ஷசாம்! (திரைப்படம்)

ஷசாம்! (Shazam!) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இந்த படம் டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய கேப்டன் மார்வெல் என்று அழைக்கப்படும் ஷசாம் என்ற அதிசக்திவாய்ந்த கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு நியூ லைன் சினிமா, டிசி பிலிம்ஸ், தி சப்ரான் கம்பெனி, செவென் பக்ஸ் புரொடக்சன்ஸ் மற்றும் மேட் கோஸ்ட் புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தயாரிக்க வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் ஏழாவது திரைப்படம் ஆகும்.

ஷசாம்!
இயக்கம்டேவிட் எஃப் சான்ட்பெர்க்
தயாரிப்புபீட்டர் சப்ரன்
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரம்
திரைக்கதைஹென்றி கேடன்
இசைபெஞ்சமின் வால்ஃபிஷ்
நடிப்பு
ஒளிப்பதிவுமேக்ஸிம் அலெக்சாண்ரே
படத்தொகுப்புமைக்கேல் அல்லர்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 15, 2019 (2019-03-15)(தொராண்டோ)
ஏப்ரல் 5, 2019 (அமெரிக்கா)
ஓட்டம்132 நிமிடங்கள்[2]
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$80–100 மில்லியன்[3]
மொத்த வருவாய்$366 மில்லியன்[4]

பீட்டர் சப்ரன் என்பவர் தயாரிக்கும் இந்த படத்தை என்பவர் 'டேவிட் எஃப் சான்ட்பெர்க்' இயக்க, சாச்சரி லீவி, மார்க் ஸ்ட்ரோங், ஆஷெர் ஏஞ்சல், ஜேக் டிலான் கிரேஸர் மற்றும் திஜிமோன் கவுன்சோ போன்ற பலர் நடித்துள்ளார்கள். சிறுவயதில் பெற்றோரால் கைவிடப்படும் பில்லி, தந்தையால் வெறுக்கப்படும் வில்லன் இருவருக்கும் இடையே நடக்கும் சண்டை தான் இப்படத்தின் கதை. அதில் மாந்திரீகம், பாசம், நகைச்சுவை சண்டை என அனைத்தும் கலந்த கலவையாக ஷசாமை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் டேவிட் எஃப் சான்ட்பெர்க்.

ஷசாம்! படம் 5 ஏப்ரல் 2019 அன்று ரியல்டி 3 டி, டால்பி சினிமா, ஐமாக்ஸ், 4டி எக்ஸ் மற்றும் ஸ்கிரீன்எக்ஸ் ஆகியவற்றில் வெளியிடப்பட்டது. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்று உலகளவில் 366 மில்லியன் வசூல் செய்தது. இந்த படத்தின் தொடர்சியாக ஷசாம்! 2 என்ற படம் 2013 ஆம் ஆண்டு வெளியாகவுள்ளது.

கதைச் சுருக்கம்தொகு

மாந்திரீக உலகத்தின் கடைசி மந்திரவாதி 7 தீய சக்திகளை அடக்கி அதனை காத்து வருகிறார். தனது வயது முதிர்ச்சியின் காரணமாக அந்த தீய சக்திகளை பாதுகாக்க நல்ல எண்ணமுள்ள சாம்பியன் ஒருவனை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். பலரை சோதனைக்கு உட்படுத்தியும் சோதனையில் எவரும் தேர்ந்து எடுக்க முடியவில்லை. முதியவரான ஷாசாமின் சக்தியை அபகரிக்க துடிக்கும் ஒரு தீயசக்தி. ஒரு கட்டத்தில் தீய சக்திகளை கட்டுப்படுத்த வேறு வழியில்லாமல் பரீட்சை ஏதுமின்றி பில்லி என்ற சிறுவன் ஒருவனை சாம்பியனாக தேர்ந்தெடுக்கிறார். அவர் ஷசாம் என்று அழைக்கப்படுகிறார். கடைசியில், ஷசாமுக்கும், தீய சக்திகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்னவானது என்பதே ஷசாமின் கதை.

கதை:தொகு

1974 ல் தெட்டஸ் சிவானா காரில் சகோதரர் மற்றும் தந்தையுடன் பயணிக்கும்போது ஷசாம் என்ற பழங்கால மாயத்துறவியின் மாய சக்திகளின் கோயிலுக்கு கொண்டுவரப்படுகிறார். ஷசாம் அவருடைய சக்திகளை சிவானாவுக்கு கொடுக்க நினைக்கும்போது சிவானா மன்னிக்கமுடியாத 7 பாவங்களின் உருவகமான சிலைகளில் மறைந்துள்ள அரக்கர்களால் வயப்பட்டு பேராசைப்படுகிறார். இதனால் மாயத்துறவி சிவானாவை நிராகரித்து அனுப்புகிறார். சிவானா செல்லும் கார் விபத்துக்குள்ளாகிறது.

நிகழ்காலத்தில் ஆதரவற்ற குழந்தைகளின் காப்பகத்தில் வளர்க்கப்பட்ட பதினான்கு வயது நிரம்பிய பில்லி பேட்சன் விக்டருடைய குடும்பத்தால் தத்தெடுக்கப்படுகிறார் , ஆனால் பேட்சன் 10 வருடங்களுக்கு முன்னால் நடந்த கார்னிவல் விழாவில் அவருடைய சிறுவயதில் தொலைந்துபோன அவருடைய அம்மாவை இப்போதும் தேடிக்கொண்டு இருக்கிறார்.  அவருடைய புதிய குடும்பத்தில் வளர்ப்பு சகோதரர்கள் மற்றும் சகோதரிகளை அதிகமாக நேசிக்கவில்லை. பள்ளியில் சில முரட்டுத்தனமான மாணவர்களிடமிருந்து சகோதரர்களை காப்பாற்றும் முயற்சியில் பேட்சன் அந்த மாணவர்களால் துரத்தப்படுகிறார். ஒரு தொடர்வண்டியில் ஏறுகிறார். சில நிமிடங்களில் மாயத்துறவியின் கோயிலுக்கு கொண்டுவரப்படும் பில்லி பேட்சனிடம் துறவி ஷசாம் அவருடைய சக்திகளை கொடுத்துவிட்டு மறைகிறார்.

மாய சக்திகளால் வளர்ந்த மற்றும் சக்திவாய்ந்த கதாநாயகராக மாறும் பேட்சன் மின்னல் சக்திகளால் தெருக்களில் விளையாடுவதும் மக்களுக்கு கையழுத்து போடுவதுமான சின்ன சின்ன விஷயங்களை செய்துகொண்டு இருக்கிறார். இப்போது வளர்ந்த சிவானா பெருமுயற்சிக்கு பின்னால் மறைக்கப்பட்ட கோயிலை கண்டறிந்து அரக்கர்களை விடுதலை செய்கிறார் ஆனால் கொடிய எண்ணமுள்ள சக்திவாய்ந்த அரக்க தலைவராக மாறுகிறார். பேட்சனின் சகோதரர்களை கண்டறிந்து அவருடைய ஷசாம் சக்திகளை அடைய முயற்சிக்கிறார்.

பேட்சன் அவருடைய அம்மா தற்போது வசிக்கும் முகவரியை புதிய சகோதரனின் உதவியுடன் கண்டறிந்து அவரிடம் சென்று பேசுகிறார். ஆனால் அவருடைய அம்மா பேட்சனின் பாதுகாப்புக்காக அவரை காவல்துறையினரிடம் விட்டுச்சென்றதை சொல்கிறார். இதனால் மனமுடைந்து போகிறார். பேட்சன்/ ஷசாம் ன் தகவல்களை சேகரித்த சிவானா மற்றும் அரக்கர்கள் அவருடைய சகோதரர்களை பயமுறுத்தி பேட்சனை அவருடைய சக்திகளை சிவானாவுக்கு கொடுக்கவேண்டுமென்று அச்சுறுத்துகின்றார். சிவானாவாலும் அரக்கர்களாலும் துரத்தப்படும் பேட்சன் மற்றும் சகோதர்களின் பெருமுயற்சிகளுக்கு பின்னால் கடைசியில் பேட்சன் அவருடைய சக்திகளை மற்ற சகோதர சகோதரிகளுக்கு கொடுக்கிறார். சகோதரர்கள் சக்திவாய்ந்த கதாநாயகர்களாக மாற்றம் அடைந்து மன்னிக்கமுடியாத பாவங்களின் அரக்கர்களை தோற்கடித்து சிவானாவை தோற்கடிக்கின்றனர். பேட்சன் இப்போது அவருடைய புதிய இல்லத்தில் வளர்ப்பு பெற்றோருடனும் மற்றும் சகோதரர்களுடனும் நலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார். கதை முடிகிறது.

நடிகர்கள்தொகு

 • ஆஷெர் ஏஞ்சல் - வில்லியம் "பில்லி" பேட்சன் / ('சிறுவன்')
 • சாச்சரி லீவி - வில்லியம் "பில்லி" பேட்சன் / ('ஷசாம் கதாபாத்திரம்')[5]
 • மார்க் ஸ்ட்ரோங் - டாக்டர் சிவனா
 • ஜேக் டிலான் கிரேஸர் - பிரடெரிக் "ஃப்ரெடி" ஃப்ரீமேன், சிறுவன் வில்லியம் "பில்லி" பேட்சனின் நண்பன்
 • திஜிமோன் கவுன்சோ - பழைய/முந்திய, ஷசாம்
 • ஃபெய்தே ஹெர்மன் - டெய்லா டட்லி
 • கிரேஸ் ஃபுல்டன் - மேரி ப்ரோம்ஃபீல்டு
 • இயன் சென் - யூஜின் சோய்

மேற்கோள்கள்தொகு

 1. "Film - Mad Ghost Productions". Mad Ghost Productions (சூன் 11, 2018). மூல முகவரியிலிருந்து சூன் 14, 2018 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் சூன் 12, 2018.
 2. "Shazam! (12A)". British Board of Film Classification. மூல முகவரியிலிருந்து 2019-04-01 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் மார்ச்சு 25, 2019.
 3. Fuster, Jeremy (ஏப்ரல் 7, 2019). "‘Shazam!’ Surges to $53 Million Box Office Opening". பார்த்த நாள் ஏப்ரல் 20, 2019.
 4. "Shazam! (2019)". பாக்சு ஆபிசு மோசோ. பார்த்த நாள் மே 3, 2019.
 5. "திரை விமர்சனம் - Shazam!". இந்து தமிழ். 5 ஏப்ரல் 2019. https://www.hindutamil.in/amp/news/cinema/hollywood/161307-shazam.html. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷசாம்!_(திரைப்படம்)&oldid=3314489" இருந்து மீள்விக்கப்பட்டது