மார்கோட் ரொப்பி

மார்கோட் எலிசு ரொப்பி (ஆங்கில மொழி: Margot Elise Robbie) (பிறப்பு: 2 சூலை 1990) என்பவர் ஆத்திரேலிய நாட்டு நடிகை மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் இரண்டு அகாதமி விருதுகள், மூன்று கோல்டன் குளோப் விருதுகள் மற்றும் ஐந்து பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகள் உட்பட பல பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். இவரை 2017 ஆம் ஆண்டில் டைம் என்ற இதழ் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 100 நபர்களில் ஒருவராக பட்டியலிட்டுள்ளது. மேலும் 2019 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகத் தரப்படுத்தப்பட்டார்.

மார்கோட் ரொப்பி
பிறப்புமார்கோட் எலிசு ரொப்பி
2 சூலை 1990 (1990-07-02) (அகவை 33)
கோல்ட் கோஸ்ட், குயின்ஸ்லாந்து
ஆஸ்திரேலியா
பணிநடிகை, திரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2007–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
டாம் அக்கர்லி (தி. 2016)

குயின்ஸ்லாந்தில் பிறந்து வளர்ந்த இவர் நெய்பர்ஸ் (2008-2011[1], 2022) மற்றும் பான் ஆம் (2011-2012)[2][3] போன்ற தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது நடிப்புத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார். இவரது திருப்புமுனை 2013 ஆம் ஆண்டில் வெளியான கருப்பு நகைச்சுவைத் திரைப்படமான 'தி வோல்ப் ஆஃப் வால் இசுட்ரீட்' என்ற படம் ஆகும். அதை தொடர்ந்து தி லெஜண்ட் ஆஃப் டார்சானில் (2016) ஜேன் போர்ட்டர் என்ற கதாபாத்திரத்திலும் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்ச படங்களான சூசைட் ஸ்க்வாட் (2016), பேர்ட்ஸ் ஆஃப் பிரே[4][5][6][7] (2020) மற்றும் தி சூசைட் ஸ்க்வாட் (2021) ஆகியவற்றில் கார்லி குயின் ஆகவும் நடித்ததன் மூலம் இவர் மிகவும் அறியப்படும் நடிகை ஆனார். இவர் நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியாகிய ஐ, டோன்யா என்கிற சுயசரிதை திரைப்படம் இவருக்கு சிறந்த நடிகைக்கான அகாதமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் டாம் அக்கர்லி என்பவரை 2016 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் லக்கிசாப் என்டர்டெயின்மென்ட்டு என்ற தயாரிப்பு நிறுவனதில் இணை நிறுவனர்களாக உள்ளனர். இதன் கீழ் அவர்கள் ப்ராமிசிங் யங் வுமன் (2020), அத்துடன் தொலைக்காட்சித் தொடரான டால்பேஸ் (2019–2022) மற்றும் குறும் தொடரான மெயிட் (2021) உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Donna Freedman". Holy Soap. Channel 5. Archived from the original on 30 June 2009. பார்க்கப்பட்ட நாள் 27 September 2010.
  2. Andreeva, Nellie (10 February 2011). "'Law & Order: Criminal Intent' Gets New Captain, 'Pan Am' Gets First Stewardess". Deadline Hollywood. Mail.com Media. Archived from the original on 13 February 2011. பார்க்கப்பட்ட நாள் 12 February 2011.
  3. Bryne, Fiona (26 May 2012). "Margot Robbie still on high despite show's axing". Herald Sun இம் மூலத்தில் இருந்து 31 May 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140531081326/http://www.heraldsun.com.au/ipad/margot-robbie-still-on-high-despite-shows-axing/story-fn6bn80a-1226367396218. 
  4. Aurthur, Kate (8 January 2020). "Margot Robbie on 'Birds of Prey' and Why It's Different From 'Joker'". Variety. பார்க்கப்பட்ட நாள் 23 April 2021.
  5. Holub, Christian (5 February 2020). "Birds of Prey: Here's what movie critics are saying". Entertainment Weekly. Archived from the original on 9 February 2021. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  6. Fuge, Jon (6 February 2020). "Birds of Prey Wins Big Praise from Critics, But Will Audiences Feel the Same?". MovieWeb. Archived from the original on 4 December 2020. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.
  7. Trepany, Charles (29 January 2020). "'Birds of Prey' reviews praise Margot Robbie as Harley Quinn". USA Today. Archived from the original on 13 February 2020. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கோட்_ரொப்பி&oldid=3495071" இலிருந்து மீள்விக்கப்பட்டது