டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு
ஜான்சன் என்கிற டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு (ஆங்கில மொழி: David Leslie Johnson-McGoldrick) என்பவர் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர் , தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2009 ஆம் ஆண்டு வெளியான ஒர்பன்[1] என்ற திகில் திரைப்படத்தில் திரைக்கதை எழுத்தாளராக அறிமுகமானார், அதை தொடர்ந்து ரெட் ரைடிங் ஹூட் (2011), மர்மதேசம் 2 (2012), தி கன்ஜூரிங் 2 (2016) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார். அத்துடன் 2011 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகும் தி வாக்கிங் டெட் என்ற பிணன் வகை தொலைக்காட்சி தொடரிலும் எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.
டேவிட் லெஸ்லி ஜான்சன்-மெகோல்ட்ரிகு | |
---|---|
தேசியம் | அமெரிக்கர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகம் |
பணி | திரைக்கதை ஆசிரியர், தொலைக்காட்சி எழுத்தாளர், தொலைக்காட்சி தயாரிப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் |
இவர் 2018 ஆம் ஆண்டு முதல் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத் திரைப்படமான அக்வாமேன் என்ற படத்தில் இணை எழுத்தாளராக வில் பீல் உடன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளார். இந்த படத்தின் தொடர்சியான அக்வாமேன் அண்டு தி லோச்டு கிங்டோம்[2] (2023) என்ற படத்திலும் பணிபுரிந்துள்ளார்.
வாழ்க்கை
தொகுஜான்சன் தனது இரண்டாம் வகுப்பில் நாடகங்களை எழுதத் தொடங்கினார் மற்றும் ஓஹியோவின் லெக்சிங்டனில் உள்ள லெக்சிங்டன் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு தனது பத்தொன்பதாவது வயதில் தனது முதல் திரைக்கதையை எழுதினார். இவர் கொலம்பஸ் ஒகையோவில் உள்ள ஒகைய்யோ மாநிலப் பல்கலைக்கழகத்தில் பயின்றார், மேலும் புகைப்படம் மற்றும் திரைத்துறையில் நுண்கலை இளங்கலை பட்டம் பெற்றார்.
இவர் 1994 ஆம் ஆண்டு பிராங்க் டராபோன்ட்டின் இயக்ககத்தில் வெளியான த ஷாவ்ஷாங்க் ரிடெம்ப்சன் என்ற படத்தில் தயாரிப்பு உதவியாளராக தனது திரைத்துறை வாழ்க்கையைத் தொடங்கினார், இந்த படம் ஜான்சனின் சொந்த ஊரான ஒகையோவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மான்ஸ்பீல்டு சீர்திருத்தத் சிறையில் ஜான்சனின் தாத்தா சிறைக்காவலராக இருந்த இடத்தில் படமாக்கப்பட்டது. இவர் அடுத்த ஐந்து வருடங்களை டாராபாண்டின் உதவியாளராகக் பணி புரிந்தார், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி ஒரு திரைக்கதை எழுத்தாளராக தன்னை மேம்படுத்திக்கொண்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Esther Concocts A Tasty Treat For Mother In New Clip For ORPHAN: FIRST KILL". https://horrorcultfilms.co.uk/2022/08/esther-concocts-a-tasty-treat-for-mother-in-new-clip-for-orphan-first-kill/.
- ↑ ""Aquaman 2" mit Jason Momoa: Start, Besetzung, Handlung von "The Lost Kingdom"". https://www.tvspielfilm.de/news/filme/aquaman-2-mit-jason-momoa-start-besetzung-handlung-von-the-lost-kingdom,10982403,ApplicationArticle.html.