ஆலன் கேய்ன்பெர்கு
ஆலன் கேய்ன்பெர்கு (ஆங்கில மொழி: Allan Heinberg) (பிறப்பு: சூன் 29, 1967) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வரைகதை புத்தக எழுத்தாளர் ஆவார். இவர் 2017 ஆம் ஆண்டு பாட்டி யென்கின்சு இயக்கியத்தில் வெளியான வொண்டர் வுமன் திரைப்படத்தின் திரைக்கதை எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.[1][2] அத்துடன் தி நேக்கட் ட்ரூத், பார்ட்டி ஆப் பைவ், செக்ஸ் அண்ட் தி சிட்டி, கில்மோர் கேர்ள்ஸ், தி ஓ.சி., கிரேஸ் அனாடமி, லுக்கிங் மற்றும் இசுகேன்டல் போன்ற தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை எழுதி மற்றும் தயாரித்துள்ளார்.
ஆலன் கேய்ன்பெர்கு | |
---|---|
பிறப்பு | சூன் 29, 1967 துல்சா, ஓக்லஹோமா, ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
இவர் மார்வெல் காமிக்ஸ் நிறுவனத்திற்காக யங் அவெஞ்சர்ஸ் மற்றும் அதன் தொடர்ச்சியான அவெஞ்சர்ஸ்: தி சில்ட்ரன்ஸ் குரூஸேட் ஆகியவற்றை ஜிம் ஜிம் சியூங் என்பவருடன் இணைந்து எழுதி மற்றும் உருவாக்கியுள்ளார்.[3] மேலும் டிசி காமிக்சுக்காக ஜே.எல்.ஏ என்ற வரைகதையை ஜெப் ஜான்சு உடன் இணைந்து எழுதியுள்ளார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுகேய்ன்பெர்கு சூன் 29, 1967 இல் துல்சா, ஓக்லஹோமாவில் ஒரு யூத[4] குடும்பத்தில் பிறந்தார். அதைத்தொடர்ந்து ஓக்லஹோமாவில் உள்ள புக்கர் டி. வாஷிங்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1989 ஆம் ஆண்டில் ஆண்டு யேல் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ MacKenzie, Carina Adly (2012-11-29). "The CW's 'Wonder Woman' pilot gets a twist: No more Diana Prince?". Archived from the original on 2012-12-01. பார்க்கப்பட்ட நாள் 2012-11-29.
- ↑ "Warner Bros. Pictures brings Hero's and Magic". July 11, 2016.
- ↑ Figuracion, Neil (2005-11-04). "Who The #*&% Is Allan Heinberg? - Part 3". Broken Frontier. Archived from the original on 2006-11-12. பார்க்கப்பட்ட நாள் 2007-05-24.
- ↑ Bloom, Nate (June 1, 2017). "Jews in the Newz". American Israelite.