ஜொனாதன் மற்றும் மார்த்தா கென்டு

ஜொனாதன் மற்றும் மார்த்தா கென்டு என்கிற பா மற்றும் மா (ஆங்கில மொழி: Jonathan Kent and Martha Kent) என்பவர்கள் டிசி காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு கதாபாத்திரங்கள் ஆகும். இவர்கள் கன்சாஸின் கிராமப்புற நகரமான சிமால்வில்லில் வசிக்கின்ற சூப்பர்மேனின் வளர்ப்பு பெற்றோர்கள் ஆவார்கள்.[1] இவர்கள் சூப்பர்மேனின் தோற்றக் கதைகளின் பெரும்பாலான பதிப்புகளில் தோன்றுகிறார்கள். அதாவது சூப்பர்மேனின் சொந்த கிரகமான கிரிப்டனை அழித்ததைத் தொடர்ந்து பூமிக்கு வரும் இவரை ஒரு குழந்தையாக இவர்கள் காண்கிறார்கள் அன்றிலிருந்து இன்று வரை அவருக்கு தாய் மற்றும் தந்தையாக உள்ளனர். சிறிது காலத்திற்குப் பிறகு அவர்கள் அவரைத் தத்தெடுத்து கிளார்க் கென்ட் என்று மறுபெயரிட்டனர், "கிளார்க்" என்பது மார்த்தாவின் இயற்பெயர் ஆகும்.

ஜொனாதன் மற்றும் மார்த்தா கென்டு
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்டிசி காமிக்ஸ்
முதல் தோன்றியதுசூப்பர்மேன் #1 (ஜூன் 1939)
உருவாக்கப்பட்டதுஜெர்ரி சீகல்
ஜோ சஸ்டர்
கதை தகவல்கள்
உதவி செய்யப்படும் பாத்திரம்சூப்பர்மேன்
சுபேர்போய்

இவர்கள் பொதுவாக அன்பான பெற்றோராக சித்தரிக்கப்படுகிறார்கள், அவர்கள் கிளார்க்கிற்குள் ஒரு வலுவான தார்மீக திசைகாட்டியை வளர்க்கிறார்கள், மேலும் அவர்கள் கிளார்க்கை மனிதகுலத்தின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்த ஊக்குவிக்கிறார்கள். ஒரு சில கதை தொகுப்புகளில் கிளார்க்கின் மீநாயகன் உடையை உருவாக்குபவர் மார்த்தா ஆவார்.[2] சில முந்தைய தொடர்ச்சியில் கிளார்க்கின் உயர்நிலைப் பள்ளி பட்டம் பெற்ற சிறிது நேரத்திலேயே கென்ட்சு இறந்துவிடுகிறார். அதே போன்று வேறு கதை தொடர்ச்சியில் கிளார்க் வயது முதிர்ந்த பிறகும் அவர்கள் இருவரும் உயிருடன் இருக்கிறார்கள், சூப்பர்வில்லன் பிரைனியாக்கின் தாக்குதலின் போது ஜொனாதன் இறக்கும் வரை கென்ட்கள் துணைப் பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டது.

2011 இன் "தி நியூ 52" என்ற வரைகதை தொடரின் சூப்பர்மேன் வரைகதை தொகுப்பில் மார்த்தா ஒரு துணை பாத்திரமாக இருக்கிறார், அதில் அவரும் அவரது கணவரும் குடிபோதையில் ஓட்டுனரால் கொல்லப்பட்டனர். பின்னர் 2019 இல் 'டிசி மறுபிறப்பு' என்ற வரைகதை புத்தகத்தில் இவர்கள் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுகின்றனர்

1978 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்மேன்: தி மூவியில் கிளென் போர்டு மற்றும்பிலிஸ் தாக்ஸ்டர் ஆகியோர் ஜொனாதன் மற்றும் மார்தாவாக நடித்தனர். பின்னர் அன்னெட் ஓ'டூல் மற்றும் ஜான் ஷ்னீடர் ஆகியோர் 2001 ஆம் ஆண்டு ஒளிபரப்பான சிமால்வில் என்ற தொடரில் ஜோடியாக நடித்தனர். நடிகை ஈவா மேரி செயிண்ட் என்பவர் 2006 ஆம் ஆண்டு வெளியான சூப்பர்மேன் ரிட்டர்ன்சு என்ற திரைப்படத்தில் மார்தாவாக நடித்தார். கெவின் கோஸ்ட்னர் மற்றும் டயான் லேன் ஆகியோர் டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்ச படத்தில் ஜொனாதன் மற்றும் மார்தா கென்ட் ஆகியோரை சித்தரிக்கின்றனர்.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Fleisher, Michael L. (2007). The Original Encyclopedia of Comic Book Heroes, Volume Three: Superman. New York City: DC Comics. pp. 118–123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4012-1389-3.
  2. Greenberger, Robert; Pasko, Martin (2010). The Essential Superman Encyclopedia. New York City: Del Rey Books. pp. 157–160. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-345-50108-0.
  3. Freydkin, Donna (April 28, 2015). "Diane Lane is an earth mother in 'Batman v Superman'". USA Today. http://entertainthis.usatoday.com/2015/04/28/diane-lane-embodies-mother-earth-in-batman-v-superman/.