ஸ்கைஸ்கிராப்பர் (2018 திரைப்படம்)

ஸ்கைஸ்கிராப்பர் (Skyscraper) என்பது வெளிவர இருக்கின்ற அமெரிக்க அதிரடி பேரழிவு திரில்லர் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ராசன் எம்.தர்பர் எழுதி இயக்கியிள்ளார். இப்படத்தில் டுவெயின் ஜான்சன், நீவ் காம்ப்பெல், சின் ஹான், ரோலண்ட் மோல்லர், பப்லோ ஸ்கிராபெர், பைரன் மான், ஹன்னா குவின்லிவன், நோவா டெய்லர் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு 2017 செப்டம்பரில் கனடாவின் பிரித்தானிய கொலம்பியாவின் வன்கூவரில் தொடங்கியது. இது 2018 சூலை 13 அன்று யுனிவர்சல் பிக்சர்சால் 2டி மற்றும் 3டி இல் வெளியிடப்பட உள்ளது.

ஸ்கைஸ்கிராப்பர்
Skyscraper
இயக்கம்ராசன் எம்.தர்பர்
தயாரிப்பு
  • பேவ் ஃப்ளைன்
  • டுவைன் ஜான்சன்
  • ஹிராம் கார்சியா
கதைராசன் எம்.தர்பர்
இசைஸ்டீவ் ஜாப்லன்ஸ்ஸ்கி
நடிப்பு
  • டுவெயின் ஜான்சன்
  • நீவ் காம்ப்பெல்
  • இங் சின் ஹான்
  • ரோலண்ட் மோல்லர்
  • பாப்லோ ஸ்க்ரிபீர்
  • பைரன் மான்
  • ஹன்னா கின்னிவன்
  • நோவா டெய்லர்
ஒளிப்பதிவுராபர்ட் எல்விட்
படத்தொகுப்புமைக்கேல் சால்
கலையகம்
விநியோகம்யுனிவர்சல் ஸ்டுடியோஸ்
வெளியீடுசூலை 13, 2018 (2018-07-13)(US)
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்

கதைச்சுருக்கம்

தொகு

ஹாங்காங்கில் புதியதாக வானளாவும் புதிய கட்டிடம் ஒன்று உருவாகிறது. இந்தக் கட்டிடத்தின் தலைமை பாதுகாப்பு அலுவலராக எஃப்.பி.ஐயில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியான ட்வைன் ஜான்சன் பொறுப்பேற்று, தன் குடும்பத்துடன் தங்குகிறார். "தி பெர்ல்" என்று அறியப்படும் இந்த வானளாவிய கட்டிடமானது பல மாடிகளைக் கொண்டதாக உள்ளது. கட்டிடத்தின் பாதுகாப்புக் குறைபாடுகளை கண்டறிந்து நிர்வாகத்திடம் இவர் முறையிட்டதை முதலாளிகள் ரசிக்கவில்லை ஒரு நாள் அந்தக் கட்டிடத்தில் ஊடுருவும் தீவிரவாதிகளால் 96-வது தளத்தில் தீ மூளுகிறது. இதனால் தீ கட்டிடம் நெடுகப் பரவுகிறது. இந்தப் பழியானது ஜான்சன் மீது சுமத்தப்பட்டு ஜான்சனை காவல்துறை ஒருபக்கம் விரட்ட, மறுபக்கம் தீப்பிடித்து எரியும் கட்டிடத்துக்குள் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் போராடி, அதேசமயம் எரியும் தளத்தில் சிக்கிய தனது குடும்பத்தையும் காப்பாற்றப் போராடுகிறார்.

நடிகர்கள்

தொகு
  • டுவெயின் ஜான்சன் - எப்.பி.ஐ யில் பணிபுரிந்த முன்னாள் அதிகாரியும், வானளாவியின் தலைமை பாதுகாப்பு அலுவலரான வில் சியர்.
  • நேஃப் கேம்ப்பெல் - வில் சியரின் மனைவி
  • சின் ஹான் - ஜாவோ மி ஜீ
  • ரோலண்ட் மொல்லெர்
  • பாப்லோ ஸ்க்ரிபீர்
  • பைரன் மன் - ஆய்வாளர் வூ
  • ஹன்னா குவின்லிவன்
  • நோவா டெய்லர்
  • ஜேன்சன் டே[1] - குன்மேன் 1
  • பைரன் லாசன்
  • எல்ஃபினா லூக் - சார்ஜந்த் ஹான்

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு