பியூ பிளின்

அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளர்

பியூ பிளின் (ஆங்கில மொழி: Beau Flynn) (பிறப்பு: மார்ச்சு 23, 1970) என்பவர் அமெரிக்க நாட்டு திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் நடிகர் டுவெயின் ஜான்சன் என்பவர் நடித்த ஹெர்குலிஸ்: த திரசியன் வோர்ஸ் (2014), சான் ஆன்ட்ரியாஸ் (2015), ஸ்கைஸ்கிராப்பர் (2018) மற்றும் ராம்பேஜ்[1] (2018) போன்ற வெற்றித் திரைப்படங்களை தயாரித்ததற்காக மிகவும் பிரபலமானவர். இவர் 2001 ஆம் அண்டு திரைப்பட நடிகை மார்லி ஷெல்டனை[2] திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.[3][4][5]

பியூ பிளின்
பிறப்புமார்ச்சு 23, 1970 (1970-03-23) (அகவை 54)
மயாமி, ஐக்கிய அமெரிக்கா
பணிதிரைப்படத் தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1994–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
மார்லி ஷெல்டன் (தி. 2001)
பிள்ளைகள்2

தொழில்

தொகு

இவர் ஆரம்பத்தில் தயாரிப்பாளர் ஸ்காட் ருடினின் நிர்வாக உதவியாளராக இருந்தார். பின்னர் 1996 ஆம் ஆண்டு முதல் ஜான்சு என்ற திரைப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். இவர் 18 ஆண்டுகளுக்கும் மேலாக அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் மற்றும் தயாரிப்பாளர்கள் கில்ட் ஆப் அமெரிக்காவின் உறுப்பினராகவும் உள்ளார்.

இவரது சொந்த அசல் யோசனையின் அடிப்படையில் சான் ஆன்ட்ரியாஸ் என்ற படம் 2015 ஆம் ஆண்டு வெளியானது. இது நியூ லைன் சினிமா மற்றும் வார்னர் புரோஸ். நிறுவனங்களில் 2015 ஆம் ஆண்டின் மிகவும் வெற்றிகரமான திரைப்படமாகும், அத்துடன் உலகளவில் $475 மில்லியன் வசூலித்தது. அதை தொடர்ந்து ஜர்னி டு தி சென்டர் ஆப் தி எர்து (2008), தி ரைட் (2011), ஜர்னி 2: தி மிஸ்டீரியசு ஐலேண்ட் (2012), ஹன்ஸல் அண்ட் க்ரேடெல் (2013) மற்றும் பேவாட்சு (2017) போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.[6]

மேற்கோள்கள்

தொகு
  1. "Rampage (2018) (2018) - Box Office Mojo". www.boxofficemojo.com. பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.
  2. Eng, Joyce (September 8, 2009). "It's a Girl for Marley Shelton". TV Guide. https://www.tvguide.com/News/Marley-Shelton-Welcomes-1009509.aspx. 
  3. http://www.eonline.com/news/marley_shelton_welcomes_another_baby/313047.html[தொடர்பிழந்த இணைப்பு]
  4. "FILE: Marley Shelton Welcomes Daughter Ruby Jeanne". Yahoo News. 2 May 2012. Archived from the original on 11 November 2014. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014.
  5. "Marley Shelton Welcomes Daughter Ruby". usmagazine.com. 1 May 2012. பார்க்கப்பட்ட நாள் 26 November 2014.
  6. Fleming, Mike Jr. (11 June 2018). "Gal Gadot To Star With Dwayne Johnson In 'Red Notice'". பார்க்கப்பட்ட நாள் 10 August 2018.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூ_பிளின்&oldid=3489774" இலிருந்து மீள்விக்கப்பட்டது