பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்

பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[3] (ஆங்கில மொழி: Batman v Superman: Dawn of Justice) என்பது 2016 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய பேட்மேன் மற்றும் சூப்பர் மேன் ஆகிய கதாபாத்திரங்களை மையமாகக் கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், டிசி என்டர்டெயின்மென்ட், ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட், அட்லஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரிக்க, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் விநியோகிக்கப்பட்டது. இந்த படம் 2013 ஆம் ஆண்டு வெளியான மேன் ஆஃப் ஸ்டீல்[4][5] என்ற திரைப்படத்தின் தொடர்சியாகவும் மற்றும் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் இரண்டாவது திரைப்படமும் ஆகும்.

பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்
இயக்கம்சாக் சினைடர்[1]
தயாரிப்புசார்லஸ் ரோவன்
டெபோரா சினைடர்
மூலக்கதைடிசி காமிக்ஸ்சில் தோன்றும் கதாபாத்திரங்கள்
திரைக்கதைகிறிஸ் டெரியோ
டேவிட் எஸ். கோயர்
இசைஹான்ஸ் சிம்மர்[2]
ஜன்கி எக்ஸ்எல்
நடிப்பு
ஒளிப்பதிவுலாரி ஃபாங்
படத்தொகுப்புடேவிட் ப்ரென்னர்
கலையகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
டிசி என்டர்டெயின்மென்ட்
ராட்பேக்-டூன் என்டர்டெயின்மென்ட்
அட்லஸ் என்டர்டெயின்மென்ட்
குருவல் அண்ட் அன்யுசுவல் பிலிம்ஸ்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுமார்ச்சு 25, 2016 (2016-03-25)(ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்152 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$250–300
மொத்த வருவாய்$873.6 மில்லியன்

சாக் சினைடர் இயக்கத்தில் கிறிஸ் டெரியோ மற்றும் டேவிட் எஸ். கோயர் திரைக்கதையில் வெளியான இப்படத்தில் பென் அஃப்லெக், ஹென்றி கவில், ஏமி ஆடம்சு, ஜெசி ஐசன்பெர்க், டையான் லேன், லாரன்ஸ் பிஷ்பர்ன், ஜெர்மி அயர்ன்ஸ், ஹாலி ஹன்டர் மற்றும் கால் கடோட் ஆகியோர் நடித்துள்ளனர். இது பேட்மேன் மற்றும் சூப்பர் மேன் கதாப்பாத்திரங்கள் ஒன்றாக திரையில் தோன்றும் (அசைவூட்டத் திரைப்படம் அல்லாத) முதல் திரைப்படம் இதுவாகும்.

பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் படம் 25 மார்ச் 2016 ஆம் ஆண்டு 2டி மற்றும் 3டியில் வெளியானது. இந்த படமானது முதல் வாரத்தில் பல சாதனைகளை படைத்து ஒரு வலுவான அறிமுகத்தை கொடுத்தாலும் இதன் இரண்டாவது வார இறுதியில் வரலாற்று சரிவை சந்தித்தது. இப்படம் தயாரிப்பு ரீதியாக லாபத்தை கொடுத்தாலும் வசூல் ரீதியாக ஏமாற்றமாகக் கருதப்பட்டது. இந்த படத்தின் தொடர்சியாக ஜஸ்டிஸ் லீக் என்ற படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது.

நடிகர்கள்

தொகு
  • பென் அஃப்லெக்[6][7][8] - புரூஸ் வெய்ன் / பேட்மேன்
    • பிரபலமான பணக்கார தொழிலதிபர் ஆவார். கெளதம் நகரில் நடக்கும் குற்றங்களை பேட்மேன் என்ற பெயரில் தடுத்து வருகின்றார்.
  • ஹென்றி கவில் - கிளார்க் கென்ட் / சூப்பர்மேன்
    • தனது பெற்றோரால் கிரிப்புரன் எனும் கிரகத்தின் அழிவினின்று தப்பிக்கப் பூமிக்கு அனுப்பி வைக்கப்படும் ஒரு வேற்றுகிரகவாசி. சாதாரண மக்களின் மத்தியில் கிளார்க் கென்ட் என்ற பெயரில் வாழ்த்து வருகின்றார். இவர் "டெய்லி பிளானெட்" என்ற நாளிதளின் நிருபராகவும் தனது மீநாயகன் சக்தியால் "மெட்ரோபொலிஸ்" நகரின் பாதுகாவலனாகவும் உள்ளார்.
  • ஏமி ஆடம்சு - லோயிஸ் லேன்
    • "டெய்லி பிளானெட்" என்ற நாளிதளில் பணிபுரியும் நிருபர். குற்றங்கள் நடந்த இடத்திற்கு சென்று தகவல்களை சேமிக்கும் திறன் கொண்டவள் மற்றும் கிளார்க் கென்டின் காதலி.
  • ஜெசி ஐசன்பெர்க் - லெக்ஸ் லூதர்
    • ஒரு விசித்திரமான இளம் தொழிலதிபர் மற்றும் லெக்ஸ் கார்ப் நிறுவனத்தின் பரம்பரை தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். அறிவாற்றல், செல்வம், பதவி யாவும் கொண்டிருப்பதால் பூவுலகில் சூப்பர்மேனை தோற்கடிப்பதில் வெறி கொண்டவன்.
  • டையான் லேன் - மார்த்தா கென்ட்
    • கிளார்க்கின் வளர்ப்பு தாய். மகன் மீது அளவற்ற பாசம் கொண்டவர்.
  • லாரன்ஸ் பிஷ்பர்ன் - பெர்ரி வைட்
    • "டெய்லி பிளானெட்" நாளிதளின் தலைமை ஆசிரியர் மற்றும் கிளார்க் மற்றும் லோயிஸின் முதலாளி.
  • ஜெர்மி அயர்ன்ஸ் - ஆல்பிரட் பென்னிவொர்த்
    • புரூஸ் வெய்னின் நம்பிக்கைக்குரிய நண்பரும், உதவியாளரும், பாதுகாப்புத் தலைவரும், வழிகாட்டியுமாவார்.
  • ஹாலி ஹன்டர் - ஜூன் பிஞ்ச்
    • சூப்பர்மேன் மற்றும் அவரது நடவடிக்கைகள் குறித்த அரசியல் வாதத்திற்கு தலைமை தாங்கும் கென்டகியைச் சேர்ந்த அமெரிக்க செனட்டர்.
  • கால் கடோட்[9] - டயானா பிரின்ஸ்
    • அமேசானிய நாட்டு இளவரசியும் ஒரு அழியாத அமேசானிய போர்வீரங்கனையும் ஆவார்.
  • ஸ்கூட் மெக்னரி - வாலஸ் கீஃப்
    • வெய்ன் எண்டர்பிரைசஸின் ஒரு ஊனமுற்ற ஊழியர்.
  • காலன் முல்வி - அனடோலி கன்யாசேவ்
    • லூதருக்கு வேலை செய்யும் ரஷ்ய பயங்கரவாதி.
  • தாவோ ஒகமோட்டோ - மெர்சி கிரேவ்ஸ்
    • லெக்ஸ் லூதோரின் உதவியாளரான

தயாரிப்பு

தொகு

"...மேன் ஆஃப் ஸ்டீல் என்ற திரைப்படத்தின் வேலைகள் முடிவடைந்தபிறகு நாங்கள் அடுத்த படம் பற்றிப் பேசுகையில், நான் சூப்பர்மேன் பேட்மேனை எதிர்கொள்வது போன்ற கதையமைப்பு நன்றாக இருக்குமென்று கூறினேன்...நீங்கள் ஒரு ஆலோசனைக் கூட்டத்தில் இருக்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் "சாடு"இன் (Zod) வலிமைக்கு நிகரான ஆனால் பூமியைச்சேர்ந்த ஒருவர் சூப்பர்மேனை எதிர்கொள்ளவேண்டுமாயின், யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?...ஆனால் பேட்மேனைக் கொண்டுவருவதற்காக மேன் ஒஃப் ஸ்டீலை நான் நாசப்படுத்தவில்லை. எனினும் யோசித்துப் பார்க்கையில், சூப்பர்மேனை எதிர்க்க பேட்மேனைத் திரைக்குக் கொண்டுவருவது இன்றியமையாததாகிறது."

பேட்மேன் இப்படத்தில் தோன்றுவது பற்றி சாக்கு சினைடர் கூறியது.

வார்னர் புரோஸ். நிறுவனத்தின் கண்காணிப்பின் கீழ் ஜூன் 2013 இல் இயக்குநர் சாக் சினைடரும் திரைக்கதை எழுத்தாளர் கிறிஸ் டெரியோ மற்றும் டேவிட் எஸ். கோயர் ஆகியோர் அடுத்த பாகத்தை உருவாக்கும் பணிக்குத் திரும்புவதாக அறிவிக்கப்பட்டதுடன் திரைப்படமானது 2014 இல் வெளிவருவதாகக் கருதப்பட்டது. சூலை 2013 இல் சேன் டியாகோ காமிக் கான்-இல் படம் 2015 இல் வருவதாகவும், பேட்மேன் மற்றும் சூப்பர் மேனின் முதல் திரைச்சந்திப்பாக இது இருக்குமெனவும் சினைடர் உறுதிப்படுத்தினார். கிறிசுதோபர் நோலன் நிர்வாகத் தயாரிப்பாளராக இருப்பதுடன், சினைடர் மற்றும் கோயர் இருவரும் சேர்ந்து படத்தின் கதையை எழுதுகின்றனர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Castillo, Monica (February 20, 2015). "'Batman Vs. Superman' Director Zack Snyder Releases First Look At Jason Momoa's Aquaman Suit". International Business Times. பார்க்கப்பட்ட நாள் February 26, 2015.
  2. Reynolds, Simon (April 15, 2014). "Exclusive: Hans Zimmer poised to return for Batman vs Superman score". Digital Spy. பார்க்கப்பட்ட நாள் April 15, 2014.
  3. Kroll, Justin (May 21, 2014). "Batman-Superman Titled 'Batman V Superman: Dawn of Justice'". Variety. பார்க்கப்பட்ட நாள் November 3, 2014.
  4. Finke, Nikki (June 10, 2013). "'Man Of Steel' Sequel Underway With Zack Snyder And David S. Goyer". https://deadline.com/2013/06/man-of-steel-sequel-underway-with-zack-snyder-and-david-s-goyer-517621/. 
  5. Murphy, Shaunna (April 22, 2015). "Henry Cavill Tells Us Why 'Dawn Of Justice' Is Not 'A Superman Sequel'". MTV News. MTV. பார்க்கப்பட்ட நாள் April 28, 2015.
  6. DC Comics(August 22, 2013). "Ben Affleck Revealed As Batman in Warner Bros. Picture' New Super Hero Feature Film, Now Slated to Open July 17, 2015". செய்திக் குறிப்பு.
  7. Sciretta, Peter (November 2, 2006). "Ben Affleck says No to Daredevil sequel". /Film. Archived from the original on August 11, 2008. பார்க்கப்பட்ட நாள் July 15, 2008.
  8. Goldblatt, Daniel (October 25, 2013). "Ben Affleck: 'Initially, I Was Reluctant' to Play Batman". Variety. பார்க்கப்பட்ட நாள் May 22, 2014.
  9. Malkin, Marc (March 31, 2014). "Wonder Woman's Hot Body: Gal Gadot Reveals How She Stays in Superhero Shape". E!. பார்க்கப்பட்ட நாள் May 24, 2014.

வெளி இணைப்புகள்

தொகு