வர்ஜீனியா
வர்ஜீனியா (வர்சீனியா) (Virginia, வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்டு டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் ரிச்மன்ட்; அதிக மக்கள் தொகை உடைய நகரான வர்ஜீனியா கடற்கரையும் அதிக மக்கள் தொகை உடைய கவுண்டியான பேர்வேக்சு கவுண்டியும் முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
வர்ஜீனியா பொதுநலவாயம் | |||||||||||
| |||||||||||
அதிகார மொழி(கள்) | ஆங்கிலம் | ||||||||||
தலைநகரம் | ரிச்மன்ட் | ||||||||||
பெரிய நகரம் | வர்ஜீனியா கடற்கரை | ||||||||||
பெரிய கூட்டு நகரம் | வடக்கு வர்ஜீனியா | ||||||||||
பரப்பளவு | 35வது | ||||||||||
- மொத்தம் | 42,774 சதுர மைல் (110,785 கிமீ²) | ||||||||||
- அகலம் | 200 மைல் (320 கிமீ) | ||||||||||
- நீளம் | 430 மைல் (690 கிமீ) | ||||||||||
- % நீர் | 7.4 | ||||||||||
- அகலாங்கு | 36° 32′ வ - 39° 28′ வ | ||||||||||
- நெட்டாங்கு | 75° 15′ மே - 83° 41′ மே | ||||||||||
மக்கள் தொகை | 12வது | ||||||||||
- மொத்தம் (2000) | 7,078,515 | ||||||||||
- மக்களடர்த்தி | 178.8/சதுர மைல் 69.03/கிமீ² (14வது) | ||||||||||
- சராசரி வருமானம் | $53,275 (10வது) | ||||||||||
உயரம் | |||||||||||
- உயர்ந்த புள்ளி | ராஜர்ஸ் மலை[1] 5,729 அடி (1,747 மீ) | ||||||||||
- சராசரி உயரம் | 950 அடி (290 மீ) | ||||||||||
- தாழ்ந்த புள்ளி | அட்லான்டிக் பெருங்கடல்[1] 0 அடி (0 மீ) | ||||||||||
ஒன்றியத்தில் இணைவு |
ஜூன் 25, 1788 (10வது) | ||||||||||
ஆளுனர் | பாப் மெக்டானல் (R) | ||||||||||
செனட்டர்கள் | ஜான் வார்னர் (D) | ||||||||||
நேரவலயம் | கிழக்கு: UTC-5/-4 | ||||||||||
சுருக்கங்கள் | VA US-VA | ||||||||||
இணையத்தளம் | www.virginia.gov |
அமெரிக்க உள்நாட்டுப்போரில் இம்மாநிலம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அணியின் தலைநகராக விளங்கியது.
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "Elevations and Distances in the United States". U.S Geological Survey. ஏப்ரல் 29 2005 இம் மூலத்தில் இருந்து 2008-10-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081006105354/http://egsc.usgs.gov/isb/pubs/booklets/elvadist/elvadist.html#Highest. பார்த்த நாள்: 2006-11-09.