புளூ பீட்டில்

புளூ பீட்டில் (ஆங்கில மொழி: Blue Beetle) என்பது 2023 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இப்படமானது இதே பெயரில் டிசி காமிக்சில் தோன்றிய கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு டிசி பிலிம்ஸ் மற்றும் தி சப்ரான் கம்பெனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு, வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் உலகம் முழுவதும் விநியோகிக்கப்பட்டது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் 14வது படம் ஆகும்.

புளூ பீட்டில்
இயக்கம்ஏஞ்சல் மானுவல் சோட்டோ
தயாரிப்பு
  • ஜான் ரிக்கார்ட்
  • ஜெவ் போர்மேன்
கதைகரேத் டன்னெட்-அல்கோசர்
இசைபாபி கிரிலிக்
நடிப்பு
  • சோலோ மரிடுவேனா
  • அட்ரியானா பர்ராசா
  • டாமியன் அல்காசர்
  • ரவுல் ட்ருஜிலோ
  • சூசன் சரண்டன்
  • ஜார்ஜ் லோபசு
ஒளிப்பதிவுபாவெல் போகோர்செல்ஸ்கி
படத்தொகுப்புகிரேக் ஆல்பர்ட்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 15, 2023 (2023-08-15)(எல் பாசோ, டெக்சாஸ்)
ஆகத்து 18, 2023 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்127 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$104–125 மில்லியன்
மொத்த வருவாய்$129.3 மில்லியன்

இத்திரைப்படத்தை ஏஞ்சல் மானுவல் சோட்டோ என்பவர் இயக்கியுள்ளார்[1] மற்றும் கரேத் டன்னெட்-அல்கோசர் எழுதியுள்ளார், மேலும் அட்ரியானா பர்ராசா, டாமியன் அல்காசர், ரவுல் ட்ருஜிலோ, சூசன் சரண்டன்[2] மற்றும் ஜார்ஜ் லோபசு ஆகியோருடன் சோலோ மரிடுவேனா என்பவர் ஜெய்ம் ரெய்ஸ் / புளூ பீட்டில் ஆக நடித்துள்ளார்.[3]

புளூ பீட்டில் படம், ஆகத்து 15, 2023 அன்று எல் பாசோவில் திரையிடப்பட்டது, ஆகத்து 18 அன்று வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் மூலம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இந்தத் திரைப்படம் பொதுவாக சாதகமான விமர்சனங்களைப் பெற்றது, ஆனால் வசூல் ரீதியாக தோல்வியுற்றது, இது $104–125 மில்லியன் தயாரிப்பு செலவில் எதிராக உலகளவில் $129 மில்லியனை வசூலித்தது மற்றும் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தில் மிகக் குறைந்த வசூல் செய்த படமாக ஆனது.[4][5][6]

கதை சுருக்கம்

தொகு

சமீபத்திய பட்டதாரி ஆனா ஜெய்ம் ரெய்சுக்கு எதிர்பாராத தருணத்தில் ஒரு வண்டு போன்ற நீல நிற பழங்கால நினைவுச்சின்னம் அதன் கூட்டுவாழ்க்கைத் தொகுப்பாளராகத் அவனை தேர்ந்தெடுத்த பிறகு, ‘புளூ பீட்டில்’ அவரின் உடலில் இணைந்து ஒரு கவசம்போன்று செயல்படுவகிறது, அது அவரது முதுகெலும்புடன் இணைகிறது மற்றும் அவருக்கு மனிதநேயமற்ற திறன்கள் மற்றும் ஒரு வெளிப்புற எலும்புக்கவசத்தை அளிக்கிறது. இந்த சக்தியால் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கு வரும் ஆபத்தில் இருந்து அவனையும் அவன் குடும்பத்தினரையும் எப்படி காப்பாற்றியது என்பது தான் கதை.

மேற்கோள்கள்

தொகு
  1. Davis, Clayton (August 2, 2023). "'Blue Beetle' Director Ángel Manuel Soto Talks Latino Resilience and Creating 'Cronenberg for Kids'". Variety. Archived from the original on August 2, 2023. பார்க்கப்பட்ட நாள் August 10, 2023.
  2. Nathaniel, Brail (September 8, 2022). "Blue Beetle: Susan Sarandon Reveals Film Will Be Partially in Spanish with Subtitles". ComicBook.com. Archived from the original on September 9, 2022. பார்க்கப்பட்ட நாள் October 2, 2022.
  3. Hibberd, James (September 1, 2022). "DC's New Superhero Xolo Maridueña on 'Blue Beetle,' 'Cobra Kai' and Keeping His Cool". The Hollywood Reporter. Archived from the original on September 2, 2022. பார்க்கப்பட்ட நாள் September 9, 2022.
  4. McGloin, Matt (2023-08-21). "Blue Beetle Squashed: Bombs With $25M Box Office" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
  5. Starner, Nina (2023-08-21). "The Real Reason Blue Beetle Bombed At The Box Office". Looper (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-09-18.
  6. Larasati, Dyah (2023-09-08). "'Blue Beetle' Budget Breakdown: Another Box Office Flop for DC?". Collider.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=புளூ_பீட்டில்&oldid=3854381" இலிருந்து மீள்விக்கப்பட்டது