ஜோயல் கின்னமன்

சார்லசு ஜோயல் கின்னமன் (ஆங்கில மொழி: Charles Joel Nordström Kinnaman) (பிறப்பு: 1979 நவம்பர் 25) என்பவர் சுவீடன்-அமெரிக்க நாட்டு திரைப்பட நடிகர் ஆவார். இவர் சுவிட நாட்டுத் திரைப்படமான ஈஸி மணி[1] மற்றும் ஜோகன் பால்க் என்ற குற்றத் தொடரில் நடித்ததற்காக தனக்கான ஒரு அங்கீகாரத்தை பெற்றார்.

ஜோயல் கின்னமன்
பிறப்புசார்லசு ஜோயல் கின்னமன்
25 நவம்பர் 1979 ( 1979 -11-25) (அகவை 44)
ஸ்டாக்ஹோம், சுவீடன்
பணிநடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2002–இன்று வரை
துணைவர்கெல்லி கேல் (2019)
வாழ்க்கைத்
துணை
கிளியோ வாட்டன்ஸ்ட்ரோம்
(தி. 2015; ம.மு. 2018)

இவர் 2014 ஆம் ஆண்டில் ரோபோகாப் படத்தில் அலெக்ஸ் மர்பியாகவும், டிசி காமிக்ஸ் இன் ரிக் பிளாக் என்ற வரைகதை கதாபாத்திரத்தை மையமாக கொண்டு வார்னர் புரோஸ். தயாரிப்பில், ஜேம்ஸ் கன் இயக்கத்தில் வெளியான சூசைட் ஸ்க்வாட் (2016) மற்றும் தி சூசைட் ஸ்க்வாட் (2021) போன்ற படங்களில் நடித்துள்ளார்.[2][3] அத்துடன் 2019 ஆம் ஆண்டு முதல் ஆப்பிள் டிவி+ இல் அறிவியல் புனைகதை நாடகத் தொடரான 'பார் ஆல் மேன்கைண்ட்' என்ற தொடரில் நாசா விண்வெளி வீரர் எட் பால்ட்வினாக நடித்துள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. Hägred, Per (19 January 2010). "Joel Kinnaman: 'Min revisor är i chocktillstånd'". Expressen இம் மூலத்தில் இருந்து 31 May 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100531051357/http://www.expressen.se/noje/film/1.1849828/joel-kinnaman-min-revisor-ar-i-chocktillstand. 
  2. Kroll, Justin (13 February 2015). "Joel Kinnaman eyed for Rick Flagg role in Suicide Squad". Variety.
  3. "'Suicide Squad' Update: 'RoboCop's Joel Kinnaman Cast as Rick Flagg". Screenrant. 13 February 2015.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜோயல்_கின்னமன்&oldid=3495806" இலிருந்து மீள்விக்கப்பட்டது