ஜெப் ஜான்சு
ஜெப்ரி ஜான்ஸ் (ஆங்கில மொழி: Geoffrey Johns) (பிறப்பு: சனவரி 25, 1973) என்பவர் அமெரிக்க நாட்டு வரைகதை புத்தக எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர், திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர் ஆவார். இவர் டிசி காமிக்ஸ் கதாபாத்திரங்களான கிரீன் லன்டர்ன், அக்வாமேன், பிளாஷ் மற்றும் சூப்பர்மேன் ஆகியவற்றில் இவரின் பணி விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது.
ஜெப் ஜான்சு | |
---|---|
பிறப்பு | ஜெப்ரி ஜான்ஸ்[1] சனவரி 25, 1973 டிட்ராயிட், மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1997–இன்று வரை |
பணியகம் | டிசி என்டேர்டைன்மென்ட் (2010–2018) |
உறவினர்கள் | கர்ட்னி ஜான்ஸ் (சகோதரி) |
வலைத்தளம் | |
www |
இவர் 2010 முதல் 2018 வரை டிசி என்டர்டெயின்மென்ட்டின்[2] தலைமை கிரியேட்டிவ் அதிகாரியாக பணியாற்றினார் மற்றும் 2016 முதல் 2018 வரை தலைவராகவும் பணியாற்றினார்.[3] அத்துடன் டிசி பிலிம்ஸின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் இணைத் தலைவர் மற்றும் 2018 வரை டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முன்னாள் இணை இயக்குநராகவும் இருந்துள்ளார். இவர் கிரீன் லன்டர்ன்[4] (2011), பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ்[5] (2016), சூசைட் ஸ்க்வாட் (2016), வொண்டர் வுமன் (2017), ஜஸ்டிஸ் லீக்[6] (2017), ஷசாம்! (2019), பேர்ட்ஸ் ஆஃப் பிரே (2020) ஆகிய படங்களில் தயாரிப்பாளர் அல்லது நிர்வாக தயாரிப்பாளராகவும், அக்குவாமேன்[7] (2018) படத்திற்கான கதையை இணைந்து எழுதி தயாரித்தார் மற்றும் வொண்டர் வுமன் 1984 (2020) திரைப்படத்திற்கான திரைக்கதையையும் எழுதியுள்ளார். அத்துடன் பிளாஷ் (2014–), டைட்டன்ஸ், (2018–) மற்றும் டூம் பேட்ரோல் (2019–) ஆகிய தொலைக்காட்சி தொடர்களை இணைந்து உருவாக்கியுள்ளார் மற்றும் பேட்வுமன் (2019–), ஸ்டார்கர்ல் (2020–) என்ற தொடர்களை உருவாக்கி தயாரித்துள்ளார்.[8]
இவர் தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் நிர்வாகி என டிசி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனான இவரின் ஈடுபாடு, உலக பாக்ஸ் ஆபிஸில் $5.6 பில்லியனுக்கும் மேல் வசூலித்து. 2018 ஆம் ஆண்டில் டிசி என்டர்டெயின்மென்ட்டில் தனது நிர்வாகப் பொறுப்பில் இருந்து விலகினார், மேட் கோஸ்ட் புரொடக்சன்சு என்ற தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார், அதே நேரத்தில் வார்னர் புரோஸுடன் இணைந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் வரைகதை புத்தகத் தலைப்புகளை டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சம் மற்றும் பிற டிசி பண்புகளை அடிப்படையாகக் கொண்டு ஷசாம்! பியூரி ஒப் தி காட்சு (2022) போன்ற படங்களில் எழுதி தயாரிப்பதில் தொடர்ந்து பணியாற்றினார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Cronin, Brian (August 5, 2010). "Comic Book Legends Revealed #272". CBR.com. பார்க்கப்பட்ட நாள் February 7, 2019.
- ↑ McMillan, Graeme (July 27, 2016). "Geoff Johns Confirmed as DC Entertainment President". The Hollywood Reporter. பார்க்கப்பட்ட நாள் May 7, 2018.
- ↑ Hughes, Mark (December 7, 2017). "Jon Berg Moves Out Of Warner Leadership As Studio Reacts To DCEU Failures" (in en). Forbes. https://www.forbes.com/sites/markhughes/2017/12/07/jon-berg-moves-out-of-warner-leadership-as-studio-reacts-to-dceu-failures/#647c08c443a4.
- ↑ Cavna, Michael (June 16, 2011). "Riffing With Creators: Green Lantern writer-producer Geoff Johns waxes rhapsodic about Hollywood, Hal Jordan and his brightest days". The Washington Post இம் மூலத்தில் இருந்து July 5, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140705212811/http://www.washingtonpost.com/blogs/comic-riffs/post/riffing-with-creators-green-lantern-writer-producer-geoff-johns-waxes-rhapsodic-about-hollywood-hal-jordan-and-his-brightest-days/2011/06/15/AG8yYcXH_blog.html.
- ↑ "Jesse Eisenberg and Jeremy Irons Join the Cast of Warner Bros. Pictures' Untitled Superman/Batman Film from Director Zack Snyder". Business Wire. January 31, 2014. Archived from the original on April 13, 2014.
- ↑ Kit, Borys (May 17, 2016). "'Batman v. Superman' Fallout: Warner Bros. Shakes Up Executive Roles (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on June 20, 2016. பார்க்கப்பட்ட நாள் May 19, 2016.
- ↑ Kit, Borys (July 22, 2016). "Aquaman Movie Hooks Gangster Squad Writer (Exclusive)". The Hollywood Reporter இம் மூலத்தில் இருந்து August 11, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160811230852/http://www.hollywoodreporter.com/heat-vision/aquaman-movie-hooks-gangster-squad-913639.
- ↑ Gelman, Samuel (January 7, 2021). "Geoff Johns Working on Multiple DC Projects, Contradicting Ray Fisher's Claims". CBR.com.
{{cite web}}
: CS1 maint: url-status (link)