ஜெசி ஐசன்பெர்க்

ஜெசி ஆடம் ஐசன்பெர்க் (ஆங்கில மொழி: Jesse Adam Eisenberg) (பிறப்பு: அக்டோபர் 5, 1983) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், எழுத்தாளர், திரைப்பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் சிறந்த நடிகருக்கான பாப்தா, கோல்டன் குளோப் விருதுகள், மற்றும் அகாதமி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டார். அத்துடன் 2010 ஆம் ஆண்டில் த சோசியல் நெட்வொர்க் என்ற திரைப்படத்தில் முகநூல் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் ஆக நடித்ததற்கு புகழ் பெற்றார்.

ஜெசி ஐசன்பெர்க்
பிறப்புஜெசி ஆடம் ஐசன்பெர்க்[1]
அக்டோபர் 5, 1983 (1983-10-05) (அகவை 41)
குயின்சு, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
1996–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
ஆன்னா சிடிரவுட் (தி. 2017)
பிள்ளைகள்1
உறவினர்கள்ஹேல்லி ஐசன்பெர்க் (தங்கை)

இவர் அசைவூட்டத் திரைப்படங்களான ரியோ (2011) மற்றும் ரியோ 2 (2014) ஆகியவற்றில் குரல் கொடுத்து நடித்துள்ளார். அதை தொடர்ந்து நௌ யூ ஸீ மீ (2013), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[2][3] (2016) மற்றும் ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. "The New York Times Theatre Reviews 1999-2000 - New York Times Theater Reviews - Google Books". Books.google.ca. பார்க்கப்பட்ட நாள் 2020-04-07.
  2. McNary, Dave (January 31, 2014). "Jesse Eisenberg Cast As Lex Luthor in 'Superman/Batman,' Jeremy Irons Set as Alfred". Variety. Archived from the original on March 23, 2015.
  3. "Lex Luthor Jr.: Not Just His Father's LexCorp". Fortune. Archived from the original on அக்டோபர் 6, 2015. பார்க்கப்பட்ட நாள் October 6, 2015.

வெளிப்புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெசி_ஐசன்பெர்க்&oldid=4160280" இலிருந்து மீள்விக்கப்பட்டது