த டார்க் நைட் ரைசஸ்

ஆங்கிலத் திரைப்படம்
(த டார்க் நைட் ரைசஸ் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

த டார்க் நைட் ரைசஸ் (ஆங்கில மொழி: The Dark Knight Rises) 2012 இல் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்கத் திரைப்படமாகும். கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவன், எம்மா தாமஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்டு கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்டது. கிரிஸ்டியன் பேல், மைக்கேல் கேயின், கேரி ஓல்ட்மன், டாம் ஹார்டி, அன் ஹாத்வே, மரியன் கோடில்லர்ட், ஜோசப் கார்டன்-லெவிட், மார்கன் ஃபிரீமன் ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். கிறிஸ்டோபர் நோலன் ஆல் இயக்கப்பட்ட பேட்மேன் பிகின்ஸ் மற்றும் த டார்க் நைட் ஆகியத் திரைப்படங்களின் தொடர்ச்சியாக இத்திரைப்படம் வெளிவந்தது. இத்திரைப்படம் நோலன் இயக்கும் பேட்மேன் திரைப்படங்களின் இறுதித் திரைப்படம் ஆகும்.

த டார்க் நைட் ரைசஸ்
The Dark Knight Rises
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்கிறிஸ்டோபர் நோலன்
தயாரிப்புகிறிஸ்டோபர் நோலன்
சார்லஸ் ரோவன்
எம்மா தாமஸ்
மூலக்கதைபாப் கேன் இன் புதினம்.
(கதாப்பாத்திரங்கள் மட்டும்
திரைக்கதைகிறிஸ்டோபர் நோலன்
ஜோனதன் நோலன்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்புகிரிஸ்டியன் பேல்
மைக்கேல் கேயின்
கேரி ஓல்ட்மன்
டாம் ஹார்டி
அன் ஹாத்வே
மரியன் கோடில்லர்ட்
ஜோசப் கார்டன்-லெவிட்
மார்கன் ஃபிரீமன்
ஒளிப்பதிவுவால்லி பிஸ்தர்
படத்தொகுப்புலீ சிமித்
கலையகம்சின்காபி மற்றும் லெசெண்டரி பிக்சர்சு
விநியோகம்வார்னர் சகோதரர்கள்
வெளியீடுசூலை 20, 2012 (2012-07-20)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுஐஅ$230 மில்லியன் (1,644.9 கோடி)[1]
மொத்த வருவாய்ஐஅ$1.084 பில்லியன் (7,752.3 கோடி)[2]

த டார்க் நைட் ரைசஸ் திரைப்படம் நியூயார்க்கில் சூலை 16, 2012 அன்று முன்னோட்டம் காட்டப்பட்டது.[3] சூலை 19, 2012 இல் ஆத்திரேலியாவிலும் நியூசிலாந்திலும்,[4] சூலை 20, 2012இல் வட அமெரிக்காவிலும் ஐக்கிய இராச்சியத்திலும் இந்தியாவிலும் வெளியானது.[5][6] மற்ற நாடுகளிலும் பகுதிகளிலும் வெவ்வேறு நாட்களில் வெளியானது.[7] அமெரிக்காவின் கொலராடோ மாநிலத்தின் டென்வரில் அரோரா என்றவிடத்தில் இரவுக்காட்சியின்போது துப்பாக்கி ஏந்திய ஒருவன் 12 பேரை சுட்டுக் கொன்றான்; சிறுவர் உட்பட 58 பேர் காயமடைந்தனர்.[8] இந்தத் துப்பாக்கிச் சூட்டை அடுத்து வார்னர் பிரதர்ஸ் தனது மற்றசில முன்னோட்டக் காட்சிகளை இரத்து செய்ததுடன் தனது சந்தைப்படுத்தலையும் மாற்றிக் கொண்டுள்ளது.[9]

கதாப்பாத்திரங்கள்

தொகு

த டார்க் நைட்டில் கூறப்பட்டவை நடந்து எட்டு ஆண்டுகளாகி விட்ட நிலையில் காத்தம் நகரில் அமைதி நிலவுகிறது. காவல் துறை ஆணையர், டென்ட் சட்டத்தால் வழங்கப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு சட்ட ஒழுங்கை நிறுவுகிறார். டென்ட் செய்த குற்றங்களை மறைத்து, அவனை மக்கள் மனதில் ஒரு முன்மாதிரி ஆக்கிவிட்ட போதும், ஆணையர் கோர்டன் தவறு செய்து விட்டதாக வருந்துகிறார். டென்டின் நினைவு விழாவில் இதை சொல்ல வந்தும், பின்னர் இது சமயமல்ல என்று சொல்லாது விட்டுவிடுகிறார். அவ்விழாவில் கடத்தப்பட்ட ஆட்சியாளர் ஒருவரை தேடி செல்லும் போது கோர்டன் பேனால் சுடப்படுகிறார்; அவர் உண்மையை கூறவென்று எழுதி வைத்திருந்த உரை தீயவனான பேன் கைகளில் சிக்குகிறது. மருத்துவமனையிலுள்ள கோர்டன் ப்ளேக்கை பதவியுயர்த்தி, அவரிடம் நேரடியாக அறிவிக்கும் உரிமையையும் வழங்குகிறார்.

பாட்மானை பலகாலம் காத்தம் நகர் காணவில்லை, புருசு வெயின் தன் அறையிலேயே அடைந்து கிடக்கிறார். வெயின் அணுக்கருப் பிணைவை பயன்படுத்தும் ஒரு தூய சக்தி திட்டத்தில் முதலிட்ட போதும் அது தீயோரின் கைகளில் சிக்கினால் அணுக்குண்டாக மாற்றப்பட்டலாம் என அறிந்து அதை நிறுத்திவிட்டார். இதனால்,வெயின் என்டர்பிரைசோ வியாபாரத்தில் வீழ்ச்சி காண்கிறது. மேலும், புருசு இது எல்லாம் அவரது தொழில் எதிரி யோன் தாகட் தன்னை வீழ்த்தவே பேன் என்பானை பணியமர்த்தியுள்ளார் என்று எண்ணுகிறார். பேன் பங்குச் சந்தையில் குழப்பம் ஏற்படுத்தும் போது, புருசு வெயின் அதை தடுக்க முனைகிறார். அல்பிரட் பாட்மானாக மீண்டும் மாறுவது தீங்கே என்று சொல்லி அறிவுரை கூறி அவனை விட்டு செல்கிறார். செல்லு முன், ரேச்சல் புருசை காதலிக்கவில்லை என்றும், டென்டையே திருமணம் செய்யவிருந்தாள் என்றும் கூறிச் செல்கிறார்.

செலினா கைலைத் தொடர்ந்து பேனை எதிர்கொள்கிறார் பாட்மான். பேன் தானே லீக் ஒஃப் சாடோசின்(League of Shadows) தற்போதைய தலைவர் என்றும்,யோன் தாகட்டை தான் பகடைக் காயாகக் கொண்டு பாட்மானின் படைக் கொட்டிலைச் சூறையாடிவிட்டேன் என்றும் கூறி, பாட்மானையும் அடித்து சிறையிலடைக்கிறான். சிறையிலுள்ளோர் தேவையும், மனத்திட்பமும் கொண்ட ஒரேயொரு சிறுபிள்ளை மட்டுமே அந்தச் சிறையிலிருந்து தப்பியுள்ளதாகக் கூறுகின்றனர்.

நகரின் காவல் துறையினரை பேன் நிலத்துக்கு கீழ் ஏமாற்றி வரச்செய்து வெளியேறவியலாதவாறு சிக்கவைக்கிறான். வெயின் என்டர்பிரைசின் அணுக்கரு வினையி கைப்பற்றப்பட்டு வெடிகுண்டாக மாற்றப்பட்டு , யாரும் வெளியேற எத்தனித்தால் அது வெடிக்கப்படும் என்றும் கூறப்பட்டு நகரிலுள்ளவர்கள் வெளியேறாதிருக்குமாறு செய்யப்படுகிறது. டென்டின் கபடத்தை அரங்கேற்றும் பேன், டென்ட் சட்டத்தின் மூலம் சிறையிலடைக்கப்பட்ட குற்றவாளிகளை வெளிக் கொண்டுவருகிறான். நகரின் அதிகார வர்க்கத்தினர் வீதியில் இழுத்துவந்து, நீதிமன்றத்தில் கிரேன் தலைமையில் விசாரணையும் நடத்தப்பட்டு, நாடுகடத்தல், மரணம் ஆகிய இரண்டுக்கிடையில் தெரிவு செய்ய கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். காத்தம் நகரில் வன்முறை வெடிக்கிறது, சட்ட ஒழுங்கு சீர்குலைகிறது. தடுக்க வந்த சிறப்புப் படையினரும் தாக்கப்பட காத்தம் நகரை அரசு சூழடைப்புச் செய்கிறது.

சிறையிலிருந்து தப்பிக்கும் புருசு, மற்றையோரையும் அழைத்துக் கொண்டு வெடிகுண்டு வெடிக்காமல் தடுக்கும் முயற்சியில் இறங்குகிறான். பாட்மான் பேனினை எதிர்கொள்கிறான். இந்த சமயத்தில், அவனுடன் இது வரையிலும் கூடவே இருந்த மிராண்டா அவனைத் தாக்குகிறாள். இறந்த ராசு அல் கூளின் மகள் அவளே என்றும், சிறையிலிருந்து தப்பித்தது ஒரு சிறுமி என்றும், அது அவளே என்றும் அடுக்கடுக்காக உண்மைகள் வெளிவருகின்றன. அவள் வெளியேற உறுதுணையாக இருந்தவனே பேன் என்றும், அதனாலே காயம் பட்டான் என்றும் எல்லாம் வெட்ட வெளிச்சமாக்கப்படுகின்றன. கோர்டன் குண்டை தொலைவிலிருந்து இயக்கவியலாதவாறு செய்கிறான்; செலினா கைல் பேனைக் கொல்கிறாள்; இதற்கிடையில் குண்டை அவர்களிடம் சிக்க விடாமல் வண்டியில் கொண்டு செல்லும் மிராண்டா/ தாலியாவை பாட்மான் துரத்திச் செல்கிறான். மிராண்டா வண்டி அடிபட்டு கொல்லப்படுகிறாள். குண்டை அதற்கான அறைக்கு கொண்டு சென்றால் நிலைப்படுத்தலாம் என்று பாட்மான் எண்ணியிருந்த போதும், கூடவே இருந்து அனைத்தையும் கற்றுக் கொண்ட மிராண்டா, அந்த அறையை அதற்கு தக்கதல்லாதாக ஆக்கிவிட்டாள் என்ற உண்மையை அவள் சாகும் முன் சொல்லக் கேட்டு அறிந்து கொள்கிறான். இதனால் பாட்மான் குண்டை ஒரு உலங்கு வானூர்தியால் இழுத்துச் செல்லவும், நடுக்கடலில் குண்டு வெடிக்கிறது.

உலகே பாட்மான் இறந்து விட்டதாக நம்புகிறது. ஆனால் அல்பிரட் இத்தாலிய விடுதி ஒன்றில் புருசையும், செலினையும் ஒன்றாகக் காண்கிறார், பெருமகிழ்வடைகிறார். பாட்மானின் குகையை பிளேக் பெறுகிறார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Fritz, Ben; Kaufman, Amy (July 17, 2012). "'The Dark Knight Rises' tracking is huge". Los Angeles Times இம் மூலத்தில் இருந்து July 26, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120726024718/http://www.latimes.com/entertainment/envelope/cotown/la-et-ct-dark-knight-rises-tracking-avengers-20120716,0,4678609.story. 
  2. "The Dark Knight Rises (2012)". Box Office Mojo. Archived from the original on April 5, 2017. பார்க்கப்பட்ட நாள் December 14, 2012.
  3. Sacks, Ethan; Lestch, Corrine (16 July 2012). "'Dark Knight Rises' premiere: Christian Bale, Anne Hathaway, Joseph Gordon-Levitt, Marion Cotillard and Gary Oldman grace 'black carpet' of AMC Loews Lincoln Square theater". Daily News (New York) (New York). http://www.nydailynews.com/entertainment/tv-movies/dark-knight-rises-premiere-christian-bale-anne-hathaway-joseph-gordon-levitt-marion-cotillard-gary-oldman-grace-red-carpet-amc-loews-lincoln-square-theater-article-1.1115780. பார்த்த நாள்: 17 July 2012. 
  4. "Australian release date for The Dark Knight Rises". 19 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2012. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. Itzkoff, Dave (30 June 2010). "A Man and His Dream: Christopher Nolan and 'Inception'". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 5 ஜனவரி 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140105012419/http://artsbeat.blogs.nytimes.com/2010/06/30/a-man-and-his-dream-christopher-nolan-and-inception/. பார்த்த நாள்: 12 June 2010. .
  6. McNary, Dave (3 May 2010). "Batman sets date". Variety (magazine). http://www.variety.com/article/VR1118018621.html. பார்த்த நாள்: 26 July 2010.  WebCitation archive.
  7. "The Dark Knight Rises – Worldwide Theatrical Release Dates". Jabcat On Movies. 18 March 2012. Archived from the original on 2012-08-21. பார்க்கப்பட்ட நாள் 2012-07-20.
  8. Frosch, Dan; William K. Rashbaum; Timothy Williams; Michael S. Schmidt (20 July 2012). "12 Killed in Shooting at Colorado Theater". The New York Times. http://www.nytimes.com/2012/07/21/us/colorado-mall-shooting.html?_r=1&hp. பார்த்த நாள்: 20 July 2012. 
  9. "'Dark Knight Rises' Paris premiere scrapped following U.S. shootings - msnbc.com Entertainment". Archived from the original on 2012-07-22. பார்க்கப்பட்ட நாள் 2012-07-21.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_டார்க்_நைட்_ரைசஸ்&oldid=4104684" இலிருந்து மீள்விக்கப்பட்டது