத்தில் முதுகலை வணிக மேலாண்மையில் பட்டம் பெற்றார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Couch, Aaron (September 24, 2018). "Margot Robbie's 'Birds of Prey' Gets 2020 Release Date confirmed". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் September 24, 2018.
- ↑ Fleming, Mike Jr (17 April 2018). "Cathy Yan Is Warner Bros' Choice To Direct Margot Robbie In Next Harley Quinn Film". Deadline. https://deadline.com/2018/04/harley-quinn-margot-robbie-cathy-yan-birds-of-prey-warner-bros-dc-entertainment-bat-girl-christina-hodson-1202365866/.