டேவிட் ஆயர்
டேவிட் ஆயர் (ஆங்கில மொழி: David Ayer) (பிறப்பு: சனவரி 18, 1968) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்பட திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 2000 ஆம் ஆண்டு முதல் லாஸ் ஏஞ்சல்ஸை மையமாக வைத்து, கும்பல் மற்றும் காவல் ஊழலைக் கையாளும் குற்றப் படங்களைத் தயாரிப்பதில் பெயர் பெற்ற அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார்.
டேவிட் ஆயர் | |
---|---|
பிறப்பு | சனவரி 18, 1968 சாம்பெயின், இல்லினாய்ஸ், ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 2000–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | மிரேயா ஆயர் (தி. 2002) |
இவர் டிரெய்னிங் டே (2001), தி பாஸ்ட் அண்ட் தி பிரியஸ் (2001), எஸ்.டபிள்யூ.ஏ.டி. (2003) போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியராகவும், ஹார்ஷ் டைம்ஸ் (2005), சபோடேஜ் (2014) போன்ற படங்களில் இயக்குனராகவும் பணியாற்றியதன் மூலம் அறியப்படும் நபர் ஆவார். அத்துடன் இவர் 2016 ஆம் ஆண்டில் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் இருந்து சூசைட் ஸ்க்வாட்[1] என்ற மீநாயகன் படத்தை இயக்கினார், பின்னர் நெற்ஃபிளிக்சுக்காக நகர்ப்புற கற்பனை படமான 'பிரைட்' (2017)[2][3] Netflix picked up the film for a $90 million deal.[4] என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.[5] இவர் இரண்டு முறை நடிகர் சயா லபஃப் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்: முதலில் இரண்டாம் உலகப் போர் படமான ஃபியூரி (2014), பின்னர் குற்றவியல் திரில்லர் படமான 'தி டேக்ஸ் கலெக்டர்' (2020) போன்றவை ஆகும். இவர் சில திரைப்படங்களில் சிறு வேடங்களிலும் நடிகராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Fleming, Mike Jr. (April 17, 2018). "Cathy Yan Is Warner Bros' Choice To Direct Margot Robbie in Next Harley Quinn Film". Deadline Hollywood. Archived from the original on April 17, 2018. பார்க்கப்பட்ட நாள் April 17, 2018.
- ↑ Goldberg, Matt (March 2, 2016). "Will Smith and David Ayer Reteam for Bright with Joel Edgerton". Collider.
- ↑ Kroll, Justin (March 3, 2016). "Will Smith, David Ayer Reteaming on Max Landis Spec 'Bright'". Variety. https://variety.com/2016/film/news/will-smith-david-ayer-bright-suicide-squad-1201696226/.
- ↑ Goldberg, Matt (March 18, 2016). "Netflix Makes Mammoth Deal for David Ayer's 'Bright' Starring Will Smith". Collider.com.
- ↑ Fleming, Mike Jr. (January 3, 2018). "Netflix Firms 'Bright' Sequel With Will Smith". Deadline Hollywood. பார்க்கப்பட்ட நாள் January 4, 2018.