ரோபோகாப்
ரோபோகாப் இது 2014ம் ஆண்டு வெளியான அமெரிக்கா அறிவியல் புனைகதை அதிரடி திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தை ஜோஸ் பாடில்கா இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் 1987ல் வெளியாகி உலகம் எங்கும் வசூலை வாரிக் குவித்த ஹாலிவுட் படம் ரோபோகாப். இந்த திரைபடம் பீட்டர் வெலன், நான்சி ஆலன் நடிப்பில் பால் வேர்ஹோவேன் இயக்கியிருந்தார். 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதன் முதல் பாகத்தை ஜோஸ் பாடில்கா ரீமேக்கியுள்ளார்.
ரோபோகாப் | |
---|---|
திரையரங்கு வெளியீடு சுவரொட்டி | |
இயக்கம் | ஜோஸ் பாடில்கா |
தயாரிப்பு | மார்க் ஆபிரகாம் எரிக் நியூமன் |
இசை | பெட்ரோ ப்ரோம்ப்மன் |
நடிப்பு | ஜோயல் கின்னமன் கேரி ஓல்ட்மன் மைக்கேல் கீட்டன் சாமுவேல் எல். ஜாக்சன் ஜாக்கி இயர்ள் ஹேலி மைக்கேல் கே வில்லியம்ஸ் ஜெனிபர் எஹ்லே ஜே பருச்செல் |
ஒளிப்பதிவு | லுலா கார்வல்ஹோ |
கலையகம் | ஸ்ட்ரிகே என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | மெட்ரோ-மேயர் கொலம்பியா பிக்சர்ஸ் |
வெளியீடு | 2014-01-30 மலேசியா, சிங்கப்பூர், தைவான் 2014-02-07 ஐக்கிய இராச்சியம் 2014-02-12 அமெரிக்கா |
ஓட்டம் | 118 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய அமெரிக்கா |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $130 மில்லியன் |
மொத்த வருவாய் | $144,005,157 |
இந்த திரைப்படத்துக்கு குவாண்டம் ஆப் சோலஸ் படத்தின் திரைக்கதையாசிரியர் ஜோஷ்வா ஸ்டர்நர் கதை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரோபோகாப்பாக அலெக்ஸ் மர்பி மற்றும் ஹீரோயினாக அப்பி கார்னிஷ் நடித்துள்ளார்கள்.
வெளியீடு
தொகுஇந்த திரைப்படம் ஜனவரி 30ம் திகதி மலேசியா, சிங்கப்பூர், மற்றும் தைவான் நாடுகளிலும் பிப்ரவரி 7ம் திகதி ஐக்கிய இராச்சியம் மற்றும் பிப்ரவரி 12ம் திகதி அமெரிக்கா வில் வெளியானது.
நடிகர்கள்
தொகு- ஜோயல் கின்னமன்
- கேரி ஓல்ட்மன்
- மைக்கேல் கீட்டன்
- சாமுவேல் எல். ஜாக்சன்
- ஜாக்கி இயர்ள் ஹேலி
- மைக்கேல் கே வில்லியம்ஸ்
- ஜெனிபர் எஹ்லே
- ஜே பருச்செல்
இசை மற்றும் ஒளிப்பதிவு
தொகுஇந்த திரைப்படத்துக்கு பெட்ரோ ப்ரோம்ப்மேன் இசை அமைத்துள்ளார் மற்றும் லூலா கார்வல்கோவின் ஒளிப்பதிவு செய்துள்ளார்.