கிரேஸ் அனாடமி (தொலைக்காட்சித் தொடர்)
கிரேஸ் அனாடமி என்பது (Grey's Anatomy) அமெரிக்காவில் பரவலாக பார்க்கப்படும் மருத்துவத்துறை தொடர்புள்ள ஓர் தொலைக்காட்சித் தொடர். வாஷிங்டன், சியாட்டிலில் உள்ளதாகப் புனையப்பட்ட சியாட்டில் கிரேஸ்-மெர்சி மருத்துவமனையில் மருத்துவக் கல்வி பெறும் பயிற்சி மருத்துவர்கள்,மாணவ மருத்துவர்கள் மற்றும் அவர்களது ஆசிரியர்களின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்டத் தொடராகும். இதன் முதல் நிகழ்வு "ஓர் கடினமான நாளின் இரவு" (A Hard Day's Night) மார்ச் 27,2005 அன்று ஏபிசி நிறுவனத்தால் ஒளிபரப்பப் பட்டது. அதுமுதல் ஆறு பருவங்கள் ஒளிபரப்பாயுள்ளன. ஏழாவது பருவத்தின் முதல் நிகழ்வு 23 செப்டம்பர்,2010 அன்று ஒளிபரப்பானது.[3]
கிரேஸ் அனாடமி | |
---|---|
வகை | மருத்துவ தொலைக்காட்சித்தொடர் நகைச்சுவை |
உருவாக்கம் | ஷோண்டா ரைம்ஸ் |
நடிப்பு | எல்லன் பொம்பியோ சாண்ட்ரா ஓ காதரீன் ஹைக்ல் ஜஸ்டின் சாம்பர்ஸ் டி.ஆர்.நைட் சந்திரா வில்சன் ஜேம்ஸ் பிக்கென்ஸ்,ஜூனியர் கேட் வால்ஷ் சாரா ராமிரேஸ் எரிக் டேன் கைலர் லே புரூக் ஸ்மித் கெவின் மக்கிட் ஜெசிகா காப்ஷா கிம் ராவர் ஜெஸ் வில்லியம்ஸ்[1] சாரா ட்ரூ[2] ஐசையா வாசிங்டன் பாட்ரிக் டெம்ப்சி |
கதைசொல்லி | எல்லன் பொம்பியோ (பெரும்பாலும்) |
முகப்பு இசை | சாப் |
முகப்பிசை | "Cosy in the Rocket" |
நாடு | ஐக்கிய அமெரிக்க நாடு |
மொழி | ஆங்கிலம் |
பருவங்கள் | 7 |
அத்தியாயங்கள் | 126 (list of episodes) |
தயாரிப்பு | |
நிருவாக தயாரிப்பு | ஷோண்டா ரைம்ஸ் பெட்சி பீர்ஸ் மார்க் கார்டன் கிரிஸ்டா வெர்னாஃப் ராப் கார்ன் மார்க் வில்டிங் எட்வர்ட் ஓர்னலாஸ் |
படப்பிடிப்பு தளங்கள் | லாஸ் ஏஞ்சலஸ் |
ஓட்டம் | 43 நிமிடங்கள் |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஏபிசி |
படவடிவம் | 480ஐ (சீர்தர வரையறை தொலைக்காட்சி) 720பி (உயர்தர வரையறைத் தொலைக்காட்சி) |
ஒலிவடிவம் | பிரிப்பிசை, டோல்பி எண்மருவி 5.1 |
ஒளிபரப்பான காலம் | மார்ச்சு 27, 2005 ஒளிபரப்பில் | –
Chronology | |
தொடர்புடைய தொடர்கள் | பிரைவேட் பிராக்டீஸ் தொலைக்காட்சித் தொடர் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
பலராலும் பாராட்டப்பட்டும் வணிக வெற்றியாகவும் திகழும் இத்தொடர் துவக்கத்தில் பாஸ்டன் லீகல் என்ற தொடரின் பருவங்களுக்கிடையேயான இடைவெளிக்காக தயாரிக்கப்பட்டது. முதல் நிகழ்விற்கே 16.25 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனை படைத்து[4] முதல் பருவ இறுதியில் 22.22 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருந்தது.[5] மூன்று எம்மி விருதுகளையும் இரண்டு கோல்டன் குளோப் விருதுகளையும் பெற்று முதன்மை நேரத்தில் காண்கின்ற தொலைக்காட்சித் தொடர்களில் மிகக் கூடுதலாக பார்க்கப்படும் தொடராக இருந்து வருகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Grey's Anatomy" Exclusive: Jesse Williams Gets Full-Time Upgrade பரணிடப்பட்டது 2010-06-09 at the வந்தவழி இயந்திரம், Entertainment Weekly, June 8, 2010
- ↑ Exclusive: "Grey's Anatomy" Promotes Sarah Drew பரணிடப்பட்டது 2012-10-27 at the வந்தவழி இயந்திரம், Entertainment Weekly, June 9, 2010
- ↑ Ellen Pompeo - News
- ↑ "Weekly Program Rankings". ஏபிசி Medianet. March 29, 2005. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.
- ↑ "Weekly Program Rankings". ஏபிசி Medianet. May 24, 2005. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.