சூப்பர் மேன் (2013 திரைப்படம்)

(மேன் ஆப் ஸ்டீல் (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மேன் ஆஃப் ஸ்டீல்[1] (ஆங்கில மொழி: Man of Steel) என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க - ஐக்கிய இராச்சிய[2] நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது டிசி காமிக்ஸ் வரைகதையில் தோன்றிய சூப்பர் மேன் என்ற கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்டு வார்னர் புரோஸ். பிக்சர்ஸ், லெஜென்டரி என்டர்டெயின்மென்ட், டிசி என்டர்டெயின்மென்ட் மற்றும் சின்காபி இன்க். ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ளது. இது டிசி நீட்டிக்கப்பட்ட பிரபஞ்சத்தின் முதலாவது திரைப்படம் ஆகும்.

மேன் ஆஃப் ஸ்டீல்
Superman, bearing his traditional red and blue costume, is shown flying towards the viewer, with the city Metropolis below. The film's title, production credits, rating and release date is written underneath.
இயக்கம்சாக் சினைடர்
தயாரிப்புகிறிஸ்டோபர் நோலன்
சார்லஸ் ரோவேன்
எம்மா தாமஸ்
டெபோரா சினைடர்
மூலக்கதைடிசி காமிக்ஸ்
திரைக்கதைடேவிட் எஸ்.கொயர்
இசைஹான்ஸ் சிம்மர்
நடிப்பு
ஒளிப்பதிவுஅமீர் மோக்ரி
படத்தொகுப்புடேவிட் ப்ரென்னர்
கலையகம்
விநியோகம்வார்னர் புரோஸ். பிக்சர்ஸ்
ஓட்டம்143 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஐக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$225–258 மில்லியன்
மொத்த வருவாய்$668 மில்லியன்

கிறிஸ்டோபர் நோலன், சார்லஸ் ரோவேன், எம்மா தாமஸ் மற்றும் டெபோரா சினைடர் ஆகியோர் தயாரிக்கும் இந்த படத்திற்கு டேவிட் எஸ்.கொயர் என்பவர் திரைக்கதை எழுத சாக் சினைடர்[3] என்பவர் இயக்கத்தில் ஹென்றி கவில், ஏமி ஆடம்சு, மைக்கேல் ஷானோன், டயான் லேன், கெவின் கோஸ்ட்னர், லாரன்ஸ் பிஷ்பர்ன், ஆன்ட்ஜே ட்ரூ, அய்லெட் ஜூரர், கிறிஸ்டோபர் மேலோனி மற்றும் ரசல் குரோவ் போன்ற பலர் நடித்துள்ளார்கள்.

மேன் ஆஃப் ஸ்டீல் என்பது சூப்பர்மேன் திரைப்படத் தொடரின் மீள் உருவாக்கம்[4] ஆகும். இது சூப்பர்மேன் கதாபாத்திரத்தின் மூலக் கதையை சித்தரிக்கிறது. இப்படமானது ஜூன் 14, 2013 அன்று வார்னர் புரோஸ். பிக்சர்ஸ் என்ற நிறுவனம் மூலம் 2டி, 3டி மற்றும் ஐமாக்ஸில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது, உலகளவில் 668 மில்லியன் டாலர்களை வசூலித்தது. இந்த படத்தின் தொடர்சியாக பேட்மேன் வி சூப்பர்மேன்: டவுன் ஆஃப் ஜஸ்டிஸ் என்ற படம் மார்ச் 25, 2016 அன்று வெளியானது.

தமிழகத்தில் 180 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டது. இயக்குநர் ராம நாராயணனின் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தினை வெளிவிட்டது.

கதை சுருக்கம்

தொகு

உலகத்தைப் போலவே கிரிப்டான் கிரகத்திலும் மனிதர்கள் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் மனிதர்களை விட புத்திசாலிகள். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அவர்கள் தங்களை சுற்றியுள்ள கிரகங்களை அடிமைப்படுத்துகிறார்கள். செயற்கையாக இனப்பெருக்கம் செய்பவர்களாக இருக்கிறார்கள். முதன் முறையாக அந்த கிரகத்தின் முக்கிய பதவியில் இருப்பவர் இயற்கையாக ஒரு வாரிசை உருவாக்குகிறார்.

அந்த கிரகம் அழியத் தொடங்கும்போது தன் குழந்தையை, பறக்கும் கப்பலில் வைத்து பூமிக்கு அனுப்புகிறார். இங்கு வரும் குழந்தை ஒரு விவசாயி வீட்டில் வளர்கிறது. அபூர்வ சக்திகள் நிறைந்த அக் குழந்தையை தன் சக்தியை வெளிப்படுத்தாமலேயே வளர்க்கிறார். அபார சக்தி மிக்கவன், வேற்று கிரகத்தைச் சேர்ந்தவன் என்று தெரிந்தால் உலகம் அவனை ஏற்றுக் கொள்ளாது என்று நினைக்கிறார். கிரிப்டான் கிரகத் தளபதி, அந்த கிரக மக்களை வேறுகிரகத்தில் குடியமர்த்த திட்டமிட்டு சூப்பர்மேனைத் தேடி பூமிக்கு வருகிறார். கிளார்க், எப்படி அந்த வில்லனை வென்று சூப்பர் மேனாக உருவாகிறான் என்பதுதான் மீதி திரைப்படம்.

நடிகர்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Man of Steel (2013)". British Film Institute. Archived from the original on March 10, 2016. பார்க்கப்பட்ட நாள் July 10, 2015.
  2. "Man of Steel". British Board of Film Classification. May 21, 2013. Archived from the original on November 4, 2014. பார்க்கப்பட்ட நாள் July 10, 2015.
  3. Wilkins, Alasdair (March 21, 2011). "Zack Snyder explains to us why his Superman movie will be the most realistic yet". i09. Archived from the original on June 15, 2016. பார்க்கப்பட்ட நாள் June 3, 2013.
  4. Moore, Bo (March 18, 2011). "Kevin Costner Joins Zack Snyder's Superman Reboot". Paste. Archived from the original on August 25, 2011. பார்க்கப்பட்ட நாள் August 4, 2011.
  5. "Henry Cavill to Play Superman!!". Superhero Hype!. January 30, 2011. Archived from the original on December 24, 2019. பார்க்கப்பட்ட நாள் January 30, 2011.
  6. Singh, Anita (January 30, 2011). "Another British superhero: Henry Cavill to play Superman". The Daily Telegraph இம் மூலத்தில் இருந்து February 1, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110201050747/http://www.telegraph.co.uk/news/picturegalleries/celebritynews/8291749/Another-British-superhero-Henry-Cavill-to-play-Superman.html. 
  7. Doty, Meriah (May 8, 2013). "Superman's Weakness: Henry Cavill Reveals the New Kryptonite in 'Man of Steel'". Yahoo!. Archived from the original on December 24, 2019. பார்க்கப்பட்ட நாள் May 12, 2013.
  8. Vilkomerson, Sara (March 27, 2011). "Amy Adams to play Lois Lane in 'Superman'" இம் மூலத்தில் இருந்து September 22, 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150922162809/http://www.ew.com/article/2011/03/27/amy-adams-lois-lane-superman. 

வெளி இணைப்புகள்

தொகு