சூசைட் ஸ்க்வாட் (திரைப்படம்)

சூசைட் ஸ்க்வாட்[1] (Suicide Squad) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன்-சூப்பர்வில்லன் திரைப்படம் ஆகும். இதே பெயரில் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர்வில்லன் குழு கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் டிசி பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது.

சூசைட் ஸ்க்வாட்
இயக்கம்டேவிட் ஆயர்
தயாரிப்புசார்லஸ் ரோவன்
ரிச்சர்ட் சக்கிள்
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரங்கள்
இசைஸ்டீவன் பிரைஸ்
நடிப்புவில் சிமித்
ஜாரெட் லெடோ
மார்கோட் ரொப்பி
ஜோயல் கின்னமன்
வியோல டேவிஸ்
ஜெய் கோர்ட்னி
ஜெய் ஹெர்னாண்டெஸ்
அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே
ஐகே பாரின்ஹோல்ட்ஸ்
ஸ்காட் ஈஸ்ட்வுட்
காரா டெலிவிங்னே
ஒளிப்பதிவுரோமன் வாஸ்யனோவ்
படத்தொகுப்புஜான் கில்ராய்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
டிசி பிலிம்ஸ்
ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
அட்லஸ் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 5, 2016 (2016-08-05)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்123 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$175 மில்லியன்
மொத்த வருவாய்$746.8 மில்லியன்

இந்த படம் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் மூன்றாவது திரைப்படம் ஆகும். டேவிட் ஆயர் என்பவரால் எழுதி இயக்கிய இந்த படத்தில் வில் சிமித், ஜாரெட் லெடோ, மார்கோட் ரொப்பி, ஜோயல் கின்னமன், வியோல டேவிஸ், ஜெய் கோர்ட்னி, ஜெய் ஹெர்னாண்டெஸ், அடேவாலே அகின்னுயோ-அக்பாஜே, ஐகே பாரின்ஹோல்ட்ஸ், ஸ்காட் ஈஸ்ட்வுட் மற்றும் காரா டெலிவிங்னே ஆகியோர் நடித்துள்ளார்கள்.

பிப்ரவரி 2009 க்குள் வார்னர் புரோஸ். என்ற நிறுவனத்தின் மூலம் 'சூசைட் ஸ்க்வாட்' என்ற படம் உருவாக்குவது பற்றி டேவிட் ஆயர் உடன் திட்டமிடப்பட்டது. செப்டம்பர் 2014 இல் இப்படத்தை எழுதவும் இயக்கவும் டேவிட் ஆயர் என்பவருடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஏப்ரல் 13, 2015 அன்று ஒன்ராறியோவின் தலைநகரான ரொறன்ரோவில் முதன்மை புகைப்படம் எடுக்கப்பட்டு சிகாகோவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு அதே ஆண்டு ஆகஸ்டில் நிறைவு பெற்றது.[2]

சூசைட் ஸ்க்வாட் படம் ஆகஸ்ட் 1, 2016 அன்று நியூயார்க் நகரில் திரையிடப்பட்டது, ஆகஸ்ட் 5, 2016 அன்று ஐக்கிய அமெரிக்காவில் ரியல் 3டி, ஐமாக்ஸ் மற்றும் ஐமாக்ஸ் 3டி ஆகியவற்றில் வெளியாகி விமர்சகர்களிடமிருந்து எதிர்மறையான விமர்சனங்களைப் பெற்று வசூல் ரீதியாக வெற்றி அடைந்து உலகளவில் 746 மில்லியன் வசூல் செய்தது. இந்த படம் 2016 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய பத்தாவது படமாக அமைந்தது. இந்த படம் 89ஆவது அகாதமி விருதுகளில் சிறந்த ஒப்பனை மற்றும் சிகை அலங்காரத்திற்கான ஆஸ்கார் விருது உட்பட பல்வேறு பிரிவுகளில் இந்த படம் பரிந்துரைக்கப்பட்டு பல விருதுகளை வென்றது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முதல் அகாதமி விருது வென்ற படமாகும். இந்த திரைப்படத்தை தொடந்து 2020 ஆம் ஆண்டில் பேர்ட்ஸ் ஆஃப் பிரே என்ற படம் வெளியானது.

நடிகர்கள்தொகு

நடிப்புத் தெரிவுகள்தொகு

அக்டோபர் 2014 இல் வார்னர் புரோஸ். நிறுவனம் ரையன் காசுலிங்கு, டோம் ஹார்டி, மார்கோட் ரொப்பி மற்றும் வில் சிமித் ஆகியோர் இந்த படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை அளித்திருந்தது.[6] உடனடியாகவே டோம் ஹார்டி மற்றும் வில் சிமித்தும் நடிப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதாக அறிவிக்கப்பட்டதுட்டன், மார்கோட் ரொப்பியும் இதற்காக ட்ரீம்வொர்க்கின் 'கோஸ்ட் இன் தி ஷெல்' என்ற படத்தின் நடிப்பிலிருந்து விலகினார்.

நவம்பரில் 'திவர்ப்ப' என்ற செய்தி இணையத்தில் ஜோக்கர் என்ற கதாபாத்திரத்திற்கு ரையன் காசுலிங்கு என்பவருக்கு பதிலாக நடிகர் ஜாரெட் லெடோ என்பவரை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடப்பதாக செய்திகள் வெளியானது. நவம்பர் இறுதியில் மார்கோட் ரொப்பி என்பவர் ஹார்லி குயீன் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பார் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 2014 இல் வில் சிமித், ஸ்காட் ஈஸ்ட்வுட், காரா டெலிவிங்னே, ஜெய் கோர்ட்னி ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.[7]

மேற்கோள்கள்தொகு

  1. "Suicide Squad (2016)". British Board of Film Classification. July 26, 2016. https://www.bbfc.co.uk/releases/suicide-squad-2016*downlode. 
  2. "'Suicide Squad': First Cast Photo Revealed". Variety (April 8, 2015). மூல முகவரியிலிருந்து June 26, 2015 அன்று பரணிடப்பட்டது.
  3. Sneider, Jeff (March 31, 2015). "Adewale Akinnuoye-Agbaje to Play Killer Croc in WB's 'Suicide Squad' (Exclusive)".
  4. Kroll, Justin (December 2, 2014). "'Suicide Squad' Cast Revealed: Jared Leto to Play the Joker, Will Smith is Deadshot". Variety. மூல முகவரியிலிருந்து June 26, 2015 அன்று பரணிடப்பட்டது.
  5. Woods, John (April 9, 2015). "Adam Beach to play DC Comics villain Slipknot in new film". Winnipeg Free Press.
  6. Beedle, Tim (December 2, 2014). "Breaking News: The Suicide Squad is Cast!". DC Comics. மூல முகவரியிலிருந்து July 14, 2015 அன்று பரணிடப்பட்டது.
  7. Trumbore, Dave (July 11, 2015). "Suicide Squad Cast Reveals First Trailer At Comic-Con". மூல முகவரியிலிருந்து July 12, 2015 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு