பென் அஃப்லெக்
பெஞ்சமின் கெசா அஃப்லெக்-போல்ட் (ஆங்கில மொழி: Benjamin Géza Affleck-Boldt) (பிறப்பு: ஆகத்து 15, 1972) என்பவர் அமெரிக்க நாட்டு நடிகர், திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் தனது நடிப்புத்திறன் மூலம் இதுவரையில் இரண்டு அகாதமி விருதுகள் மற்றும் மூன்று கோல்டன் குளோப் விருதுகளை.வென்றுள்ளார்.
பென் அஃப்லெக் | |
---|---|
பிறப்பு | பெஞ்சமின் கெசா அஃப்லெக்-போல்ட் ஆகத்து 15, 1972 பெர்க்லி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
பணி | |
செயற்பாட்டுக் காலம் | 1981–இன்று வரை |
வாழ்க்கைத் துணை | ஜெனிபர் கார்னர் (தி. 2005; ம.மு. 2018) |
பிள்ளைகள் | 3 |
உறவினர்கள் | கேசி அஃப்லெக் (சகோதரர்) |
இவர் 1984 மற்றும் 1988 இல் ஒளிபரப்பான 'வோயேஜ் ஆஃப் தி மிமி' என்ற கல்வித் தொடரில் குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பு வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் மல்ராட்ஸ் (1995), சேசிங் ஆமி (1997) மற்றும் டாக்மா (1999) உள்ளிட்ட பல்வேறு கெவின் சிமித் படங்களில் தோன்றினார். அதை தொடர்ந்து 1997 இல் 'குட் வில் ஹண்டிங்' என்ற படத்துக்காக திரைக்கதை எழுதியதற்காக சிறந்த அசல் திரைக்கதைக்கான கோல்டன் குளோப் விருது மற்றும் அகாதமி விருதையும் இவரும் மற்றும் இவரது சிறுவயது நண்பர் மற்றும் நடிகர் மேட் டாமனும் வென்றபோது சிறந்த திரைக்கதையாளர் என்ற அங்கீகாரத்தைப் பெற்றார்.
இவர் 2010 களில் தி டவுன் (2010) என்ற குற்ற நாடகத்தை இயக்கி, இணைந்து எழுதியுள்ளார் மற்றும் நடித்தார் மற்றும் 2012 இல் அரசியல் திரில்லர் படமான ஆர்கோ[1] என்ற படத்தை இயக்கி நடித்தார், இரண்டுமே விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இதற்காக இவர் சிறந்த இயக்குனருக்கான கோல்டன் குளோப் விருது மற்றும் பாஃப்டா விருதையும், சிறந்த படத்திற்கான கோல்டன் குளோப், பாஃப்டா மற்றும் அகாதமி விருதையும் வென்றார். பின்னர் இவர் உளவியல் திரில்லர் படமான கான் கேர்ள் (2014), திரில்லர் படமான தி அக்கவுண்டன்ட் (2016), அதிரடி-சாகச படமான டிரிபிள் பிரான்டியர் (2019), விளையாட்டு நாடகப்படமான தி வே பேக் (2020) மற்றும் நகைச்சுவை நாடகப்படமான தி டெண்டர் பார் (2021) ஆகியவற்றில் நடித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட மீநாயகன் படங்களில் பேட்மேனை சித்தரித்து வெளியான பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் (2016),[2] ஜஸ்டிஸ் லீக் (2017) மற்றும் சாக் சினைடரின் ஜஸ்டிஸ் லீக் (2021) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
ஆரம்பகால வாழ்க்கை
தொகுஇவர் ஆகத்து 15, 1972 இல் கலிபோர்னியாவில்[3][4] உள்ள பெர்க்லேயில் முன்னாள் நடிகரான திமோதி பையர்ஸ் அஃப்லெக் மற்றும் தாயார் கிறிஸ்டோபர் அன்னே ஆகியோருக்கு மகனாக பிறந்தார். இவரது இளைய சகோதரர் நடிகர் கேசி அஃப்லெக் ஆவார்.[5] இவர் மிகவும் சிறுவயதில் இருக்கும் போது மாசச்சூசெட்ஸ்ற்கு குடிபெயர்ந்தனர்,[6] மேலும் 1984 ஆம் ஆண்டில் இவரது பெற்றோர்கள் விவாகரத்துப் பெற்றனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lane, Anthony (October 15, 2012). "Film Within a Film". The New Yorker. Archived from the original on October 18, 2014. பார்க்கப்பட்ட நாள் October 7, 2014.
- ↑ Itzkoff, Dave (March 14, 2016). "Ben Affleck's 'Broken' Batman". The New York Times இம் மூலத்தில் இருந்து January 12, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170112045054/https://www.nytimes.com/2016/03/20/movies/ben-affleck-batman-v-superman-dawn-of-justice-interview.html.
- ↑ Radloff, Jessica (February 15, 2015). "You Won't Believe Shonda Rhime's Method for Knowing Whether a Story Works". Glamour. Archived from the original on May 2, 2015. பார்க்கப்பட்ட நாள் March 27, 2015.
- ↑ Casey, Nora Sørena. "Ben Affleck – American actor, writer, and director". Encyclopædia Britannica (in ஆங்கிலம்). Archived from the original on August 23, 2017. பார்க்கப்பட்ட நாள் August 23, 2017.
- ↑ Morris, Wesley (September 15, 2010). "With New Film, Affleck Ties Boston Knot Tighter". Boston Globe இம் மூலத்தில் இருந்து July 14, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140714224355/http://www.boston.com/yourtown/boston/northend/articles/2010/09/15/with_new_film_affleck_ties_boston_knot_tighter/?page=full.
- ↑ McCarthy, Kevin (1997). "Cinezine – Frank Discussions With Ben Affleck". View Askew Productions. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் April 11, 2017.